புவி வெப்பமடைதல் வானிலை மற்றும் காலநிலை முன்னறிவிப்பை கணிப்பதை கடினமாக்குமா? -ரகு முர்துகுடே

 2100-ஆம் ஆண்டு வரை காலநிலை முன்னறிவிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க மனித, நிதி மற்றும் கணக்கீட்டு வளங்களின் செலவுகள் மற்றும் நன்மைகளை மதிப்பீடு செய்வது முக்கியம்.


2023-2024-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெப்பமயமாதல் புவி வெப்பமடைதலின் விளைவுகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. மிக தீவிரமான வெப்ப அலைகள், அழிவுகரமான சூறாவளி மற்றும் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத்தீ உள்ளிட்ட உலகெங்கிலும் தீவிரமான வானிலை மாற்றத்தை நாம் காண்கிறோம்.


தொழில்துறைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது உலகம் ஏற்கனவே 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளதாக சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த மதிப்பீடு தரவு மற்றும் காலநிலை மாதிரிகளிலிருந்து வருகிறது. 1.5°C வரம்பு சிறிய தீவு மற்றும் வளரும் மாநிலங்களின் கூட்டணிக்கு முக்கியமானது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளை கணிக்க விஞ்ஞானிகள் மாதிரிகளை உருவாக்கியுள்ளனர். இந்த வெப்பநிலை இயல்பான அளவைவிட அதிகரித்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.


இந்த முன்னறிவிக்கப்பட்ட விளைவுகள் ஏற்படுவதற்கு வெப்பநிலை 1.5°Cக்கு மேல் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. திட்டமிடப்பட்ட தாக்கங்கள் எப்போது ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் கால அளவு முக்கியமானது.


2023-2024-ஆம் ஆண்டின் தீவிர வானிலை, பேரழிவுகளை திறம்பட நிர்வகிக்கும் அளவுக்கு வானிலை மற்றும் காலநிலையை நம்மால் கணிக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. ஏழை மக்கள் இன்னும் தீவிர வானிலை நிகழ்வுகளினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.


2023-ஆம் ஆண்டு எல்நினோவை (El Niño) இளவேனில் பருவம் காலத்தின் (spring season) துவக்கத்தில் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஆனால், 2023-2024-ஆம் ஆண்டில் வெப்பமயமாதல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. எல் நினோ பொதுவாக ஒரு சிறிய அளவு புவி வெப்பமடைதலை ஏற்படுத்துகிறது. 2022-ஆம் ஆண்டில் ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாஅபாய் எரிமலையிலிருந்து வரும் நீராவி மற்றும் காட்டுத்தீயில் இருந்து கார்பன் டை ஆக்சைடு (carbon dioxide) வெப்பமயமாதலை மோசமாக்கியது.


2023-ஆம் ஆண்டில் பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்தது. ஆனால், அது எல் நினோ ஆண்டு வறட்சியால் ஏற்பட்டது அல்ல. ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தெரியவில்லை. பல வானிலை மையங்கள் 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வலுவான லா நினா உருவாகும் என்று கணித்துள்ளன. 


வானிலை முன்னறிவிப்புகள் பல ஆண்டுகளில் மிகவும் தீவிரமான புயல்களை பருவத்தை பற்றி கணித்துள்ளன. ஆனால், இதுவரை சாதாரணமாகவே இருந்து வருகிறது.


பருவமழை கணிக்க முடியாததாக உள்ளது.  இந்தியாவின் ஒரு சில பகுதிகள் வறட்சியால் பாதிப்படைந்துள்ளன. மற்ற பகுதிகள் பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை சந்தித்துள்ளனர். 2024-ஆம் ஆண்டில் வழக்கத்தை விட அதிகமாக பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வழக்கமான லா நினா பருவமழை அல்ல. லா நினா ஆண்டு எதிர்பார்த்ததை விட வட இந்தியப் பெருங்கடலில் புயல் உருவாவதற்கான சாதகமான சூழல் இல்லை.


சில வானிலை மையங்கள் இந்தியப் பெருங்கடல் இருமுனையை (Indian Ocean Dipole (IOD)) வலுவாக கணித்துள்ளன. ஆனால், அது இன்னும் நடக்கவில்லை.


இது கணிப்புகள் பற்றிய புகார்களின் பட்டியல் மட்டுமல்ல.வெப்பமயமாதலின் இந்த காலகட்டத்திலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்ற எச்சரிக்கை இது. இந்த நிகழ்வுகள் எதிர்கால கணிப்புகள் மற்றும் காலநிலை கணிப்புகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


கணிப்புகள் பெரிய சவால்களை ஏற்படுத்தலாம்


எதிர்காலத்தில் கணிப்புகள் கடினமாகலாம். "எதிர்காலத்தைப் பற்றி கணிப்பது கடினமானது" இயற்பியலாளர் நீல்ஸ் போருக்கு (Niels Bohr) அடிக்கடி கூறப்படும் மேற்கோள் பொருத்தமானது. வானிலை மற்றும் காலநிலை கணிப்புகள் இந்த சவாலை நமக்கு நினைவூட்டுகின்றன. மாதிரிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். 


ஆனால் புவி வெப்பமடைதல் கணிப்புகளை கடினமாக்கினால் என்ன செய்வது? இந்த ஆண்டு தவறான கணிப்புகள் வெறும் தற்செயல் நிகழ்வுகளா? அல்லது வரவிருப்பதற்கான எச்சரிக்கையை?


சூறாவளி, பருவமழை, எல் நினோ, லா நினா மற்றும்  இந்தியப் பெருங்கடல் இருமுனையை (Indian Ocean Dipole (IOD)) ஆகியவற்றை வெப்பமயமாதல் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பல ஆய்வுகள் கணித்துள்ளன. ஆனால், ஒரு பெரிய கேள்வி உள்ளது. உலகம் ஏற்கனவே 1.5 ° C ஐ விட வெப்பமாக இருந்தால், இந்த இயற்கை வடிவங்கள் இதுவரை எவ்வாறு மாறிவிட்டன என்பதைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?


சமீபத்திய வெப்பமயமாதல் காலம், முக்கிய காலநிலை வடிவங்களில் நாம் என்ன மாற்றங்களைக் காணலாம் என்பதை உறுதிப்படுத்த போதுமானதாக இல்லை. காலநிலை மாதிரிகள் அற்புதமானவை. சூரியனின் ஆற்றலைப் பயன்படுத்தி அனைத்து இயற்கை வடிவங்களையும் மீண்டும் உருவாக்க முடியும். ஆனால், அவை சரியானவை அல்ல. வெவ்வேறு மாதிரிகள் பெரும்பாலும் வெவ்வேறு பதில்களைத் தருகின்றன. ஒரே மாதிரியானது கூட அது எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து வெவ்வேறு பதில்களைக் கொடுக்க முடியும்.


எடுத்துக்காட்டாக, தற்போதைய தற்போதுள்ள மாதிரிகள் கடந்த 50 ஆண்டுகளில் பருவமழை போக்குகளை துல்லியமாக உருவாக்க முடியாது. இந்த மாதிரிகள் எதிர்கால கணிப்புகளுக்கு நம்பகத்தன்மையற்றவையாகக் காணப்படுகின்றன. நிகழ்காலத்திற்கான துல்லியமான கணிப்புகளை மட்டுமே அவைகளால் செய்ய முடியும். பருவமழை முறைகள் பத்தாண்டிற்கு ஒருமுறை மாறுபடுமா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. 


காலநிலை மாற்றம் இயற்கையான பத்தாண்டிற்கு ஒருமுறை மாறுபாட்டை நீட்டிக்க முடியுமா, அதை ஒரு உண்மையான போக்காக மாற்ற முடியுமா என்பதும் புரியவில்லை. இந்த செயல்முறைகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தவும் கணிப்புகளை மேம்படுத்தவும்  முக்கியமான கேள்விகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.


கணிப்புகளின் எதிர்காலத்தை கணித்தல்


எதிர்காலத்தில் கணிப்புகளை மேம்படுத்துவதற்கான நம்பிக்கை நிறைய உள்ளது. எனினும், நம்பிக்கை மட்டும் போதாது. ஏற்கனவே சுவாரசியமாக இருந்தாலும் இன்னும் சில பலவீனங்களைக் கொண்ட எங்கள் அமைப்புகளை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சூறாவளி, எல் நினோ, லா நினா மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) போன்ற இயற்கை நிகழ்வுகளின் முன்கணிப்பு வெப்பமயமாதல் தொடர்வதா அல்லது வேகமடைவதால் குறையுமா என்பதையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.


பல அர்ப்பணிப்புள்ள விஞ்ஞானிகள் மாதிரிகள் மற்றும் தரவு அமைப்புகளை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்த முக்கியமான சவாலை சமாளிக்க செயற்கை நுண்ணறிவு (artificial intelligence(AI)), இயந்திர கற்றல் (machine learning) மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். மிகவும் உள்ளூர் மட்டத்தில் நம்பகமான மற்றும் பயனுள்ள ஆரம்ப எச்சரிக்கைகளைப் பெறுவதில் நம்பிக்கையுடன் இருக்க பல காரணங்கள் உள்ளன.


காலநிலை கணிப்புகளுக்கான 2023-ல் இருந்து பாடங்கள்


தற்போது காலநிலை கணிப்புகளை உருவாக்க இதே மாதிரிகளைப் பயன்படுத்துகிறோம். இந்த மாதிரிகள் உமிழ்வு அதிகரிப்பு, மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்க செயல்படுத்தும் கொள்கைகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் எதிர்கால காலநிலையைக் கணிக்கின்றன. அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளுக்கு, இந்த கணிப்புகளில் உள்ள நிச்சயமற்ற தன்மை மாதிரிகளில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வெப்பமயமாதல் உலகில் இயற்கை மாறுபாடுகள் ஆகியவற்றிலிருந்து வருகிறது.


வெப்பமயமாதலுக்கு இயற்கை அமைப்புகள் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைக் கணிப்பதில் உள்ள சிரமம் அனைத்து கணிப்புகளையும் தொடர்ந்து பாதிக்கும். இந்த மாதிரிகளை மேம்படுத்த, சிறந்த வானிலை மற்றும் காலநிலை கணிப்புகளை மாதிரி புதுப்பிப்புகளாக மொழிபெயர்க்க வேண்டும்.


அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளுக்கு கணிப்புகளில் கவனம் செலுத்துவது ஒரு நல்ல உத்தியாக இருக்கலாம். தற்போதைய புவிசார் அரசியல் சிக்கல்கள் மற்றும் சந்தைகள், பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களில் அவற்றின் விளைவுகள் அந்தக் கால  எல்லைகளை தாண்டி என்ன நடக்கும் என்பதைக் கணிப்பது கடினமாக்குகிறது.


ஒட்டுமொத்தமாக, 2100-ஆம் ஆண்டு வரை காலநிலை கணிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க மனித, நிதி மற்றும் கணக்கீட்டு வளங்களின் செலவுகள் மற்றும் நன்மைகளை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம்.



Original article:

Share: