கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறையை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) இந்திய கார்பன் சந்தையுடன் இணைப்பது ஒரு முக்கியமான படியாகும். இருப்பினும், இன்னும் பல சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது.
செப்டம்பர் 17, 2025 அன்று, ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் தங்கள் கூட்டமைப்பில் ஒரு புதிய விரிவான இராஜதந்திர செயல்திட்டத்தை வகுத்தன. இதில், புதிய இராஜதந்திர ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா செயல்திட்டம் (New Strategic EU-India Agenda) என்று அழைக்கப்படும் இது, அவர்களின் கூட்டமைப்பை மேம்படுத்தப்படும் ஐந்து முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது. அவை, செழிப்பு மற்றும் நிலைத்தன்மை (prosperity and sustainability), தொழில்நுட்பம் மற்றும் புதுமை (technology and innovation), காவல் மற்றும் பாதுகாப்பு (security and defence) இணைப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் (connectivity and global issues), மற்றும் இவை யாவற்றிலும் செயல்முறைப் படுத்துதல் (enablers across these pillars) போன்றவை ஆகும். சுத்தமான மாற்றம் குறித்த பிரிவில், ஒரு முக்கியமான அறிக்கை உள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியம் இந்திய கார்பன் சந்தையை (Indian Carbon Market (ICM)) கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறையுடன் (Carbon Border Adjustment Mechanism (CBAM)) இணைக்கும் என்று அது கூறுகிறது.
குறிப்பிடும்படியாக, இந்தியாவில் செலுத்தப்படும் கார்பன் விலைகள் ஐரோப்பிய ஒன்றிய எல்லையில் உள்ள கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) வரிவிதிப்புகளிலிருந்து கழிக்கப்படும். இது ஒரு பெரிய திருப்புமுனையாகும். இது இந்திய ஏற்றுமதியாளர்கள் கார்பன் வெளியேற்றத்திற்காக இரண்டு முறை வரி வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க உதவும் மற்றும் ஆரம்பகால கார்பன் நீக்கத்தை (decarbonisation) ஊக்குவிக்கும். இருப்பினும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இன்னும் கடுமையான தடைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், இந்த ஒருங்கிணைப்பு எதிர்பார்த்த பலன்களைத் தராமல் போகலாம்.
வளர்ச்சியடையாத இந்திய கார்பன் சந்தை
இந்தியாவின் கார்பன் வரவு வர்த்தகத் திட்டம் (Carbon Credit Trading Scheme (CCTS)), பொதுவாக இந்திய கார்பன் சந்தை (Indian Carbon Market (ICM)) என்று குறிப்பிடப்படுகிறது. இது இன்னும் ஒரு வளர்ச்சியடைந்து வரும் கட்டமைப்பாகும். இது இருபதாண்டு கால வலுவான ஏல அமைப்பு, தெளிவான வரம்பு அமைக்கும் செயல்முறைகள் மற்றும் சுதந்திரமான சரிபார்ப்பு ஆகியவற்றைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் (EU) கார்பன உமிழ்வு வர்த்தக அமைப்பு (Emissions Trading System (ETS)) போலல்லாமல், இந்தியாவின் திட்டம் பகுதியளவாக அடித்தளங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வரவுகள் பெரும்பாலும் தீவிர மேம்பாடுகள் அல்லது திட்ட அடிப்படையிலான சமநிலைப்படுத்துதலை அடிப்படையாகக் கொண்டவை. அவை முழுமையான உமிழ்வு வரம்புகளுடன் இணைக்கப்படவில்லை, இந்திய கார்பன் சந்தை (ICM) எதிர்காலத்தில் இதை அடைய நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM), பொருட்களில் உட்பொதிக்கப்பட்ட கார்பனை டன்னுக்கு ஒரு டன் கணக்கில் கணக்கிட வேண்டும். சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட வரம்புகள் மற்றும் விதிமீறல்களுக்கு கடுமையான தண்டனைகள் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒழுங்குமுறையாளர்கள் இந்திய வரவுகளை நம்பகத்தன்மை குறைந்ததாகவோ அல்லது "இரண்டாம் தரமாக" கருதுவார்கள்.
சந்தை ஒருமைப்பாட்டை உறுதிசெய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திரமான ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது கார்பன் உமிழ்வு பதிவேடுகளுக்கு இணையான தற்போதைய நிறுவன அமைப்பு இந்தியாவில் இல்லை. உண்மையில், அடிப்படையான அமைப்பு சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை வழங்குகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கையுடன் இல்லாவிட்டால், அது இந்திய கார்பன் விலைகளை "குறைக்க" முடியாது. இந்த நிறுவன இடைவெளியைக் குறைப்பது ஒரு தொழில்நுட்ப தீர்வாகாது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உமிழ்வு வர்த்தக அமைப்பின் (ETS) உடன்பாட்டு-தர அம்சங்களை (compliance-grade features) பிரதிபலிக்கும் வகையில் இந்திய கார்பன் சந்தையின் (ICM) கட்டமைப்பு மறுவடிவமைப்பு இதற்கு தேவைப்படுகிறது. இந்தியாவின் தற்போதைய அதிகாரத்துவ அமைப்பு மற்றும் புரிதலைக் கருத்தில் கொண்டு, விரைவில் இவ்வளவு பெரிய மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம்.
கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) தெளிவான மற்றும் கடுமையான கார்பன் விலையையும் நம்பியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உமிழ்வு வர்த்தக அமைப்பில் (ETS), விலையானது டன்னுக்கு €60 முதல் €80-க்கு இடையில் நிர்ணயிக்கிறது. இந்தியாவில், ஆரம்பகால கார்பன் வரவு விலைகள் €5 மற்றும் €10 வரம்பில் உள்ளன. கார்பன் விலைகள் ஒரே மாதிரியாக இல்லாவிட்டால் மற்றும் துறைகளில் சமமாகப் பயன்படுத்தப்பட்டால், ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளர்கள் எல்லையில் சிறிதளவு அல்லது விலக்கு அளிக்க மாட்டார்கள்.
இந்த நிலைமை இன்னும் மோசமாகலாம். இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்திய இணக்கச் செலவு மற்றும் முழு ஐரோப்பிய ஒன்றியம் (EU) கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) வரி இரண்டையும் செலுத்த வேண்டியிருக்கும். இது இந்தியாவிற்குள் அரசியல் அழுத்தத்தை உருவாக்குகிறது. இதில் தொழில்கள் "இரட்டைச் சுமையாக" பார்க்கக்கூடும். மேலும் இந்திய கார்பன் சந்தையின் (ICM) கீழ் இந்தியாவின் கார்பன் சந்தை விதிகளை பலவீனப்படுத்த வற்புறுத்தலாம். விலை இடைவெளியைக் குறைக்க, இந்தியாவிற்கு குறிப்பிட்ட துறைகளுக்கான இலக்கு கார்பன் ஒப்பந்தங்கள் அல்லது கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) அளவுகளுடன் பொருந்தக்கூடிய குறைந்தபட்ச கார்பன் விலை தேவைப்படும். இந்த இரண்டு தீர்வுகளும் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்துவது கடினம்.
கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறையின் (Carbon Border Adjustment Mechanism (CBAM)) அடிப்படை இயல்பு
தொழில்நுட்ப மற்றும் விலை சிக்கல்கள் தீர்க்கப்பட்டாலும், கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் சர்வதேச உரையாடல்களில் இதை ஒருதலைபட்சமான மற்றும் பாதுகாப்புவாத நடவடிக்கை என்று தொடர்ந்து எதிர்த்துள்ளன. எனவே, இந்தியாவின் கார்பன் சந்தைக்கும் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறைக்கும் (CBAM) இடையிலான இணைப்பை ஒப்புக்கொள்வது, இந்தியா முறையாக எதிர்த்த ஒரு செயல்முறையை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஒரு அரசியல் முரண்பாட்டை உருவாக்குகிறது.
இந்தப் பதற்றம் மீண்டும் சர்ச்சைகளில் வெளிப்படும். உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்தியாவின் கார்பன் விலை "போதுமானதாக இல்லை" என்று கருதி முழு விலக்குகளையும் மறுத்தால், இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மேலும், இந்தியா அரசியல்ரீதியாகவோ அல்லது சட்டப்பூர்வமாகவோ பிரச்சினையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். கார்பன் விலை நிர்ணயம் என்பது ஒரு உள்நாட்டு கொள்கை கருவியாக இருப்பதால் இறையாண்மைரீதியில் பிரச்சினையும் உள்ளது.
ஆனால், கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) இந்தியாவின் நடவடிக்கைகள் "போதுமானவை" என்பதில் பிரஸ்ஸல்ஸுக்கு ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. அதன் கொள்கை சுதந்திரத்தை மதிக்கும் ஒரு நாட்டிற்கு, இது ஒரு தீவிர கவலையாக மாறக்கூடும். வர்த்தகச் சட்டத்திற்கு அப்பால், இந்தியா ஒரு நிலையான, வெளிப்படையான கார்பன் சந்தையைப் பராமரித்தால் மட்டுமே கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) விலக்குகள் செயல்படும் ஒரு இராஜதந்திர ரீதியில் ஆபத்து உள்ளது. எந்தவொரு உள்நாட்டு அரசியல் பின்னடைவும், எடுத்துக்காட்டாக, தொழில்துறை அழுத்தத்தின்கீழ் இணக்கத்தைத் திரும்பப் பெறுவது, ஏற்றுமதியாளர்களை உடனடியாக முழு கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) செலவுகளுக்கு ஆளாக்கும், வர்த்தக ஓட்டங்களை சீர்குலைக்கும். குறிப்பாக, இந்த இணைப்பு உலக வர்த்தக அமைப்பு (WTO) சட்டங்களுக்கு மட்டுமல்ல, உள்நாட்டு அரசியல் பொருளாதாரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) -இந்தியா இடையேயான நம்பிக்கையின் அளவையும் சார்ந்துள்ளது.
நம்பிக்கையான தீர்மானங்களைப் பார்ப்பது
இந்திய கார்பன் சந்தை மற்றும் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) இணைப்பு, இரண்டு பெரிய உலகப் பொருளாதாரங்களின் இராஜதந்திர செயல்திட்டத்தின்கீழ் மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இது செயல்பட்டால், இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்கிறது, தொழில்துறை கார்பன் நீக்கத்தைத் தீவிரப்படுத்துகிறது. மேலும், வடக்கு-தெற்கு கார்பன் சந்தை ஒத்துழைப்புக்கான ஒரு மாதிரியை உருவாக்குகிறது.
ஆனால், பலவீனமான உள்நாட்டுக் கட்டமைப்பு, தவறாக சீரமைக்கப்பட்ட கார்பன் விலைகள் மற்றும் அரசியல் வேறுபாடுகள் இந்த திட்டத்தை தோல்வியடையச் செய்யலாம். இன்னும் விரிவான ஒத்துழைப்புக்கு ஒரு அடிப்படை காரணம் உள்ளது. இந்தியா தனது சந்தை வடிவமைப்பை வலுப்படுத்த முடியும். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒரு சுமுகமான மாற்றத்திற்கான தெளிவு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும். இல்லையெனில், இந்த "முன்னேற்றம்" காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில், இந்திய ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து எல்லைச் செலவுகளைச் சந்திக்க நேரிடும்.
ஷஷாங்க் பாண்டே ஒரு வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர், சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் காலநிலை நிதி குறித்து பணியாற்றி வருகிறார்.