மோடி 3.0-க்கு உற்பத்தி 3.0 இன் வடிவம் -ரிச்சர்ட் ரோசோ

 இந்தியா வலுவான உற்பத்தித் தளத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.      

 

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். புதிய அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பாக உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தியா தொடர்ந்து நகரமயமாகி வருவதால், அடுத்த பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் விவசாயத் தொழிலாளர்கள் முறையான வேலைகளைத் தேடி நகரங்களுக்குச் செல்வார்கள். குறைந்த திறன் கொண்ட வேலைகள் உருவாக்கப்படாவிட்டால், அது அரசின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். உற்பத்தி வெற்றி என்பது இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான வளங்களை அதிகரிப்பதாகும். இந்த வெற்றி அமெரிக்காவின் நலன்களுக்கு  முழுமையாகப் பயனளிக்கும். 


உற்பத்தி தளத்தை மேம்படுத்த வேண்டும் 


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம்  2014-ஆம் ஆண்டில் பதவியேற்ற போது, 2025-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% முதல் 25% வரை உற்பத்தியை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். 2017-ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி போன்ற முக்கிய சீர்திருத்தங்கள் இந்தியாவின் வரி முறையை எளிமைப்படுத்துவதன் மூலம் இலக்கை எளிதில் அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


உலக வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவில் உற்பத்தி குறைந்து வருகிறது. 2022-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% மட்டுமே உள்ளது.  வியட்நாம் (25%), வங்கதேசம் (22%), மலேசியா (23%), இந்தோனேசியா (18%), மெக்சிகோ (21%), மற்றும் சீனா (28%) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உற்பத்தி குறைவாக இருக்கிறது.


பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் இந்திய தனது உற்பத்தி தளத்தை மேம்படுத்த வேண்டும். முதலாவதாக, இந்தியா பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய தொழிலாளர்களில் பாதி பேர் குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். பெரிய விவசாய சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றால், பல தொழிலாளர்கள் விரைவில் விவசாயத்தை விட்டு வெளியேறுவார்கள். இந்தத் தொழிலாளர்கள் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான சேவைத் துறைக்கு ஏற்றவர்கள் இல்லை. எனவே, அவர்களுக்கு ஏற்ற வேலை வழங்குவதற்கு, இந்தியாவின் உற்பத்தி தளத்தை மேம்படுத்த வேண்டும். 


உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவின் முயற்சிக்கு இரண்டாவது காரணம் சரக்கு வர்த்தக பற்றாக்குறை ஆகும். "எதிர்ப்பு வர்த்தகமாக" (“anti-trade”) பார்க்கப்பட்ட போதிலும், கடந்த 12 மாதங்களில் $250 பில்லியன் பற்றாக்குறையுடன், இந்தியா சரக்கு வர்த்தகம் $1 டிரில்லியன் ஆக இருந்தது. ஹைட்ரோகார்பன் இந்தியாவின் இறக்குமதியில் கால் பங்கிற்கு மேல் உள்ளது. மேலும், மின்னணுவியல் போன்ற உற்பத்தி பொருட்கள் இறக்குமதியில் முக்கிய பங்காற்றி வருகிறது. 


பரந்த வர்த்தக சூழலில், இந்தியா கடந்த 12 மாதங்களில், மொத்த சேவை வர்த்தகத்தில் $518 பில்லியன் சேவை வர்த்தகத்தில் இந்தியா $160 பில்லியன் உபரியாக இருந்தது. இருப்பினும், சேவைத் துறையானது அதிக பொருளாதார உற்பத்தியை உருவாக்கினாலும், ஒப்பீட்டளவில் குறைவான தொழிலார்களே வேலை பெறுகின்றனர்.

 

வலுவான உற்பத்தித் தளத்தை உருவாக்குவதில் இந்தியாவை ஆதரிக்க அமெரிக்காவிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது: முதலாவதாக, வலுவான தொழில்துறை தளம், பிராந்திய பாதுகாப்பில் இந்தியா ஒரு பெரிய பங்கை வகிக்க உதவும். குறிப்பாக, சீனாவின் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக இது போன்ற நடவடிக்கைகள் முக்கியம். இரண்டவதாக, சில உற்பத்தி வேலைகள் அமெரிக்காவிற்கு திரும்பாது. எனவே, இந்திய உற்பத்தியை அதிகரிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


மாநிலங்கள் மற்றும் அவற்றின் வணிகச் சூழல்கள்


மாநிலங்களுக்கிடையே போட்டியை ஊக்குவிக்க ஒன்றிய அரசின் ஆரம்ப கால  முயற்சிகள் வெற்றி பெறவில்லை.


கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு மாநிலங்களின் வணிகச் சூழல்களின் "வணிக சீர்திருத்த செயல் (Business Reforms Action Plan (BRAP))" திட்டம் குறித்த தரவரிசைகள் புதுப்பிக்கப்படவில்லை. இந்த தரவரிசைகள் பலவீனமானதாகக் கருதப்பட்டன. ஏனெனில், அவை மாநிலங்களின் சுய-அறிக்கையை நம்பியிருந்தன. இது உண்மையான முதலீட்டாளர்களின் தரவுகளுடன் பொருந்தவில்லை. மாநிலங்களுக்கு முன்மாதிரியான தொழில் சட்டங்களை உருவாக்கும் மத்திய அரசின் திட்டம் எந்த விதமான முன்னேற்றமும் அடையாமல் உள்ளது.  


இந்தியாவின் பாதி மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மீதமுள்ள மாநிலங்களில் பிராந்திய  கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. இந்தியாவின் பிராந்தியக் கட்சிகள்  ஒன்றிய அரசுடன்  வெவ்வேறு உறவு நிலைகளைக் கொண்டுள்ளன. தெளிவான தொழில்துறை கொள்கைகளை பின்பற்ற மாநிலங்களை ஊக்குவிப்பது சவாலானது, சிறந்த சலுகைகள் மற்றும் அபராதங்கள் தேவைப்படும். குறைக்கடத்திகள் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற உயர் தொழில்நுட்ப துறைகளில் முதலீடுகளில் கவனம் செலுத்துவதை விட, ஜவுளி, காகித ஆலைகள் மற்றும் தளபாடங்கள் போன்ற துறைகளில் வேலைகளை உருவாக்குவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  


டெல்லி-மும்பை-பெங்களூரு சுற்றுவட்டத்தைத் தாண்டிச் செல்லுங்கள் 


இந்திய மாநிலங்களில் வணிகத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்க அமெரிக்காவால் உதவ முடியும். பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், முதலீட்டாளர்கள் மாநில அரசுகளுடன் இணைவதை எளிதாக்குவதற்கும் மாநிலங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதும் இதில் அடங்கும். அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிற்கு வருகை தரும் போது, ​​அவர்கள் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவை விட மற்ற மாநிலங்களின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உலகளவில் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக உருவாகியுள்ள வாய்ப்புகளை பற்றி பேச அவர்கள் பெரிய மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

 

இந்தியாவின் நடந்து முடிந்த பொது தேர்தல், கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கான களமாக இருந்தது. நாட்டின் பெரிய சந்தை அளவு மற்றும் வளர்ச்சி விகிதங்கள் முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. ஆனால், "மேக் இன் இந்தியா" (“Make in India”) போன்ற முயற்சிகள் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் வேலைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான தேவைகள் மாறாமல் உள்ளன. இந்த சூழலை மாற்றுவதற்கு, மாநில அளவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.


ரிச்சர்ட் ரோஸ்ஸோ, அமெரிக்கா-இந்தியா கொள்கை ஆய்வுகளில் இராஜதந்திர மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தில் (Center for Strategic and International Studies (CSIS)) தலைவராக உள்ளார். 



Original article:

Share: