இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) பீகாரில் நடந்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது.
பீகாருக்குப் பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) இப்போது 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடங்கியுள்ளது. அதன் கூறப்பட்ட இலக்கு தெளிவானது — அடிக்கடி இடம்பெயர்வு, இறந்த வாக்காளர்கள் மற்றும் பிற தவறுகள் காரணமாக பாதிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிப்பது - இவை அரசியல் கட்சிகளால், குறிப்பாக காங்கிரஸால் சுட்டிக்காட்டப்பட்டவை. இருப்பினும், பீகாரில் கிடைத்த அனுபவம், திட்டமிடப்பட்டபடி இந்த செயல்முறை கணிசமான எண்ணிக்கையிலான மக்களின் வாக்குரிமையை பறிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
இது மிகக் குறுகிய காலக்கெடுவில் நடத்தப்பட்டது — கணக்கெடுப்புக்கு ஏறக்குறைய ஒரு மாதம் மற்றும் உரிமைகோரல்கள் (claims) மற்றும் ஆட்சேபனைகளைக் கையாள (objections) மற்றொரு மாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம், விசாரணை மற்றும் சரிபார்ப்புக்காக 54 நாட்களுக்கு "அறிவிப்பு காலம்" முறையாக வழங்கப்பட்டுள்ளது. பீகாரில் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை இறுதி வாக்காளர்ப் பட்டியலில் வெளிப்படையான புள்ளிவிவர முரண்பாடுகளை உருவாக்கியது. பாலின விகிதம் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முந்தைய பட்டியலில் பீகாரில் 1,000 ஆண்களுக்கு பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 907-ல் இருந்து 892-ஆகக் குறைந்துள்ளது.
இது சமீபத்திய கணக்கெடுப்புத் தரவுகளைவிட மிகக் குறைவான எண்ணிக்கையாகும். 2024-ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்களைவிட அதிகமான பெண்கள் வாக்களித்த இடங்களில், பல பெண்கள் - 18 முதல் 29 வயதுடையவர்கள் - "நிரந்தரமாக மாற்றப்பட்டதாக" கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நியாயமற்ற முறையில் (disproportionately) நீக்கப்பட்டனர். பொதுவாக, அதிகமான பெண்கள் வாக்களித்து, புதிய வாக்காளர்கள் குறைவாகப் பதிவானால், பல ஆண்கள் வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளனர் என்று அர்த்தமாகிவிடும். குறைந்த பதிவுடன் ஒப்பிடும்போது அதிக பெண் வாக்குப்பதிவு பொதுவாக ஆண் இடம்பெயர்வைக் குறிக்கிறது. இருப்பினும் "சாதாரணமாக வசிக்காத" (ordinarily resident) புலம்பெயர்ந்தோரை அகற்றுவதற்கான SIR-இன் நோக்கம் இருந்தபோதிலும் அதிகமான பெண்கள் நீக்கப்பட்டனர்.
இந்த முரண்பாடுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடைமுறை கட்டமைப்பில் அடிப்படையாகவே உள்ளதாகத் தெரிகிறது. சரிபார்ப்பின் முதன்மைப் பொறுப்பு தேவையற்ற வகையில் வாக்குசாவடி அதிகாரிகளைத் (Booth Level Officers) தாண்டி, குடிமக்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் — வாக்குசாவடி முகவர்கள் (Booth Level Agents) — பொறுப்பு அதிகமாக சுமத்தப்படுகிறது. அரசியல் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது.
ஏனெனில் அவர்கள் தேர்தல்களில் வெற்றி பெறுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். விட்டுப் போன யாரும் வாக்குசாவடி அதிகாரிகளின் உதவியுடன் மீண்டும் பதிவு செய்யலாம் போன்ற அசாதாரணங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் பதிலின்மை போதுமானதல்ல. இருப்பினும், இந்த செயல்முறை போதுமானதாக இருக்காது. உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் அனைத்து விலக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலையும் காரணங்களுடன் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது சில திருத்தங்களுக்கு வழிவகுத்தது. ஒரு திருத்தப்பட்ட மாதிரி இப்போது பெரிய அளவில் பின்பற்றப்படுகிறது. வாக்குசாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று முறை சென்று பார்வையிடுவதற்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், சட்டப்படி "சாதாரணமாக வசிப்பவர்களாக" இருந்தபோதிலும், கணக்கெடுப்பு சாளரத்தின் போது (enumeration window) இல்லாத தற்காலிக குடியேறிகள் (temporary migrants) தங்கள் வாக்கை இழக்கலாம்.
இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்வு, வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் படிவத்தை (Enumeration Form) இணைய வழியில் நிரப்ப அனுமதிப்பது போதுமான நடவடிக்கையாக இல்லை. இந்த விதி டிஜிட்டல் பிளவு (digital divide) மற்றும் சான்றிதழ் சவால்களை புறக்கணிக்கிறது. வாக்குசாவடி அலுவலரின் உதவியைப் பெற உடல் ரீதியாக பாதிப்படைந்துள்ள வாக்காளர்கள் மீது தேவையற்ற சுமையை இந்த செயல்முறை ஏற்படுத்துகிறது. இந்தப் பயிற்சி நடைபெறும்போது, இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டை பாதிக்காதவாறு, குடிமை சமூகம், ஊடகங்கள் மற்றும் கட்சிகள் தீவிர விழிப்புடன் இருக்க வேண்டிய கடமை உள்ளது.