ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: பாகிஸ்தானை பழிக்கு பழி வாங்காமல் எவ்வாறு கையாள்வது? -சரத் சபர்வால்

 ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களில் ஏழு பாதுகாப்பு வீரர்கள் இறந்துள்ளனர். ஜூன் மாதத்தில் நடந்த நான்கு பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இது நடந்துள்ளது. இதில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தின் தற்போதைய அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகின்றன.


கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது. பல சமாதான முயற்சிகள் மற்றும் பத்தாண்டு கால வலுவான கொள்கைகள் இருந்தும் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவில்லை.


சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்தியாவின் ராஜதந்திரத்தில் சிலரால் உணரப்பட்ட பாதுகாப்பு உணர்வை சீர்குலைத்துள்ளன. மேலும், பாகிஸ்தான் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறது என்று பொதுமக்கள் நம்புகின்றனர். பாகிஸ்தானுக்குள் நிலவும் உள் நாட்டு பிரச்சனைகள், குறிப்பாக 2021 முதல், மாறிவரும் உலகளாவிய அரசியல் சூழல்கள், பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இருப்பினும், இந்த பிரச்சினைகள் இருந்தபோதிலும், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் அவ்வப்போது தொடர்கிறது. கூடுதலாக, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை முழுமையாக நிவர்த்தி செய்வதில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல் போன்ற இந்தியாவின் வலுவான நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து அவர்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.


தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்து வந்தாலும், பாகிஸ்தான் வீழ்ச்சியடையவில்லை. எந்த ஒரு பெரிய நாடும் இதுபோன்ற முடிவை விரும்பாது. குறிப்பாக, பாகிஸ்தானின் அணுசக்தி திறன்களைக் கருத்தில் கொண்டு. பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தவில்லை. மாறாக, அது தனது பயங்கரவாத நடவடிக்கைகளை சரிசெய்துள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழு போன்ற அமைப்புகளின் சர்வதேச அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும், பிற நாடுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் நன்கு அறியப்பட்ட பயங்கரவாதிகளை அகற்றுவது இதில் அடங்கும். ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பின்னரும் பிரச்சனைகள் முழுமையாக தீரவில்லை. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு முன்பு ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதில் பாகிஸ்தானுக்கு சிக்கல்கள் இருந்தன. ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள், பிராந்தியத்தின் அரசியல் போக்கை, குறிப்பாக தேர்தல்களின் போது பாகிஸ்தான் தனது சுயநலத்திற்காக பயன்படுத்துகிறது.

 

"பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது" என்ற கருத்து இந்திய மக்களிடம் எதிரொலித்தது. இது ஒரு நிலையான கொள்கையாக இல்லை. இருதரப்பு தொடர்புகள் 2017-ஆம் ஆண்டின் முற்பகுதி வரை தொடர்ந்தன. 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமைதியான பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் வந்தன. இது பிப்ரவரி 2021-ல் கட்டுப்பாட்டு கோடு (Line of Control) போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது. பொதுமக்களின் உணர்வு இராஜதந்திர முயற்சிகளைக் குறைத்து.

 

பாகிஸ்தான் பல்வேறு உள்நாட்டு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இவை இந்தியாவுக்கு எதிரான அதன் நீண்டகால விரோத நிலைப்பாட்டிலிருந்து மட்டுமல்ல, அப்போதைய பிரதமர் இம்ரான் கான் தலைமையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளிலிருந்தும் உருவாகின்றன. ஆகஸ்ட் 2019-ல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கான இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, கானின் அரசாங்கம் இந்தியாவுடனான வர்த்தகத்தை இடைநிறுத்தியது மற்றும் எதிர்கால இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முடிவை மாற்றியமைக்குமாறு கோரியது. இந்த நிலைப்பாடு பாகிஸ்தானுக்குள் ஆழமான அரசியல் பிளவுகளுக்கு வழிவகுத்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், கான் மற்றும் இராணுவத்தினர் இடையே நட்பு தொடர்கிறது. இதன் விளைவாக, வர்த்தகத்தை மீண்டும் தொடங்க பாகிஸ்தானிய தொழில்துறையினரின் குறிப்பிடத்தக்க அழுத்தம் கொடுத்தபோதிலும், இந்தியாவுடனான வர்த்தகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.   


மேலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) ஷெரீப் கட்சி இந்தியாவிற்கு சமரச செய்திகளை அனுப்ப முயற்சித்தாலும், அவர் முழுமையான அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை, இறுதி முடிவுகள் இராணுவத்தினரிடம் உள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனிரின் கருத்துகள் குறித்து  தகவல்கள் இல்லை. 

 

இந்தியா பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இராஜதந்திர முயற்சிகளில் இறங்கியுள்ளது. இருப்பினும் இந்த முயற்சிகள் குறைந்து அளவே வெற்றியைப் பெற்றுள்ளன. கூடுதலாக, சர்வதேச மன்றங்களில் இந்தியாவைப் பற்றிய பாகிஸ்தானின் எதிர்மறையான அறிக்கைகளை இந்தியா அடிக்கடி எதிர்க்கிறது. எவ்வாறாயினும், இந்த பாதுகாப்பு அணுகுமுறை பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் நீடித்த மாற்றத்தைக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது. குறிப்பாக சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ உறவு வலுவானதாக மாறியது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானின் நீண்டகாலப் பிரச்சினையான எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து பேசுவதற்கு முன்னுரிமை அளித்தார். இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் என்ன கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புத் திறன்களை வலுப்படுத்துவதும், உறுதியான தண்டனை அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதும் தேவையான நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன. எவ்வாறாயினும், வன்முறை அதிகரிப்பதைத் தவிர்க்க எந்தவொரு தண்டனை நடவடிக்கையும் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும். கூடுதலாக, இந்திய பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை விடாமுயற்சியுடன் எதிர்கொள்ளும் அதே வேளையில், இராஜதந்திர முயற்சிகளும் பதட்டங்களைக் குறைப்பதற்கான வழிகளைத் கண்டறிய வேண்டும். பாகிஸ்தானின் உள் நாட்டு பிரச்னை மற்றும் நிலையற்ற எல்லைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுடன் சுமுகமான உறவைத் தொடர்வது இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 


எழுத்தாளர் பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதரக உயரதிகாரிஆவார்.



Original article:

Share: