பல நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்த பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டம் -ஆர்.கே.விஜ்

 பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS))  பிரிவு 107 எந்தவொரு சொத்தையும் விசாரணையின் போது காவல்துறையின் வேண்டுகோளின் பேரில் பறிமுதல் செய்ய இந்த சட்டம் அனுமதிக்கிறது. குறிப்பிட்ட, சில நிபந்தனைகளின் கீழ் குற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசாங்கம் பறிமுதல் செய்யவும் நீதிமன்றத்திற்கு தடையற்ற அதிகாரங்களை வழங்குகிறது. 


 2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில் பிரிவு 107 புதிதாக சேர்க்கப்பட்டது. இந்த பிரிவு "சட்டவிரோதமாக" (‘proceeds of crime’) ஈட்டிய சொத்துக்களை பற்றி குறிப்பிடுகிறது. இதற்கு முன்னர் இந்த சொல் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டது. முதலாவதாக, இது 2002-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (Prevention of Money Laundering Act (PMLA)) பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக, பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure (CrPC)) கீழ் சொத்து இணைப்பு (‘Forfeiture of Property’) மற்றும் பறிமுதல் (‘Procedure for Attachment’) பற்றிய அத்தியாயத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

 

பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 82 மற்றும் 83, தலைமறைவாக உள்ள ஒருவரின் சொத்தை இணைப்பதற்கான விதிகளை பற்றி குறிப்பிடுகிறது. பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 84 மற்றும் 85 இந்த விதிகளை சில சிறிய மாற்றங்களுடன் குறிப்பிடுகிறது. இருப்பினும், பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 107 பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த பிரிவு நீதிமன்றத்திற்கு விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. விசாரணையின் போது காவல்துறையின் வேண்டுகோளின் பேரில் பறிமுதல் செய்ய இந்த சட்டம் அனுமதிக்கிறது. சில நிபந்தனைகளின் கீழ் சட்டவிரோதமான வருமானத்தை அரசாங்கம் பறிமுதல் செய்ய நீதிமன்றத்திற்கு தடையற்ற அதிகாரங்களை வழங்குகிறது. 

முன் நிபந்தனைகள் இல்லை 


பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) பிரிவு 107-ன் கீழ், ஒரு காவல்துறை அதிகாரி விசாரணையின் போது சொத்தை இணைக்க அனுமதிகோரலாம்.  இதற்கு காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆணையர் ஒப்புதல் வழங்க வேண்டும். அதிகாரிகள் தங்களது விசாரணையின் போது  குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட சொத்து என்று  உறுதி செய்த பின்னர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கொள்ளலாம்.

 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) படி, ஒரு நபர் சட்டவிரோதமாக சேர்த்த வருமானத்தை வைத்திருக்கிறார் என விசாரணை நடத்தும் அதிகாரிக்கு தேவையான காரணம் இருக்க வேண்டும். இந்த காரணத்தை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும். பறிமுதல் செய்வதைத் தவிர்ப்பதற்காக வருமானம் மறைக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம் என்று அதிகாரி நினைத்தால், அவர்கள் 90 நாட்கள் வரை சொத்தை தற்காலிகமாக இணைக்கலாம். பணமோசடி தடுப்புச் சட்டத்தின்இன் பிரிவு 107-ல் அத்தகைய நிபந்தனைகள் எதுவும் இல்லை.

 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure (CrPC)) பிரிவு 173-ன் கீழ் ஒரு  குற்றவியல் நீதிபதிக்கு (magistrate) அறிக்கை அனுப்பப்பட்ட பின்னரே சொத்துக்களை இணைக்க முடியும். இது விசாரணை முடிந்த பிறகு நடக்கும். இதற்கு மாறாக, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 107 விசாரணையின் போதே சொத்தை இணைக்க அனுமதிக்கிறது. 


விசாரணை முடிந்த பின்னரே பணமோசடி குற்றத்தின் மூலம் பெற பட்ட  சொத்துக்களை இணைக்க முடியும் என்று பணமோசடி தடுப்புச் சட்டம்  கூறுகிறது. பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 107 சொத்து எப்போது அகற்றப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடவில்லை. நீதிமன்றம் அல்லது குற்றவியல் நீதிபதி சொத்து குற்றத்தின் வருமானம் மூலம் பெறப்பட்டது என்று கண்டறிந்தால், மாவட்ட குற்றவியல் நீதிபதி அதன் வருமானத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்று மட்டுமே அது கூறுகிறது. உரிமை கோருபவர்கள் இல்லாவிட்டால் அல்லது உரிமைகோருபவர்களுக்கு பணம் செலுத்திய பிறகு கூடுதல் பணம் இருந்தால், குற்றத்தின் வருமானம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும்.

 

பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டம் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) சொத்துகளை அகற்றுவது (disposal of property) குறித்த ஒரு முழு அத்தியாயத்தையும் வழங்கியுள்ளது. இந்த விதிகளில் பெரும்பாலானவை பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure (CrPC)) உள்ளதைப் போலவே உள்ளன.  இருப்பினும், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 497-ன் படி நீதிமன்றம் அல்லது குற்றவியல் நீதிபதிக்குஆதாரமாகப் பயன்படுத்த சொத்தின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணைக்க வேண்டும். சுந்தர்பாய் அம்பாலால் தேசாய் vs சுந்தர்பாய் அம்பாலால் தேசாய் (Sunderbhai Ambalal Desai vs State of Gujarat) 2003-ஆம் ஆண்டு  வழக்கில் ஆதாரங்களை விரைவாக பதிவு செய்வதற்கான நீதிமன்றத்தின் அதிகாரத்தை பற்றி உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன்மூலம், காவல்துறையோ நீதிமன்றமோ அந்தப் பொருள்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டியதில்லை. இதனால், உரிமையாளருக்குச் சிரமம் ஏற்படாது.

 

விசாரணைக்கு முன் சொத்தை வைத்திருத்தல் மற்றும் அப்புறப்படுத்துதல், விசாரணை முடிந்த பிறகு சொத்தை அப்புறப்படுத்துதல் மற்றும் அசையாச் சொத்தை அதன் உரிமையாளரிடம் திருப்பித் தருதல் போன்ற சூழ்நிலைகளை இந்த அத்தியாயம் உள்ளடக்கியது. சொத்து பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கபடாவிட்டால் அதை விற்கலாம். ஆனால், விசாரணை முடிந்த பின்னரே சொத்துக்கள் வழங்கப்படும்.

 

பாதுகாப்புகள் 


பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 107-ன் படி நீதிமன்றம் 14 நாட்களுக்குள் காரணம் கேட்புக் குறிப்பாணையை  (show-cause notice) வழங்க வேண்டும். அந்த குறிப்பாணை குற்ற வழக்கில் கிடைத்த வருமானத்தை உள்ளடக்கிய சொத்தை பறிமுதல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என்று கேட்கிறது. சம்பந்தப்பட்ட நபர் தங்கள் வழக்கை முன்வைக்கவில்லை என்றால், நீதிமன்றம் ஒரு சார்பு உத்தரவை பிறப்பிக்கலாம். பறிமுதல் செய்யப்பட்ட சொத்து சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட சொத்து என்று நீதிமன்றம் கண்டறிந்தால், உரிமையாளருக்கு  சொத்தை வழங்க மாவட்ட குற்றவியல் நீதிபதிக்கு  உத்தரவிடுகிறது. மாவட்ட குற்றவியல் நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் இந்த சொத்தை வழங்க வேண்டும். இருப்பினும், உரிமையாளர்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்து மாவட்ட நீதிமன்றத்திற்கு  குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. விசாரணை நடந்து கொண்டிருந்தாலும், மூன்று மாதங்களுக்குள் சொத்து வழங்கப்படலாம்.  நீதிமன்றம் அல்லது  மாவட்ட குற்றவியல் நீதிபதிக்கு இந்த முடிவை எப்போது எடுக்க வேண்டும் என்று பிரிவு குறிப்பிடவில்லை. 


அரசியலமைப்பின் 300 ஏ பிரிவு "சட்டத்தின் அதிகாரத்தால் எந்தவொரு நபரும் தனது சொத்துக்களை இழக்கக்கூடாது" என்று கூறுகிறது. இது அடிப்படை மனித உரிமையாக கருதப்படுகிறது. “சட்டம்” என்பது முறையாக உருவாக்கப்பட்ட மற்றும் நியாயமான நிலையைக் குறிக்கிறது.

 

'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்' மற்றும் 'பயங்கரவாத நடவடிக்கைகள்' தொடர்பான பிரிவுகளில் இதேபோன்ற சொற்களைத் தவிர, "சட்ட விரோத வருவாய்" என்ற வார்த்தையை தெளிவாக வரையறுக்கும் எந்த விதிகளும் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) இல்லை. பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) பிரிவு 107 அறிமுகப்படுத்துவதற்கான காரணம், பண மோசடி தடுப்பு சட்டம் ஒன்றிய அரசின் சட்டம் என்பதால், குற்றங்களின் வருமானத்தை விரைவாக அப்புறப்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்கும் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவதாகத் தெரிகிறது. 


இருப்பினும், இந்த பிரிவை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது. சரியான உரிமையாளர்களை அடையாளம் காண்பது விசாரணை அதிகாரிக்கு கடினமான பணியாக இருக்கலாம். மேலும், முறையான விசாரணையின்றி சொத்து மீதான நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நியாயமானதாக தெரியவில்லை.


ஆர்.கே. விஜ் முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரி (Indian Police Service officer) ஆவார்.



Original article:

Share: