இந்திய ராணுவம் முன்னேறி வருகிறது. இருப்பினும், தொழில்நுட்பத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் அது சவால்களை எதிர்கொள்கிறது. மேலும், அதற்கான தேவைகளையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய ராணுவம் 2024 ஆம் ஆண்டை 'தொழில்நுட்பத்தை தழுவும் ஆண்டாக' (Year of Technology Absorption) அறிவித்துள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ராணுவத்தின் வலுவான கவனத்தை இது எடுத்துக்காட்டுகிறது. தற்போது, போர்முறையானது வளர்ச்சியடைந்து வரும்வேளையில், இராணுவமானது உண்மையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இதன் உத்தியை மாற்றிக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. தன்னம்பிக்கையின் (Atma Nirbharta) ஒரு மாற்றாக இந்திய இராணுவத்தின் வளர்ச்சிக்கான செயல்முறையாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு, தன்னாட்சி ஆயுத அமைப்புகளான ட்ரோன்கள், சென்சார்கள், ரோபோடிக்ஸ், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுத அமைப்புகளை உள்ளடக்கிய தகர்க்கும் தொழில்நுட்பத்தின் (disruptive technology (DT)) அடிப்படையில் தன்னாட்சி ஆயுதங்கள் இதில் அடங்கும். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் இந்த தொழில்நுட்பங்களில் முன்னணியில் உள்ளன. இந்த தொழில்நுட்பங்களின் வளர்ச்சியானது எதிர்காலத்தில் இராணுவ உத்திக்கான போட்டிகள் மற்றும் ஈடுபாடுகளை தீர்மானிக்கும்.
இராணுவ ரீதியாக, தன்னாட்சி ஆயுதம் என்பது தொழில்நுட்பங்களைப் பெறுதல், மாற்றியமைத்தல் மற்றும் பழைய அமைப்புகளுடன் ஒருங்கிணைத்தல் என்று பொருள்படும். இந்த செயல்முறைகளில் பல விதிமுறைகள் உள்ளன. அவை, ஆரம்பநிலையில் தெளிவாக இதற்கான விவரஙகள் இருக்காது. தகர்க்கும் தொழில்நுட்பத்தை (disruptive technology (DT)) ஏற்றுக்கொள்வது குறித்து சில பொதுவான தவறான புரிதல்களும் உள்ளன. சிக்கலை இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.
முதலாவதாக, புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பாரம்பரிய ஆயுத தளங்கள் மற்றும் இராணுவ உத்திகள் முக்கியமானதாக இருக்கும். இந்த புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதை விட அவற்றை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிப்பது பற்றியது. ஒருங்கிணைப்பு என்பது இந்த செயல்முறையின் முக்கிய பகுதியாகும். இதன் பொருள் புதிய தொழில்நுட்பங்கள் இருக்கும் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இது பழைய அமைப்புகளை முழுமையாக புதியவற்றுடன் மாற்றுவது பற்றியது அல்ல.
மரபு அமைப்புகளைப் பாராட்டுதல்
புதிய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய போர்களை மாற்றக்கூடும் என்றாலும், இந்த தொழில்நுட்பங்கள் நம்மிடம் இருப்பதால் நாம் அதிக நம்பிக்கையுடன் இருக்கக்கூடாது. இராணுவ நிறுவனங்கள் தொழில்நுட்ப உத்திகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்வது போர்க்களத்தில் அவற்றின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது.
இராணுவத்தில் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் பெரிய மாற்றம் இருப்பதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். புதிய தொழில்நுட்பங்கள் போரை மிகவும் கொடியதாக ஆக்குகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆயினும்கூட, ரஷ்யா-உக்ரைன் (Russia-Ukraine) மற்றும் ஆர்மீனியா-அஜர்பைஜான் (Armenia-Azerbaijan) போன்ற சமீபத்திய மோதல்கள், இறப்பின் உண்மையான அதிகரிப்பு எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக இல்லை என்பதைக் காட்டுகின்றன. தொழில்நுட்பம் மட்டுமே போர்களின் முடிவை தீர்மானிக்காது என்ற கருத்தை இது ஆதரிக்கிறது. இது முடிவுகளை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
மேலும், நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரில், உக்ரைனின் ஆரம்ப நன்மைகள் போர் நீடிக்கவில்லை. ரஷ்யாவின் இராணுவ பலம் இப்போது ஓங்கியிருப்பதற்கு ஒரு காரணம் அது பாரம்பரிய போர் முறைகளைப் பயன்படுத்துவதுதான். பாரம்பரிய பாதுகாப்பு வழிகளை (traditional defense lines) வலுப்படுத்துவது மற்றும் வலுவான இராணுவ தொழில்துறை தளத்தைக் கொண்டிருப்பது போன்ற விஷயங்கள் இறுதியில் முக்கியமானவை. இந்திய இராணுவம் புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது மற்றும் அதன் சொந்த பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்துகிறது. இந்த அணுகுமுறை நிச்சயமாக எதிர்காலத்திற்கான சரியான திசையாகும்.
புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பது முக்கியம்
புதிய தொழில்நுட்பம் சார்ந்த ஆயுதங்களின் செயல்திறனைக் கட்டுப்படுத்த போர்கள் தொழில்நுட்ப எதிர் நடவடிக்கைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த நடவடிக்கைகள் தொழில்நுட்பத்தைப் பற்றியது மட்டுமல்ல, இராணுவம் எவ்வாறு போராடுகின்றன என்பதையும் பற்றியது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இராணுவம், சிதறல் (exploiting dispersion), மறைப்பு (cover) மற்றும் மறைத்தல் (concealment) ஆகியவற்றைப் பயன்படுத்தி எதிரிகளின் துப்பாக்கிச் சூடு வெளிப்பாட்டைக் குறைக்க அதற்கான உத்திகளை உருவாக்கின. தற்போது, இந்த உத்திகள் இன்றும் முக்கியமானவை.
நவீன போர்களில், டாங்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மிகவும் மாற்றியமைக்க வேண்டும். இதன் பொருள், இராணுவ உத்திகளை மாற்றுவது மற்றும் பல்வேறு திறன்களை ஒருங்கிணைப்பது ஆகும். போர்க்களத்தில் பல சென்சார்கள் இருப்பதால், மறைந்திருந்து தாக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. உதாரணமாக, டாங்கிகள் பரந்து விரிந்து மின்னணு போர் அலகுகளுடன் இணைந்து எதிரி வான்வழி தளங்களைக் கண்டறிந்து முடக்க வேண்டும். அதேபோல், காலாட்படை சிதறி செயல்பட வேண்டும் மற்றும் உயர் தொழில்நுட்ப போர்களைக் கையாள வலுவான இளைய தலைவர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
முன்கூட்டியே திட்டமிடல்
மின்னணு தீர்வுகளுக்கு பாரம்பரிய முறைகளை கைவிடுவதற்குப் பதிலாக, நமது எதிர்கால திட்டங்களில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பலவீனங்களையும் வேறுபாடுகளையும் அங்கீகரிப்பதன் மூலம் இது தொடங்குகிறது.
புதிய தொழில்நுட்பங்கள், அவற்றின் திறன்கள் மற்றும் அவை எங்கு பொருந்துகின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இந்த மாற்றங்களை நாம் மேலிருந்து கீழ் மட்டத்தில் மட்டுமல்ல, முற்றிலும் கீழ் மட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும். உண்மையான மாற்றத்திற்கு அனைத்து மட்டங்களிலும் புதிய தொழில்நுட்பத்தை அணுகுவது முக்கியம்.
தொழில்நுட்பத்தை திறம்பட உள்வாங்குவதற்கு, நமது கட்டமைப்பை மறுசீரமைத்தல், நமது மக்களை நன்கு நிர்வகித்தல், அனைத்து மட்டங்களிலும் உள்ள நிபுணர்களுக்கு பயிற்சி அளித்தல், பொதுமக்கள் மற்றும் இராணுவ முயற்சிகளை ஒன்றிணைத்தல், தரவு ஒருமைப்பாட்டை உறுதி செய்தல் மற்றும் மின்னணு தொழில்நுட்பங்களுக்கான கொள்முதல் கொள்கையை உருவாக்குதல் போன்ற பெரிய ஜனநாயகம் கொண்ட நாட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய ராணுவம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்கிறது. ஆனால், அதை தக்க வைப்பது கடினமாக இருக்கும். எது தேவை என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்திய மற்றும் நடந்துகொண்டிருக்கும் போர்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கர்னல் சஷாங்க் ரஞ்சன், (ஓய்வு) இந்திய ராணுவத்தில் 33 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு காலாட்படை அதிகாரி, ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார்.