இந்த பட்ஜெட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான 1991-ம் ஆண்டின் தருணமாக இருக்க முடியுமா? -கே.எம்.சந்திரசேகர்

 சீனாவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அவர்கள் 1990-களில் இருந்து தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகளை அதிகரித்துள்ளனர். 2024-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான முன்னோடியாக இருக்கலாம். 


1991 சீர்திருத்தங்களைப் போலவே, புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்துவதற்கும் கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கும் இது ஒரு முக்கியமான தருணமாகும். 


ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை ஒவ்வொரு பிரதமரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை வலியுறுத்தினர். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.  விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அணு ஆற்றலில் வெற்றிகரமான முயற்சிகளைத் தொடங்கினார். நேரு அடிக்கடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான தனது விருப்பத்தை பின்வருமாறு  வெளிப்படுத்தினார், "சூழ்நிலைகள் என்னை அறிவியலிலிருந்து விலக்கினாலும், நான் எப்போதும் அதற்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன். இறுதியில், அறிவியல் ஒரு இனிமையான திசைதிருப்பல் மட்டுமல்ல, நவீன வாழ்க்கைக்கு அவசியம் என்பதை உணர்ந்தேன். அரசியல் மற்றும் பொருளாதாரம் வழியாக எனது பயணம் தவிர்க்க முடியாமல் என்னை அறிவியலுக்கும், நமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்குமான அணுகுமுறைக்கும் என்னைத் திரும்பக் கொண்டுவந்தது.”  


இந்தியாவின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (Research and development (R&D)) குறிப்பிடத்தக்க சாதனைகள் பெரும்பாலும் விண்வெளி மற்றும் அணுசக்தி மற்றும் குறைந்த அளவிற்கு பாதுகாப்பில் உள்ளன. இந்திய அரசாங்கங்கள் நீண்ட காலமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், இதற்கான செலவு 0.6% முதல் 0.7% வரை மட்டுமே குறைவாக உள்ளது.  2012-ம் ஆண்டில், புவனேஸ்வரில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸின் போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உலகளாவிய அறிவியலில் இந்தியாவின் நிலை சரிந்து வருவது குறித்து கருத்து தெரிவித்தார். சீனா போன்ற நாடுகள் இந்தியாவை முந்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பொதுவாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவை போதுமானதாக இல்லை என்று சிங் வலியுறுத்தினார். இந்திய அறிவியலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்த அதிக முயற்சிகள் தேவை என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.


இந்தியாவை விட மற்ற நாடுகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்கின்றன என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8%, சீனா 2.1%, இஸ்ரேல் 4.3%, தென் கொரியா 4.2% ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு செலவிடுகிறது. இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை ஆணையம் வழங்கியது. மேம்பட்ட ஆராய்ச்சி திறன்கள் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.  2022-23 பட்ஜெட்டில், நிதியமைச்சர் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (National Research Foundation) உருவாக்குவதாக அறிவித்தார். மேலும், இதில் 50,000 கோடி நிதி உள்ளது. இருப்பினும், இந்த முயற்சியை செயல்படுத்துவதில் முன்னேற்றம் இதுவரை குறைவாகவே உள்ளது.


சீனாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ளுதல்: 


சீனா தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) செலவினங்களை 1990-களில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% இலிருந்து தற்போது 2.1% ஆக உயர்த்தியுள்ளது.  உலகளாவிய தரவரிசையில், சீனா, இப்போது R&D செலவினங்களின் அடிப்படையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இது வாங்கும் திறன் சமநிலையில் (purchasing power parity (PPP)) அளவிடப்படுகிறது. செலவினங்களின் ஒப்பீடானது 2019-ம் ஆண்டில், வாங்கும் திறன் அடிப்படையில் சீனாவின் R&D செலவு $525.7 பில்லியனாக இருந்தது. இது 2018-ம் ஆண்டில் இந்தியாவின் 58.7 பில்லியன் டாலர் செலவை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாகும். ஆராய்ச்சி மற்றும் மேபாட்டுத் துறையில் சீனாவில்   738,000 பேர் பணிபுரிகின்றனர். இது இந்தியாவின் 158,000 ஐ விட கணிசமாக அதிகம். சீனாவின் நோக்கம் தெளிவானது. முன்னாள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வான் காங், "சீனா புதுமையான நாடுகளின் வரிசையில் நுழைந்து 2050-க்குள் ஒரு பெரிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சக்தியாக மாற வேண்டும்" என்று கூறினார். 2023-ல் மேலும் சீர்திருத்தங்களுடன் 15 அமைச்சகங்களை மறுசீரமைப்பதன் மூலம் 2018-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய மாற்றத்தை மேற்கொண்டது.   


இந்தியா தனது சொந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். பல துறைகள் நலிவடைந்துள்ள நிலையில், விண்வெளி மற்றும் அணுசக்தி (space and atomic energy) வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. இந்த துறைகளில் இந்தியா தாராளமாக முதலீடு செய்துள்ளது. இது விண்வெளி ஆணையம் மற்றும் அணுசக்தி ஆணையத்திற்கு கிட்டத்தட்ட முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கியது. பிரதமர் அலுவலகத்தில் இணை அமைச்சர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவை செயலாளர், நிதிச் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள் அடங்கிய மூத்த விஞ்ஞானிகள் தலைமையிலான உயர்மட்ட அமைப்புகள் அதிகாரத்துவ கட்டுப்பாடுகள் இல்லாமல் சில முடிவுகளை எடுத்தன. அதன் பலன்கள் அனைவருக்கும் தெரிகின்றன.


இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் 56 சதவீதமானது பாதிக்கும் மேல் அரசுத் துறையின் பங்கு உள்ளது. மற்ற நாடுகளில், அரசாங்க செலவினம் மிகவும் குறைவாக உள்ளது: சீனா (15 சதவீதம்), ஜெர்மனி (14 சதவீதம்), இங்கிலாந்து (UK) (7 சதவீதம்) மற்றும் ஜப்பான் (8 சதவீதம்) ஆகும். இந்தியா தனியார் துறையை தாராளமான வருமான வரி சலுகைகளுடன் ஊக்குவிக்க முயன்றது. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் அவற்றை தவறாகப் பயன்படுத்தின. இந்தியா தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகளில் 44 சதவீதத்தை மூலதன மேம்பாட்டிற்காக செலவிட்டது. இது சீனா (0 சதவீதம்), இங்கிலாந்து (0 சதவீதம்) மற்றும் அமெரிக்கா (0.2 சதவீதம்) ஆகியவற்றுடன் முரண்படுகிறது. R&D இல் பெரும்பாலான அரசாங்க பணம் அநேகமாக கட்டிடம், கட்டுமானம் மற்றும் நிலங்களை வாங்குவதற்கு செல்கிறது.


சிறந்த இந்திய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அறிவியல், தொழில்நுட்பம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். "அறிவியலின் மர்மங்களை ஆராய்வோம், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் ஆற்றலைப் பயன்படுத்துவோம். டிஜிட்டல் உலகின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வோம். நமது இளைஞர்கள் ஒருவருக்கொருவர்  மேலும் கற்றுக் கொள்வார்கள்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.  


2024-ம் ஆண்டின் பட்ஜெட் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதியளிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும். வருவாய்த் துறையைப் போலவே தொழில்துறை சங்கங்களுடனும் நிதியமைச்சர் பேசுகிறார். வளர்ச்சிக்கான சிந்தனையை உருவாக்க நாட்டின் சிறந்த விஞ்ஞானிகளை ஒன்றிணைக்க நிதியமைச்சர் செய்ய வேண்டிய நேரம் இது. அனைத்து அறிவியல் நிறுவனங்களும் விண்வெளி ஆணையம் மற்றும் அணுசக்தி ஆணையம் போன்ற ஒன்று அல்லது இரண்டு பரந்த அமைப்புகளாக தன்னாட்சியுடன் ஒன்றிணைக்கப்படலாம்.


தனியார் நிறுவனங்களில் உண்மையான ஆராய்ச்சியை அதிகரிக்க, அவர்கள் எவ்வாறு பெருநிறுவன சமூகப் பொறுப்பிற்காகச் செய்கிறார்கள் என்பதைப் போலவே, அவர்களின் லாபத்தில் 2% ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஒதுக்குவது அவர்களுக்கு உதவும். ஒரு நிறுவனம் அல்லது குழுவால் ஒதுக்கப்பட்ட தொகையை செலவிட முடியாவிட்டால், மீதமுள்ள நிதியை தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு (National Research Foundation(NRF)) வழங்கலாம். NRF-ன் நிதியானது மாநில அரசாங்கங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு கிடைக்கும் திட்டத்தை ஆதரிக்க முடியும்.


கட்டிடங்கள் மற்றும் நிலையான சொத்துக்களின் கட்டுமானத்திற்கான செலவுகள் R&D புள்ளிவிவரங்களிலிருந்து விலக்கப்பட வேண்டும். இந்தியா தற்போது மிகக் குறைந்த வளங்களையே செலவிடும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.


மாநில அரசுகள் தங்கள் கடன் வாங்கும் திறனை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 0.5% அதிகரிக்கலாம். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (R&D) கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக இந்த நிதி குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில ஆணையத்துக்கு (State Councils of Science and Technology) ஒதுக்கப்படும். நமது வளர்ச்சி இலக்குகளை அடைய அத்தியாவசியத் துறைக்கு இந்த பட்ஜெட் புத்துயிர் அளிக்க வேண்டும்! 

 

எழுத்தாளர் முன்னாள் கேபினட் செயலாளர் மற்றும் As Good as My Word: a Memoir என்ற நூலை எழுதியவர் ஆவார்.



Original article:

Share: