மக்கள்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதில் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-அன்று உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்தியா மக்கள் தொகையில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. பிரபல மக்கள்தொகை ஆய்வாளரான மருத்துவர் கே.சி.சகரியா (Dr. K.C. Zachariah) உலக மக்கள்தொகை தினம் அனுசரிக்கும் யோசனையை முன்வைத்தார். இதனை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை 1989-ஆம் ஆண்டில் இந்த நாளை உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்க தொடங்கியது. 1987-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை ஐந்து பில்லியனை எட்டியது. குறிப்பாக, வளரும் நாடுகளில் வறுமை, சுகாதாரம் மற்றும் பாலின சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியது.
உலக மக்கள் தொகை தினம்
மக்கள் மற்றும் மக்கள் தொகை வழக்கு. அதிக மக்கள் தொகை கொண்ட தேசத்திற்கான பாதை.
1960 மற்றும் 1970-களில், உலக மக்கள் தொகை ஆண்டு விகிதத்தில் 2% அதிகரித்து. இந்த வளர்ச்சி விகிதம் இந்தியாவில், வறுமை, பசி மற்றும் இறப்பு பற்றிய அச்சத்தை அதிகரித்தது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் கணிப்புகளுக்கு மாறாக இந்தியா மக்கள் தொகையில் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. உலகம் முழுவதும் கருவுறுதல் விகிதம் குறையத் தொடங்கியது. 1970-களில் இருந்து இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. வாழ்க்கை நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளின் மேம்பாடு ஆயுட்காலம் அதிகரிக்க வழிவகுத்தது. பல்வேறு சுகாதார நடவடிக்கைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. இந்தியாவில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது.
2015-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை நிலையான வளர்ச்சி (Sustainable Development Goals (SDGs)) இலக்கு என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியது. இது விரைவாக நாடுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான முக்கிய நடவடிக்கைகளாக மாறியது. 2030-ஆம் ஆண்டு நெருங்கி வருவதால், நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்தியாவின் முன்னேற்றம் அதன் மக்கள்தொகை மாற்றங்களின் பின்னணியில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
இந்தியாவின் மக்கள்தொகை போக்குகள்
இந்தியாவின் மக்கள்தொகை நிலப்பரப்பு, கருவுறுதல், இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகிய மூன்று முக்கிய காரணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, இந்தியா கருவுறுதலில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (National Family Health Survey (NFHS-5)) படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (total fertility rate (TFR)) 1992 மற்றும் 2021-க்கு இடையில் 3.4-லிருந்து 2-ஆக குறைந்து, கருவுறுதல் விகிதம் மாற்று நிலை 2.1-க்கும் கீழே குறைந்துள்ளது. இறப்பு விகிதங்களும் குறைந்துள்ளன. இது இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்த மக்கள்தொகை மாற்றம் வயதான மக்கள்தொகையை நோக்கி செல்கிறது. 60-வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தனிநபர்கள் 2011-ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் 8.6%-ஆக இருந்தனர். இது 2050-ஆம் ஆண்டில் 19.5%-ஐ எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாறும் போக்குகள் உண்மையில் எதைக் குறிக்கிறது?
இந்தியாவின் வீழ்ச்சியடையும் கருவுறுதல் விகிதம் சிறிய குடும்பங்களை நோக்கி நகர்வதை பிரதிபலிக்கிறது. இந்தப் போக்கு, மக்கள் சார்ந்தவர்களின் விகிதத்தைக் குறைக்கலாம். உழைக்கும் வயது மக்கள்தொகையைச் சார்ந்திருக்கும் மக்கள்தொகையை விட அதிகமாக இருக்கும் காலகட்டம் இது. வேலைகளை உருவாக்குவதன் மூலம் இந்தியா தனது இளம் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இறப்பு விகிதங்களின் வீழ்ச்சி மற்றும் ஆயுட்காலம் அதிகரிப்பு ஆகியவை வலுவான சுகாதார அமைப்பு மற்றும் மேம்பட்ட வாழ்க்கை நிலைமைகளை எடுத்து காட்டுகிறது.
முதியோர் பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நலன்கள் உட்பட, நீண்ட காலத் திட்டம் இந்தியாவுக்குத் தற்போது தேவைப்படுகிறது. கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு விரைவான இடம்பெயர்வு காரணமாக நகர உள்கட்டமைப்புகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. பாலின சமத்துவத்தை உறுதி செய்வது மிக முக்கியமானது. பணியிடத்தில் பெண்களின் குறைந்த பங்கேற்பு, அரசியலில் குறைவான பிரதிநிதித்துவம் மற்றும் தொடர்ந்து சமூக சவால்கள் ஆகிய சிக்கல்களும் உள்ளது. இந்தியாவில் சில குழுக்கள் எதிர்கொள்ளும் சமூக சவால்கள் குறிப்பிடத்தக்கவை. இந்தச் சிக்கல்கள் 2030-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் இலக்குகளை நோக்கி முன்னேறுவதைத் தடுக்கலாம்.
இந்தியா தனது 2030 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இன்னும் ஆறு ஆண்டுகள் உள்ளன. பாலின சமத்துவம் மற்றும் சமூக-கலாச்சார பிளவுகள் உள்ளிட்டவை இந்த முயற்சிக்குத் தடையாக இருக்கலாம். இந்த சவால்களை புரிந்துகொள்வதும் அவற்றை எதிர்கொள்வதும் நிலையான வளர்ச்சிக்கு அவசியம்.
நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகள் நோக்கிய பயணம்
வளர்ச்சி (‘Development’) என்பது அனைவருக்கும் உணவு, தங்குமிடம் மற்றும் ஆரோக்கியம் போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்குவதாகும். முக்கிய நிலையான வளர்ச்சி இலக்குகள் 'முற்றிலும் வறுமையற்ற நிலை, பசியற்ற நிலை மற்றும் நல்ல ஆரோக்கியம்' ஆகும். மக்கள்தொகை பேரழிவைத் தவிர்ப்பதற்கும், 2030-க்குள் இந்த இலக்குகளை அடைவதற்கு இந்தியா முன்னேற்றம் மற்றும் பின்னடைவு ஆகிய இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்.
1990 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் வறுமை 48% முதல் 10% வரை கணிசமாகக் குறைத்தது. 2006-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) கிராமப்புற வறுமையை ஒழிக்க பெரிதும் உதவியது. ஜனனி சுரக்ஷா யோஜனா (Janani Suraksha Yojana), கர்ப்பிணிப் பெண்களுக்கு பண சலுகைகள், மருத்துவமனை பிரசவங்களை அதிகரித்தல் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு குறைந்த சுகாதார செலவுகள் ஆகியவற்றை வழங்குவதற்காக 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
பால் ஆர் எர்லிச் (Paul R. Ehrlich) தனது 1968-ஆம் ஆண்டு "மக்கள்தொகை குண்டு" (The Population Bomb) என்ற புத்தகத்தில், இந்தியா தனது மக்களுக்கு உணவளிக்கும் எதிர்கால திறனை பற்றி கேள்வி எழுப்பினார். பசுமைப் புரட்சி இந்தியாவை பயிர் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது மற்றும் பட்டினி விகிதங்களை 2001-ல் 18.3%-ஆக இருந்து 2021-ல் 16.6%-ஆகக் குறைத்தது. இருப்பினும், இந்தியா இன்னும் குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்து பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது. 2018-ல் போஷன் அபியான் ((POSHAN) Abhiyaan) அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், ஊட்டச்சத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம், 2030-க்குள் 'பசியற்ற நிலை (‘Zero Hunger’) என்ற இலக்கை அடைவது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும்.
இந்தியாவில் சுகாதாரம் என்பது குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்துள்ள ஒரு துறையாகும். பல்வேறு இறப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தாய்வழி இறப்பு விகிதம் (Maternal Mortality Rate) 2000 ஆண்டில், 384.4-ல் இருந்து 2020-ல் 102.7-ஆக குறைந்தது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2000-ஆம் ஆண்டில் இருந்து கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த விகிதம் 2000-ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 66.7-ஆக இருந்து 2021 இல் 25.5-ஆக குறைந்தது. இந்தியா இன்னும் அதன் அனைத்து சுகாதார இலக்குகளையும் அடையவில்லை என்றாலும், இந்த மேம்பாடுகள் நாடு சரியான திசையில் நகர்வதைக் காட்டுகின்றன. சுகாதாரத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது.
இந்த சாதனைகள் இருந்தபோதிலும், 2030-ஐ நோக்கிய இந்தியாவின் பாதை எளிதானது அல்ல. ஆக்ஸ்பாம் (Oxfam) கருத்துப்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் 10% செல்வந்தர்கள் நாட்டின் மொத்த செல்வத்தில் 77% செலவத்தை வைத்துள்ளனர். வளர்ச்சியின் பலன்கள் நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்படாமல், செல்வம் இப்போது இருப்பதைப் போலவே அதிக அளவில் குவிந்திருந்தால், அதன் உண்மையான வடிவத்தில் 'நிலையான வளர்ச்சியை' அடைவது கடினமாக இருக்கும். மொத்த உள் நாட்டு வளர்ச்சி அதிகரித்த போதிலும், முதல் 1% பேர் 40% செல்வத்தைக் கட்டுப்படுத்தும் போது அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். பசி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவை முக்கியமான பிரச்சனைகளாகும். உலகளாவிய பசி தரவரிசையில் 2023 ஆம் ஆண்டில் 125 நாடுகளில் இந்தியா 111-வது இடத்தில உள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைவான குழந்தைகள் மற்றும் பெண்களின் இரத்த சோகை ஆகியவை முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்தியாவும் இரட்டை சுகாதார சவாலை எதிர்கொள்கிறது, தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்கள் (non-communicable diseases (NCDs)) மக்கள்தொகைக்கு சுமையாக உள்ளன. தொற்று அல்லாத நோய்களின் அதிகரித்து வரும் தாக்கங்களை சமாளிப்பது மற்றும் வயதானவர்களின் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்வது நாட்டிற்கு குறிப்பிடத்தக்க சவால்கள் ஆகும்.
கவனிக்க வேண்டியவை
நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான கொள்கைகளை உருவாக்கும்போது மாறிவரும் மக்கள்தொகை போக்கை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். வருமான சமத்துவமின்மையை சமாளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், சில குடும்பங்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தும் தொற்றா நோய்களின் அதிக செலவுகள் உட்பட வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். குடும்பங்கள் வறுமையில் வாழ்வதை தடுக்க அவர்களுக்கு ஏற்றவாறு வறுமை ஒழிப்பு கொள்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும். ஊட்டச்சத்து திட்டங்களை மேம்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. பாலின சமத்துவம் என்பது வளர்ச்சி விவாதங்களில் பெரும்பாலும் கவனிக்கப்படாத மற்றொரு முக்கியமான அம்சமாகும். ஆனால், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தியாவிற்கு இந்த நடவடிக்கைகள் பயனளிக்கும்.
நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDGs)) அடைய செய்ய இந்தியா கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு, பல்வேறு துறைகளிடையே ஒத்துழைப்பும், வலுவான அரசியல் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம் அதன் மக்கள்தொகையின் நல்வாழ்வோடு இணைக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகைப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதும் அவற்றைத் தீர்ப்பதும் இந்த இலக்குகளை அடைவதற்கான முக்கிய படிகளாகும்.
பரமிதா மஜும்தார் மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தில் (International Institute for Population Sciences (IIPS)) மக்கள்தொகை ஆய்வுகளில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். நிதின் குமார் ஒரு சுயாதீன ஆராய்ச்சியாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சட்டமன்ற உதவியாளராக (Legislative Assistant to Members of Parliament (LAMP)) (2023-24) புது டெல்லியில் பணியாற்றினார்.