பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசாங்கம் "செம்மொழிகள்" (classical language) என்று அழைக்கப்படும் இந்திய மொழிகளின் ஒரு வகையை உருவாக்க முடிவு செய்தது. மேலும், இந்த தரநிலைக்கான (status) பல்வேறு அளவுகோல்களை வகுத்துள்ளது.
மத்திய அமைச்சரவை மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளுக்கும் "செம்மொழி" அடையாளத்தை வழங்கியுள்ளது. தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் ஏற்கனவே இந்த நிலையைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
"செம்மொழி" என்ற கருத்தாக்கம் எப்போது, எப்படி எழுந்தது?
பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசாங்கம் இந்திய மொழிகளுக்கு "செம்மொழிகள்" என்ற நிலையை உருவாக்க முடிவு செய்தது. இதற்கு, ஒரு மொழி இந்த நிலையைப் பெறுவதற்கு குறிப்பிட்ட அளவுகோல்களையும் அவர்கள் அமைத்துள்ளனர்.
அக்டோபர் 12, 2004 அன்று "செம்மொழியாக" அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ் ஆகும். இதற்குக் காரணம் அதன் தொன்மை மற்றும் வளமான இலக்கிய வரலாற்றைக் கொண்டுள்ளது ஆகும்.
கலாச்சார அமைச்சகம் சாகித்ய அகாடமியின் கீழ் மொழியியல் நிபுணர்கள் குழுவை (Linguistic Experts Committee (LEC)) அமைத்து, "செம்மொழி" தரநிலைக்கான பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமைப்புகளின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்ய அமைக்கப்பட்டது.
2004, நவம்பர் 25 அன்று சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. பின்னர், தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013), மற்றும் ஒடியா (2014) ஆகிய மொழிகளுக்கும் அந்தஸ்து வழங்கப்பட்டது.
"செம்மொழிகளுக்கான" சமீபத்திய விதிமுறைகள் யாவை?
இந்த ஆண்டு ஜூலை 25 அன்று, மொழியியல் நிபுணர்கள் குழு (LEC) செம்மொழி தரநிலைக்கான விதிமுறைகளை ஒருமனதாக திருத்தம் மேற்கொண்டது. இந்த திருத்தத்திற்கான விதிமுறைகள் பின்வருமாறு:
இந்த செம்மொழியான, ஆரம்பகால நூல்களின் தொன்மையானது மற்றும் 1500-2000 ஆண்டு காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டது. பண்டைய இலக்கியங்கள்/நூல்களின் தொகுப்பானது, பேச்சாளர்களின் தலைமுறைகளால் பாரம்பரியமாகக் கருதப்படுகிறது.
நினைவுச் சின்னங்கள் மற்றும் கல்வெட்டு சான்றுகள் (Epigraphic and inscriptional evidence)
பண்டைய நூல்களில் உரைநடை நூல்களும், கவிதைகளும் அடங்கும். செம்மொழிகள் மற்றும் இலக்கியங்கள் அவற்றின் தற்போதைய வடிவத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம். சில சமயங்களில், தொன்மைக்கான நூல்களின் கிளைகளில் பிற்கால வடிவங்களுடன் நேரடியாக இணைக்கப்படாமல் இருக்கலாம்.
இதற்குப் பிறகு, ஐந்து புதிய செம்மொழிகளை சேர்க்க குழு பரிந்துரைத்தது. இந்த மொழிகளுக்கான முன்மொழிவுகள் பல ஆண்டுகளாக ஒன்றியத்தில் உள்ளன. இதனால், ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்திய செம்மொழி இணைப்புகளின் பின்னணி என்ன?
மராத்தி (Marathi): மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், 2013-ஆம் ஆண்டில் மாநில அரசு முதன்முதலில் இந்த திட்டத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பிய பத்தாண்டிற்குப் பிறகு மராத்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
நவீன மராத்தி மொழியானது, மேற்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் பிராகிருத பேச்சுவழக்கான மகாராஷ்டிர பிராகிருதத்திலிருந்து தோன்றியது. இது சாதவாகனர்களின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்து வந்துள்ள நிலையில், சில மராத்திய அறிஞர்கள் இது பிராகிருத மொழிகளில் முதன்மையானது என்று கூறியுள்ளனர்.
ஆனால், இந்த கூற்று சர்ச்சைக்குரியது. மகாராஷ்டிர பிராகிருதத்தின் மிகப் பழமையான சான்றுகளை புனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல் கல்வெட்டில் காணப்படலாம். இது கிமு 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது, நவீன மராத்தியின் ஆரம்பகால சான்றுகள் சதாராவில் கண்டுபிடிக்கப்பட்ட செப்புத் தகடு கல்வெட்டில் காணப்படுகின்றன, இது கிபி 739 காலத்தைச் சேர்ந்தது.
பெங்காலி மற்றும் அசாமி (Bengali & Assamese) : மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில அரசுகளும் அந்தந்த மொழிகளுக்கு "செம்மொழிக்கான" தரநிலையைக் கோரியிருந்தன.
இந்த இரண்டு மொழிகளும் மகதி பிராகிருதத்திலிருந்து (Magadhi Prakrit) தோன்றியவை. இது கிழக்கிந்தியாவில் பிரபலமான பிராகிருதத்தின் ஒரு வடிவமாகவும் மற்றும் மகத அரசவையின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் செயல்பட்டு வந்தது. இருப்பினும், இரண்டு மொழிகளின் தோற்றத்தின் சரியான காலம் விவாதிக்கப்படுகிறது.
இது, 6-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரையிலான தேதிகளை அறிஞர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை கிபி 2000 ஆண்டு வரை இன்று அடையாளம் காணக்கூடிய ஒரு மொழி வடிவத்தை கொண்டுள்ளன. பிரபல மொழியியலாளர் சுனிதி குமார் சட்டர்ஜி, இந்தோ-ஆரிய வடமொழி வங்காளத்திற்கு பரவுவதற்கு முன்பு அசாமில் வளர்ந்திருக்கலாம் என்று முன்மொழிந்தார்.
பிராகிருதம் & பாலி (Prakrit & Pali) : ஒற்றை பிராகிருத மொழி என்று இல்லை. இதற்கு மாறாக, இந்த இந்த மொழிகள் நெருங்கிய தொடர்புடைய இந்தோ-ஆரிய மொழிகளின் குழுவைக் குறிக்கிறது. அவற்றை வரையறுக்கும் அம்சம் என்னவென்றால், அவை சமஸ்கிருதத்திற்கு எதிராக தீவிர மக்களின் மொழியாக இருந்தன.
இது மேல் வர்க்கத்தினர் மற்றும் உயர் இலக்கியங்களுக்கு ஒதுக்கப்பட்டது. வரலாற்றாசிரியர் ஏ.எல்.பாஷாம் ”இந்தியா என்று இருந்த அதிசயம்-1954” (The Wonder that was India) என்ற புத்தகத்தில் எழுதியதாவது, "புத்தரின் காலத்தில் மக்கள் சமஸ்கிருதத்தை விட மிகவும் எளிமையான மொழிகளைப் பேசத் தொடங்கினர். இவை பிராகிருதங்கள், அவற்றில் பல கிளைமொழிகள் என்று சான்றளிக்கப்பட்டுள்ளன.
கி.மு. முதல் ஆயிரமாண்டுகளில் தோன்றிய பிரபலமான வேற்றுமை மதங்களின் மொழியாகவும் இந்த வட்டார மொழிகள் இருந்தன.
சமண ஆகமங்களும் (Jain Agamas), கதா சப்தசதியும் (Gatha Saptashati) அர்த்தமாகதி என்ற பிராகிருத மொழியில் உள்ளன. பிராகிருத மொழியான அர்த்தமஹதி மொழியை அதன் உறுதியான வடிவம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த பிராகிருதம் சமண சமூகத்தினரிடையே தொடர்ந்து எதிரொலிக்கிறது. மேலும், மதத்தின் சடங்கு நடைமுறைகளில் இன்னும் இந்த மொழிகள் பயன்படுகிறது.
பாலி, ஓரளவு சமஸ்கிருதமயமாக்கப்பட்ட மகதி பிராகிருதத்தின் ஒரு வடிவமாக இருக்கலாம். இது திபிடகாஸ் (Tipitakas) எனப்படும் தேரவாத பௌத்த நியதியின் மொழியாகும். பாலி மொழியானது, புத்தரின் மொழியாகக் கருதப்படுகிறது. இலங்கை, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளில் தேரவாதப் பள்ளி செழித்தோங்கியுள்ளது.
மேற்கண்ட மொழிகளுக்கு 'செம்மொழி' அடையாளத்திற்கு என்ன அர்த்தம்?
இந்த செம்மொழிக்கான நிலை என்பது, பரந்த கலாச்சார மற்றும் கல்விக்கான தாக்கம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீட்டிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
செம்மொழிகளை ஊக்குவிக்க கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்காக 2020-ஆம் ஆண்டில் மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்க்க வசதியாகவும், தமிழில் பாடப்பிரிவுகளை வழங்குவதற்காகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) 2008-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளைக் கற்பதற்காக இதுபோன்ற சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிதாக சேர்க்கப்பட்ட செம்மொழிகள் இதேபோன்ற முறையில் ஊக்குவிக்கப்படும் என்று அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக் கல்வியில் செம்மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்றும் தேசியக் கல்விக் கொள்கை கூறுகிறது. கலாச்சார அமைச்சகம் (பல்வேறு கல்விக்கூடங்கள் மூலம்), கல்வி அமைச்சகம் மற்றும் அந்தந்த மாநில அரசுகள் இந்த மொழிகளில் அதிக அறிவு பகிர்வு மற்றும் ஆராய்ச்சிக்காக ஒன்றிணையும் வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த மொழிகளில் உள்ள கையெழுத்துப் பிரதிகள் மின்னணுமயமாக்கப்பட்டு, அறிஞர்கள் அதிக அளவில் உருவாக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.