ஒன்றியத்திலிருந்து வழங்கப்பட்ட சட்டம், மாநிலங்களின் முழுமையான சட்டங்களை விட அதிக அதிகாரத்தைக் கொண்டிருக்கக்கூடாது.
பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) அதன் வரைவு விதிமுறைகள் (draft regulations) குறித்து கருத்து தெரிவிக்க ஒரு வாரத்திற்கும் குறைவான காலக்கெடு மீதமுள்ள நிலையில், பாஜக ஆளாத மாநிலங்களின் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு மாநாட்டில், கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகியவை விதிமுறைகளை கடுமையாக எதிர்த்தன. இந்த விதிகள் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும், மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சியைக் கட்டுப்படுத்தும் என்று அவர்கள் வாதிட்டனர்.
இது இரண்டாவது கூட்டம் ஆகும். முதலாவது பெங்களூருவில் நடந்தது, அங்கு இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் பங்கேற்றன. அதே நேரத்தில், பஞ்சாப் மாநிலம் ஆதரவு தெரிவித்தன. தமிழ்நாடு மற்றும் கேரளாவில், முக்கிய எதிர்க்கட்சிகள்கூட ஆளும் கட்சிகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில பிராந்திய கட்சிகள் தனிப்பட்ட முறையில் கவலைகளை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை (Vice-chancellor) தேர்ந்தெடுப்பதிலும் நியமிப்பதிலும் கூடுதல் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் யுஜிசியின் திட்டம் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. தேடல் மற்றும் தேர்வுக் குழுக்களில் (search-cum-selection committees) வேந்தர் (பொதுவாக ஆளுநர்), யுஜிசி தலைவர் மற்றும் பல்கலைக்கழக சிண்டிகேட் அல்லது செனட் ஆகியோரின் பரிந்துரையாளர்கள் இடம்பெறுவார்கள் என்று இந்த புதிய விதிகள் முன்மொழிகின்றன. இந்த நிபுணர் குழுக்களை உருவாக்குவதற்கு அவை பொறுப்பாக இருந்தபோதிலும், இந்த மாற்றம் மாநில உயர்கல்வித் துறைகளை செயல்முறையிலிருந்து நீக்குகிறது.
பின்னர் இந்தக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று முதல் ஐந்து பெயர்களைக் கொண்ட குறுகிய பட்டியலில் இருந்து வேந்தர் அவர்கள் துணைவேந்தரை நியமிப்பார். இந்த அமைப்பு "தெளிவின்மையை நீக்கி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது" (eliminates ambiguity and ensures a more transparent process) என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதேஷ் குமார் கூறுகிறார். இருப்பினும், இந்த அதிகார மையப்படுத்தலை மாநிலங்கள் எதிர்க்கின்றன. இது பல மாநில பல்கலைக்கழகங்களை, குறிப்பாக தமிழ்நாட்டில் தலைமை இல்லாமல் இருப்பதைச் செய்துள்ளது.
புதிய விதிமுறைகள் கல்வித் தரத்தை பலவீனப்படுத்தும், வணிகமயமாக்கலை அதிகரிக்கும் மற்றும் கல்வியில் அதிக அரசியலைக் கொண்டுவரும் என்று சிலர் வாதிடுகின்றனர். ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைப்பது குறைந்துவிடும் என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள். இதே நேரத்தில், மாநிலங்கள் மற்றொரு கவலையை எழுப்பியுள்ளன. அரசு நடத்தும் உயர்கல்விக்கான பெரும்பாலான நிதிச் சுமையை அவர்கள் இன்னும் சுமந்து கொண்டிருக்கும்போது, பல்கலைக்கழக நிர்வாகத்திலிருந்து அவர்கள் ஏன் விலக்கப்படுகிறார்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்.
கல்விக்கு அப்பால், ஒரு பெரிய அரசியலமைப்பு பிரச்சினை உள்ளது. இது மத்திய-மாநில உறவுகளை கேள்விக்குள்ளாக்குகிறது. மத்திய சட்டத்தின் (central law) கீழ் மத்திய அரசால் இயற்றப்பட்ட விதிகள் ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மீற முடியுமா?
இந்த சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்கள் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு உயர் மட்டக் குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளன. அவர்கள் நீதிமன்றத்தில் இந்த புதிய சட்ட வரைவு தொடர்பாக சில விதிமுறைகளை சவால் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இது பிரச்சினை அரசியல் ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும் மாறி வருவதைக் காட்டுகிறது. இந்த கவலைகளை யுஜிசி புறக்கணிக்கக்கூடாது. புதிய விதிமுறைகளை இறுதி செய்வதற்கு முன், கூட்டாட்சி எதிர்ப்பு விதிகளை வரைவில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.