Su-30MKI பற்றி அறிக -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


சூப்பர் சுகோய் திட்டம் (Super Sukhoi programme) என்றும் அழைக்கப்படும் Su-30MKI மேம்படுத்தல் திட்டம், ஒரு பெரிய நடுத்தரநிலை மேம்படுத்தல் திட்டமாகும். இது போர் விமானத்தின் சேவை நிலையை மேலும் 20 ஆண்டுகள் நீட்டிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அதிகாரிகளின் கூற்றுப்படி, மேம்படுத்தல் திட்டம் தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அதன் ஒப்புதலுக்காக அமைச்சரவை பாதுகாப்புக் குழுவிற்கு (Cabinet Committee of Security (CCS)) விரைவாக அனுப்ப முயற்சிகள் நடந்து வருகின்றன.


மேம்படுத்தலில், புதிய விமானி அறை (new cockpit), மேம்பட்ட விமான மின்னணுவியல் (advanced avionics), நவீன ரேடார்கள் (modern radars) மற்றும் ஐஆர் உணரிகள் (IR sensors), ஜாமர் சாதனங்கள் (jammer pods) உள்ளிட்ட புதிய மின்னணு போர் தொகுப்பு ஆகியவை அடங்கும் என்று அதிகாரி கூறினார்.


மேம்படுத்தல் திட்டம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அமைச்சரவை பாதுகாப்புக் குழுவிற்கு (CCS) அனுமதி கிடைத்ததும், அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Limited (HAL)), விமானத்தின் ஆரம்ப செயல்பாட்டு அனுமதி (initial operational clearance (IOC)) பதிப்பை ஐந்து ஆண்டுகளுக்குள் வழங்கவும், அமைச்சரவை பாதுகாப்புக் குழு (CCS) ஒப்புதல் வழங்கப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குள் இறுதி செயல்பாட்டு அனுமதி (final operational clearance (FOC)) பதிப்பை வழங்கவும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


செப்டம்பர் மாதத்தில் கடைசி MiG-21 ரக விமானம் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய விமானப்படையின் போர் விமானப் படையின் எண்ணிக்கை 29-ஆகக் குறைந்துவரும் நிலையில், இந்த வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய விமானப்படை தற்போது 42 அங்கீகரிக்கப்பட்ட போர் விமானப் படையைக் கொண்டுள்ளது.


இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திடமிருந்து 83 இலகுரக போர் விமானமான தேஜாஸ் Mk1A-வில் எதையும் இந்திய விமானப்படை (IAF) இன்னும் பெறவில்லை. நவம்பர் 2023-ல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (Defence Acquisition Council (DAC)), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திடமிருந்து உள்நாட்டிலேயே Su-30MKI விமானங்களை மேம்படுத்துவதற்கான அவசியத்தை ஏற்றுக்கொண்டது.


உங்களுக்குத் தெரியுமா?


பிரதமர் தலைமையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் (CCS) நிதி, பாதுகாப்பு, உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தேசிய பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் நியமனங்களுக்கு இந்தக் குழு பொறுப்பாகும்.


இந்தியாவின் முக்கியமான நியமனங்கள், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், பாதுகாப்புச் செலவுகள் தொடர்பான முக்கிய முடிவுகள் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவால் (CCS) எடுக்கப்படுகின்றன.


பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதோடு மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வெளிப்புற பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்த வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான கொள்கை விஷயங்கள் குறித்தும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) விவாதிக்கிறது. அணுசக்தி தொடர்பான பிரச்சினைகளையும் இந்தக் குழு கையாள்கிறது.



Original article:

Share: