“CAMPA” மற்றும் ஈடுசெய்யும் காடு வளர்ப்பு என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) ₹13.86 கோடியை தவறாகப் பயன்படுத்தியதாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) அறிக்கை சில நாட்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டியது.


2019-2022 காலகட்டத்தில் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் (சமீபத்திய தணிக்கை அறிக்கை, உத்தரகாண்டின் வனப் பிரிவுகளால் ஈடுசெய்யும் காடு வளர்ப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.


நிதி கிடைத்த ஒரு வருடத்திற்குள் அல்லது இரண்டு வளரும் பருவங்களுக்குள் காடு வளர்ப்பு செய்யப்பட வேண்டும் என்று CAMPA வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. இந்த அறிக்கை 37 வழக்குகளில் சிக்கல்களைக் கண்டறிந்தது. இந்த வழக்குகளில், 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுசெய்யும் காடு வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இறுதி அனுமதி பெற்ற பிறகும் இது நடந்தது.


முக்கிய அம்சங்கள்:


1. காடுகள் மதிப்புமிக்க இயற்கை வளங்கள் ஆகும். அவை பல சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகின்றன. இவற்றில் கார்பன் பிரித்தெடுத்தல், நிரை மறுசுழற்சிப்படுத்துதல் மற்றும் மண் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். வளர்ச்சி மற்றும் தொழில்துறை தேவைகள் காரணமாக, காடுகள் அளிக்கப்படுகின்றன. இது அதிகாரப்பூர்வ மொழியில் கூறப்படுவது போல், "காடுகள் அல்லாத பிற விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது" என்று அழைக்கப்படுகிறது.


2. காடு வளர்க்கப்பட்ட நிலம் உடனடியாக காடாக மாறாது. மரங்கள் வளர்ந்து நன்மைகளை வழங்க சில காலம் தேவைப்படும். இந்த தாமதம் வனப் பொருட்கள் மற்றும் சேவைகளை இழக்க வழிவகுக்கிறது. இவற்றில் மரம், மூங்கில், எரிபொருள் மரம் மற்றும் விதை பரவல் ஆகியவை அடங்கும். ஒரு புதிய காடு இதே போன்ற நன்மைகளை வழங்க குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் ஆகும். இந்த தாமதத்தை ஈடுசெய்ய, சட்டம் 50 ஆண்டுகளுக்கு இழந்த காடுகளின் நிகர தற்போதைய மதிப்பை (Net Present Value (NPV)) கணக்கிட வேண்டும் என்று கோருகிறது. வன நிலத்தைப் பயன்படுத்தும் பயனர் நிறுவனங்கள் (User agencies) இந்தத் தொகையை செலுத்த வேண்டும்.


3. பயனர் நிறுவனங்கள் (User agencies) என்று அழைக்கப்படும் தனியார் நிறுவனங்கள், தாங்களாகவே காடு வளர்ப்பை மேற்கொள்வதில்லை. அதற்கு பதிலாக, மாநில அரசு அந்த பணியை மேற்கொள்கிறது. இருப்பினும், பயனர் நிறுவனம் முழு செலவையும் ஏற்க வேண்டும். இதில் காடு வளர்ப்புக்கான நிலத்தை வாங்குவதும் அடங்கும். காடு வளர்ப்புக்குப் பிறகு, மாநில அரசு நிலத்தை பராமரிப்புக்காக வனத்துறையிடம் ஒப்படைக்கிறது.


4. எனவே, ஒரு நிறுவனம் வன நிலத்தை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த விரும்பினால், புதிய மரங்களை நடுவதற்கு பணம் செலுத்த வேண்டும். நிகர தற்போதைய மதிப்பு (NPV) மற்றும் சில கூடுதல் கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.


5. CAMPA இந்தப் பணத்தைக் கையாள உருவாக்கப்பட்டது. வன நிலத்தைப் பயன்படுத்தும் நிறுவனம் அல்லது நிறுவனத்திடமிருந்து காடு வளர்ப்பு இழப்பீட்டுப் பணம் மற்றும் NPV-ஐ மாநில அரசு சேகரிக்கிறது. இந்தப் பணம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படுகிறது. பின்னர், ஒன்றிய அரசு அதை மரங்களை நடவு செய்வதற்காக அல்லது தொடர்புடைய திட்டங்களுக்காக மாநில அரசுக்கு திருப்பி அனுப்புகிறது.


6. இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதிச் சட்டம், (Compensatory Afforestation Fund Act 2016) ஒன்றிய அளவில் தேசிய இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தையும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் மாநில இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தையும் அமைத்தது. இது ஒரு தேசிய இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதியையும் (Compensatory Afforestation Fund (CAF)) உருவாக்கியது மற்றும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் தனித்தனி மாநில இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதிகளையும் உருவாக்கியது.


7. 1980களில் இருந்து ஈடுசெய்யும் காடு வளர்ப்பு என்ற யோசனை இருந்து வருகிறது. இது வனப் பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act of 1980) 1980-லிருந்து  உருவானது. இது வன நிலத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முன்பு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறுவதை கட்டாயமாக்கியது. 1990-கள் மற்றும் 2000-களில் கோதவர்மன் வழக்கின் விசாரணைகளின்போது உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மூலம் இது நடைமுறைபடுத்தப்பட்டது.


1996-ஆம் ஆண்டு, ஓய்வுபெற்ற வன அதிகாரியான கோதவர்மன் திருமுல்பாட் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். பின்னர், நீதிமன்றம் வன நிலத்தின் அர்த்தத்தை விரிவுபடுத்தியது. இப்போது, ​​அரசாங்க பதிவுகளில் காடாக பதிவு செய்யப்பட்ட எந்தவொரு நிலமும், அது யாருடையது அல்லது எப்படி வகைப்படுத்தப்பட்டது என்பதைப் பொருட்படுத்தாமல், காடாகக் கருதப்பட்டது. சேதமடைந்த காடுகளை மீட்டெடுக்க பணம் செலுத்தவும் தீர்ப்பில் கோரப்பட்டது. இந்த தீர்ப்புகள் CAMPA-ஐ நிறுவ உதவியது.


8. மாநிலங்கள் பயனர் நிறுவனங்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து தேசிய இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதியில் (Compensatory Afforestation Fund (CAF)) செலுத்துகின்றன. பின்னர், இந்தப் பணம் மாநில CAF-களுக்கு அவர்களின் உரிமையின்படி வரவு வைக்கப்படுகிறது. இருப்பினும், மாநிலங்கள் தங்கள் பங்கில் 90% மட்டுமே பெறுகின்றன. மீதமுள்ள 10% நிர்வாகச் செலவுகளுக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது.


வன உரிமைகள் சட்டம் (Forest Rights Act, 2006)


1. 2006-ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் வன உரிமைகளை அங்கீகரித்தல் சட்டம் (Recognition of Forest Rights) Act), வன நிலம் மற்றும் வன வளங்கள் மீதான அவர்களின் வரலாற்று உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலம் பழங்குடியினர் மற்றும் வனவாசி சமூகங்களுக்கு அதிகாரம் வழங்கியது.


2. பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் வலைத்தளத்தின்படி, வன உரிமைகள் சட்டமானது சுய சாகுபடி மற்றும் வாழ்விட உரிமைகளை வழங்கியது. இவை பொதுவாக தனிநபர் உரிமைகளாகக் கருதப்படுகின்றன; மேய்ச்சல், மீன்பிடித்தல் மற்றும் காடுகளில் நீர்நிலைகளை அணுகுதல் போன்ற சமூக உரிமைகள், பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களுக்கான (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) வாழ்விட உரிமைகள் மற்றும் நிலையான பயன்பாட்டிற்காக எந்தவொரு சமூக வன வளத்தையும் பாதுகாக்க, மீண்டும் உருவாக்க அல்லது நிர்வகிக்கும் உரிமை ஆகியவை அடங்கும். இது சமூகத்தின் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேம்பாட்டு நோக்கங்களுக்காக வன நிலத்தை ஒதுக்குவதற்கான உரிமைகளையும் வழங்குகிறது.


3.  இந்தச் சட்டம் கிராம சபை மற்றும் உரிமையாளர்கள் பல்லுயிர் மற்றும் வனவிலங்குகள், காடுகள், நீர்நிலைகள் மற்றும் பிற உணர்திறன் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு பொறுப்பானவர்கள் என்று கூறுகிறது. மேலும், இந்த வளங்கள் அல்லது பழங்குடி மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பாதிக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை நிறுத்த அவர்கள் கடமைப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம், பழங்குடி சமூகத்தை பாதிக்கும் உள்ளூர் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து முக்கியமான முடிவுகளை எடுப்பதில் கிராம சபைக்கு உதவும் அதிகாரத்தை வழங்குகிறது.




Original article:

Share: