தண்டனை குறைப்புக்கான சட்டம் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• சில வகையான குற்றவாளிகளுக்கு விதிவிலக்குகளுடன், பாரதிய நியாய சுரக்ஷா சன்ஹிதா, 2023 (Bharatiya Nyaya Suraksha Sanhita (BNSS)) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (Code of Criminal Procedure (CrPC)) ஆகிய சட்டங்களின் கீழ், தண்டனை முடிவதற்கு முன்பே கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு.


• நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, "மறுபரிசீலனையில்: ஜாமீன் வழங்குவதற்கான கொள்கை மற்றும் உத்தி குறித்த" (In Re: Policy Strategy for Grant of Bail) வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியது. சிறைகளில் நெரிசல் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிக்க நீதிமன்றமே 2021-ல் தொடங்கிய ஒரு தானாக முன்வந்த வழக்கு இது.


• உச்ச நீதிமன்றம் தண்டனைக் குறைப்பை எவ்வாறு கையாள்கிறது என்பதை இந்த தீர்ப்பு மாற்றியது. 2013-ஆம் ஆண்டு முதல் இரண்டு தனித்தனி தீர்ப்புகளில், மாநிலங்கள் தாங்களாகவே தண்டனைகளைக் குறைக்க முடியாது என்றும், கைதிகள் முதலில் தண்டனைக் குறைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


உங்களுக்குத் தெரியுமா?:


• தண்டனை குறைப்புக்கான சட்ட அதிகாரம் (power of remission) என்பது ஒரு குற்றத்தில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு தண்டனைக் காலத்தைக் குறைக்கும் அதிகாரத்தைக் குறிக்கிறது. பாரதிய நியாய சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின், பிரிவு 473 (மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432) மாநில அரசாங்கங்களுக்கு "எந்த நேரத்திலும்" தண்டனைகளை குறைக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. தண்டனையிலிருந்து விடுதலை அளிப்பதற்கு முன் நிபந்தனைகளை நிர்ணயிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு. 

நிபந்தனைகளை விதிக்கலாமா வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்யலாம். குற்றவாளி வழக்கமான இடைவெளியில் ஒரு காவல்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கலாம்.


—இந்த நிபந்தனைகளில் ஏதேனும் பூர்த்தி செய்யப்படாவிட்டால், மாநிலங்கள் வழங்கப்பட்ட தண்டனை விலக்கை ரத்து செய்து, பிடியாணை (warrant) இல்லாமல் குற்றவாளியை மீண்டும் கைது செய்யலாம் என்று விதி கூறுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவுகள் கீழ் தண்டனைகளைக் குறைக்கும் குடியரசுத்தலைவர்   மற்றும் ஆளுநரின் அதிகாரத்திலிருந்து வேறுபட்டது.


• மாநில அரசாங்கத்தின் தண்டனை விலக்கு அதிகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் ஒன்றை BNSS-ன் பிரிவு 475 (மற்றும் CrPC இன் பிரிவு 433A)-ன் கீழ் காணலாம். ஆயுள் தண்டனை அனுபவித்து மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்திற்காக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கும்வரை அரசு அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது.


• BNSS-ன் பிரிவு 475 மற்றும் CrPC-ன் பிரிவு 433A ஆகியவை விடுதலை வழங்குவதற்கான மாநிலத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகின்றன. ஆயுள் தண்டனை அனுபவித்து மரண தண்டனைக்குரிய குற்றத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட குற்றவாளிகளுக்கு, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிக்கும் வரை அரசு அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது.


• ஒரு குற்றவாளி அரசாங்கத்திற்கு விண்ணப்பிக்கும்போது தண்டனை விலக்கு தொடங்குகிறது என்று BNSS மற்றும் CrPC கூறுகின்றன. இருப்பினும், பெரும்பாலான மாநிலங்கள் தகுதி நிபந்தனைகளை பரிந்துரைக்கும் நிவாரணக் கொள்கைகளைக் கொண்டிருப்பதால், நிவாரண விண்ணப்பம் எப்போது அவசியமில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




• தேசிய குற்றப் பதிவுப் பணியகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளில் 131.4% கைதிகள் உள்ளனர். மொத்த கொள்ளளவு 4,36,266-ஆக இருந்த நிலையில், 5,73,220 கைதிகள் உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் இந்த எண்ணிக்கையைக் குறைக்கக்கூடும். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான கைதிகள் (75.8%) இன்னும் விசாரணைக் கைதிகளாகவே தங்கள் வழக்குகளில் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கின்றனர்.




Original article:

Share: