சந்தை மதிப்பீட்டிலிருந்து விலகிச் செல்வது மக்களை அதிக ஆபத்துக்களை எடுக்க ஊக்குவிக்கும்.
சந்தையுடன் இணைக்கப்பட்ட தயாரிப்புகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், தேசிய ஓய்வூதிய முறை (National Pension System (NPS)) கடந்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து, ₹15 லட்சம் கோடிக்குமேல் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கிறது. இந்தியர்கள் வலுவான ஓய்வூதிய நிதியை உருவாக்க வேண்டியிருப்பதால், சில சந்தை அபாயங்களை எடுக்கத் தயாராக இருப்பது ஒரு நல்ல அறிகுறியாகும். எனவே, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority (PFRDA)) அதன் சில சொத்துக்களுக்கு சந்தையிலிருந்து சந்தை மதிப்பீட்டைத் (mark-to-market (MTM)) தவிர்ப்பதன் மூலம் தேசிய ஓய்வூதிய முறை சந்தாதாரர்களைப் பாதுகாக்க விரும்புவது ஏன் என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) சமீபத்திய ஆலோசனைக் கட்டுரை, NPS திட்டங்கள் தங்கள் நீண்டகால அரசாங்கப் பத்திரங்களுக்கு சந்தையிலிருந்து சந்தை மதிப்பீட்டு (MTM) முறைக்குப் பதிலாக திரட்டல் அடிப்படையிலான மதிப்பீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இது சந்தாதாரர்களின் ஓய்வூதியச் செல்வத்தின் நிலையான வளர்ச்சியைக் காண்பிக்கும், நிகர சொத்து மதிப்புகளில் வட்டிவிகித மாற்றங்களின் தாக்கத்தைக் குறைக்கும். மேலும், ஓய்வூதிய சேமிப்பை பொருளாதாரத்திற்கான நீண்டகால மூலதனமாக மாற்றும் என்று அது கூறுகிறது.
இருப்பினும், இந்த சந்தையிலிருந்து சந்தை மதிப்பீடு (MTM) அல்லாத மதிப்பீடு சந்தாதாரர்களுக்கும் திட்டத்திற்கும் உருவாக்கக்கூடிய அபாயங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) புறக்கணிப்பதாகத் தெரிகிறது. வட்டி விகிதங்கள் மாறும்போது, புதிய பத்திரங்களின் விளைச்சலுடன் பொருந்துமாறு அவை சரிசெய்யப்படுவதால் பத்திரங்களின் சந்தை விலைகள் உயரும் அல்லது குறையும்.
நீண்டகாலப் பத்திரங்களுக்கான இந்த தற்காலிக விலை மாற்றங்களை NPS திட்டங்கள் பதிவு செய்யக்கூடாது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இப்போது பரிந்துரைக்கிறது. வழங்குபவர் முதிர்ச்சியில் பத்திரத்தை திருப்பிச் செலுத்தியவுடன் அவை ஒரு பொருட்டல்ல என்று வாதிடுகிறது. 30 ஆண்டு மற்றும் நீண்டகால அரசாங்கப் பத்திரங்களில் சந்தையிலிருந்து சந்தை மதிப்பீட்டை (MTM) நீக்குவதன் மூலம், தேசிய ஓய்வூதிய முறை (NPS) மேலாளர்கள் இந்தப் பத்திரங்களில் அதிகமாக முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) நம்புகிறது.
இருப்பினும், இந்த கணக்கியல் மாற்றத்தின் தீமைகள் நன்மைகளைவிட அதிகமாகத் தெரிகிறது. முதலாவதாக, தேசிய ஓய்வூதிய முறையில் (NPS) ஐந்து ஆண்டுகள் முடித்தபிறகு முதலீட்டாளர்கள் தங்கள் மொத்த சேமிப்பில் 25% வரை திரும்பப் பெறலாம். அவர்கள் ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு இடையில் மாறலாம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து பங்கு, தங்கம் அல்லது பெருநிறுவன பத்திர விருப்பங்களுக்கு இடையே தேர்வு செய்யலாம். இதன் பொருள் தேசிய ஓய்வூதிய முறை (NPS) மேலாளர்கள் முதிர்வு வரை எப்போதும் தங்கள் நீண்டகாலம் வைத்திருக்க முடியாது. இரண்டாவதாக, NPS ஒரு ஒருங்கிணைந்த நிதி என்பதால், இது முதலீட்டாளர்களிடமிருந்து வரும் மற்றும் வெளியேறும் பணத்தை தொடர்ந்து கையாளுகிறது.
திரும்பப் பெறுதல் அல்லது நிதி மாற்றங்கள் அரசாங்க பத்திரங்களை விற்பனை செய்ய கட்டாயப்படுத்தும் போது, சந்தை மதிப்பீடு (MTM) பயன்படுத்தப்படாவிட்டால் விற்பனை விலை அவற்றின் பதிவு செய்யப்பட்ட மதிப்பிலிருந்து வேறுபடலாம். மேலும், நிதி மேலாளர்கள் MTM மதிப்பீட்டைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றால், அவர்கள் பெரும்பாலும் அதிகப்படியான ஆபத்துக்களை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை இந்தியாவில் கடந்தகால அனுபவம் காட்டுகிறது. தேசிய ஓய்வூதிய முறை (NPS) தனியார் நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதியத் திட்டம் என்பதால், அது முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் கவனமாக கணக்கியல் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், ஆபத்தான அல்லது தெளிவற்ற நடைமுறைகளைப் பின்பற்றக்கூடாது.
இதன் பொருள் தேசிய ஓய்வூதிய முறை (NPS) திட்டங்கள் நீண்டகால அரசாங்க பத்திரங்கள் அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதல்ல. ஓய்வூதியத் திட்டமாக, தேசிய ஓய்வூதிய முறை (NPS) அத்தகைய முதலீடுகளுக்கு ஏற்றது. இருப்பினும், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), தேசிய ஓய்வூதிய முறை (NPS) மேலாளர்கள் இதை முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில், MTM மதிப்பீட்டைப் பயன்படுத்துவதைத் தொடர வேண்டும். அதிக நீண்டகால, பணமாக்க முடியாத பத்திரங்களை வைத்திருப்பது தேசிய ஓய்வூதிய முறை (NPS) முன்கூட்டியே திரும்பப் பெறுவதை வரம்பிடச் செய்தால், அது சந்தாதாரர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும்.