தூய்மை இந்திய இயக்கத்தின் 2.0 நிலை என்ன? -ஸ்ரீபர்ணா சக்ரவர்த்தி

 மரபுவழி கழிவுகளை கொட்டும் இடங்களிலிருந்து எழும் பல்வேறு உடல் நல சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்கள் யாவை? 


இந்தியாவில் 3,000-க்கும் மேற்பட்ட பழைய கழிவுகள் கொட்டும் இடங்கள் உள்ளன. இவற்றில், 2,424 குப்பை கொட்டும் இடங்களில், 1,000 டன்னுக்கும் அதிகமான கழிவுகள் உள்ளன.  அக்டோபர் 2021-ஆம் ஆண்டில், மத்திய அரசு இக்கழிவுகளை அகற்றுவதற்காக  மரபுவழி கழிவுகள் மேலாண்மை திட்டத்தை (legacy waste management project) அறிமுகப்படுத்தியது. இது தூய்மை இந்திய இயக்கத்தின் (Swachh Bharat Mission (SBM)) 2.0-ன் ஒரு பகுதியாகும். இந்த இயக்கம் 2021-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் பாதிக்கு மேல், 2,424-ல் 471 மட்டுமே, அதாவது 19.43% குப்பைத்தொட்டிகள் மட்டுமே முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளன. 


மரபுவழி கழிவுகள் கொட்டும் (Legacy Waste Dumpsites) இடங்கள் என்றால் என்ன? 


மரபுவழி கழிவுகள் கொட்டும் இடங்கள் என்பது திடக்கழிவுகளை சேகரித்து பல ஆண்டுகளாக சேமித்து வைக்கும் பகுதிகளாகும். இந்த கழிவுகள் அறிவியலற்ற மற்றும் கட்டுப்பாடற்ற (unscientific and uncontrolled ) வழியில் சேமிக்கப்படுகின்றன. இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை 2023 அறிக்கையின்படி, இந்தியா ஒவ்வொரு நாளும் சுமார் 1,50,000 டன் நகராட்சி திடக்கழிவுகளை உருவாகின்றன. இந்தியாவில், திடக்கழிவுகளை சரியாக நிர்வகிப்பதற்கான வசதிகள் மிகக் குறைவு என்பதால், மாநகராட்சிகள், நகராட்சி மன்றங்கள் மற்றும் நகர் பஞ்சாயத்துகள்அவற்றை அகற்ற மனிதனால் உருவாக்கப்பட்ட குப்பை மலைகளை அடிக்கடி உருவாக்குகின்றன. 


இந்த குப்பை கொட்டும் இடங்கள் ஆரம்பத்தில் நகரங்களின் வெளிப்புறங்களில் உருவாக்கப்பட்டன. இருப்பினும், நகரங்கள் வளர்ந்தவுடன், இந்த இடங்கள் இப்போது நகரங்களின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. அவை பொதுவாக தரிசு நிலத்தில் அல்லது நிலப்பரப்புகளில் காணப்படுகின்றன.  இந்தியா முழுவதும் சுமார் 15,000 ஏக்கர் மதிப்புமிக்க நிலங்கள் 16 கோடி டன் மரபு வழி கழிவுகளால் சூழப்பட்டுள்ளது என்று ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

 

ஆரோக்கிய சீர்கேடுகள் என்னென்ன? 


மரபுவழி கழிவு கொட்டும் இடங்கள் மக்களுக்கு பல சுகாதார சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கும். அபாயகரமான கழிவுகளிலிருந்து வரும் புகையை சுவாசிப்பது வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் எரிச்சலை உண்டாக்கும். நிலப்பரப்புகளில் இருந்து மீத்தேனை உள்ளிழுப்பது குமட்டல், வாந்தி மற்றும் ஒருங்கிணைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மறு சுழற்சி செய்யக்கூடிய குப்பை கழிவுகளை சேகரிப்பவர்களுக்கு (Ragpickers) நீண்டகால தோல் ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படலாம்.  குப்பை கிடங்குகளுக்கு அருகில் வாழும் மக்களுக்கு காசநோய், ஆஸ்துமா, நீரிழிவு நோய், மனச்சோர்வு, காலரா மற்றும் மலேரியா போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த குப்பை கொட்டும் இடங்கள் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களையும் உற்பத்தி செய்கின்றன.

 



தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission) என்றால் என்ன? 


தூய்மை இந்தியா இயக்கம் என்றும் அழைக்கப்படும் ஸ்வச் பாரத் மிஷன் (Swachh Bharat Mission (SBM)), ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட ஒரு தேசிய பிரச்சாரமாகும். இது அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கப்பட்டது. திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழித்து, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். அக்டோபர் 2, 2019-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை "திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாததாக" (‘open-defecation free’) மாற்றுவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது.


2021-ஆம் ஆண்டில், தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புற 2.0 (Swachh Bharat-Urban Mission (2.0))-ன் இரண்டாம்  கட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இது 2026-க்குள் அனைத்து நகரங்களையும் "குப்பை இல்லாததாக" (‘garbage-free’) மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஐந்தாண்டு திட்டமாகும். 4,372 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் 100% கழிவுகளை மூலத்திலேயே பிரித்தெடுத்தல், வீடு வீடாகச் சென்று கழிவு சேகரிப்பு மற்றும் அனைத்து வகையான கழிவுகளையும் முறையான மேலாண்மை செய்தல், அறிவியல் ரீதியான குப்பைக் கிடங்குகளில் பாதுகாப்பாக அகற்றுவது உள்ளிட்டவற்றை இந்த பணி நோக்கமாகக் கொண்டுள்ளது. தூய்மை இந்தியா இயக்கம் 2.0 அனைத்து மரபு வழி குப்பைத் தொட்டிகளையும் சுத்தம் செய்து பசுமையான இடங்களாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது. சுத்திகரிக்க முடியாத கழிவுகளை அப்புறப்படுத்த, புதிய குப்பைத் தொட்டிகளை உருவாக்குவதைத் தடுக்கும் வகையில், அறிவியல் ரீதியான நிலப்பரப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.  இது புதிய குப்பைகள் உருவாக்கப்படுவதை தடுக்கும்.


மரபுவழி கழிவுகள் கொட்டும் இடங்களை சரிசெய்வதற்கான ஒன்றிய அரசின் பங்களிப்பில் (Central Share (CS)) உதவி தொகையான ₹3,226 கோடி ரூபாய்க்கான செயல் திட்டங்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்குகளை மீட்பது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஆலோசனை அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய நிதியுதவி திட்டங்களுக்கான விதிகளின்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பணம் வழங்கும் போது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் சொந்த நிதியை வழங்க வேண்டும்.


இதுவரை என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? 


செப்டம்பர் 24 நிலவரப்படி, தூய்மை இந்தியா வலைத்தளத்தின்படி, 2,424 குப்பை கொட்டும் இடங்களில், 471 முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 1,226 இடங்களில் தீர்வு காண ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் 727 தளங்கள் தொடப்படாமல் உள்ளன.  பரப்பளவில், மொத்தமுள்ள 17,039.71 ஏக்கரில், 27% மீட்கப்பட்ட நிலையில், 73% இன்னும் மீட்கப்பட வேண்டியுள்ளது.


மொத்தமாக 837 ஏக்கர் (42%) நிலப்பரப்பைக் குப்பையில் இருந்து தமிழ்நாடு மீட்டெடுத்துள்ளது. 938 ஏக்கரில் 698 நிலப்பரப்பில் 75% பகுதியை மீட்டெடுத்து குஜராத் முதலிடத்தில் உள்ளது.




Original article:

Share: