மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் வடக்கு இந்தியப் பெருங்கடல் இரண்டும் மீண்டும் செயல்பாட்டில் உள்ள புவியியலாக மாறியுள்ளன.
ஜனவரி 2021 முதல், இந்திய அரசாங்கம் இந்தோ-பசிபிக் பகுதியில் கவனம் செலுத்தி, Quad நாடுகளை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டன. இருப்பினும், அக்டோபர் 2023 முதல், அதன் கவனமானது இந்தியப் பெருங்கடலின் பக்கம் திரும்பியது. இதன் மூலம் இந்தோ-பசிபிக் இராஜதந்திர கொள்கையானது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்கள் இரண்டையும் உள்ளடக்கியிருந்தாலும், அதிக ஆபத்தான காலங்களில், தொலைதூர பகுதிகளுக்குப் பதிலாக அருகிலுள்ள பகுதிகளுக்கு கவனம் செலுத்துகிறது.
கொள்கை மாற்றம்
மாலத்தீவின் அதிபராக முகமது முய்ஸு பதவி வகித்ததிலிருந்து, இந்தியாவுடன் மோதலில் ஈடுபடுவதாக தெரிகிறது. இந்தியா பொறுமையாகவும் ராஜதந்திரமாகவும் இருந்தாலும், மாலத்தீவு சீனாவுடன் நெருக்கமாகி வருகிறது. இதற்கு நேர்மாறாக, சீன கப்பல்கள் உட்பட வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு (foreign research ships) தனது துறைமுகங்களுக்கு ஒரு வருட கால தடை விதித்ததன் மூலம், இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளுக்கு இலங்கை அதிக உணர்திறனைக் காட்டியது. கடந்த மாதம், இந்தியாவின் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (Security and Growth For All in the Region (SAGAR)) கொள்கையானது இந்தியா மற்றும் மொரீஷியஸின் பிரதமர்கள் அகலேகா தீவுகளில் ஒரு புதிய விமான ஓடுதளம் (new airstrip) மற்றும் ஜெட்டியை (jetty) திறந்து வைத்ததால் மதிப்புமிக்கதாக உருவாக்கியது. இது, மொரீஷியஸின் பரந்த விரிவாக்கப்பட்ட பொருளாதார மண்டலத்தில் (vast Extended Economic Zone) சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் திறனை உயர்த்தியது.
மேற்கு இந்தியப் பெருங்கடலில் பல தீவு நாடுகள் உள்ளன. வட இந்தியப் பெருங்கடல், அரபிக்கடலில் முதல் சூயஸ் வரை செல்கிறது. இரண்டு பகுதிகளும் இப்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் படிப்படியான பிராந்தியமயமாக்கல், சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான ஹூவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் பிரதிபலித்தது. இப்போது, சூயஸ் கால்வாய் வழியான போக்குவரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. நன்னம்பிக்கை முனையைச் சுற்றியுள்ள (Cape of Good Hope) நீண்ட பாதைக்கு கப்பல்களை திருப்பி விடுவது, இப்பகுதியில் உள்ள பெரிய அல்லது சிறிய அனைத்து நாடுகளையும் மோசமாக பாதிக்கிறது.
தொடர்ச்சியான புதிய முன்னேற்றங்கள் சீன கடற்படையை பிராந்தியத்தில் பெரியதாக மாற்றும். அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பதைக் காட்டுவதே அவர்களின் முக்கிய குறிக்கோள். மாலத்தீவுடனான நெருங்கிய உறவில் புதிய ஒப்பந்தத்தை பெய்ஜிங் விரைவில் அறிவித்தது. இந்த ஒப்பந்தமானது, மாலத்தீவுக்கு இலவச, குறிப்பிடப்படாத இராணுவ உதவியை வழங்குகிறது. மாலத்தீவுகள் இந்த உதவியை ஏற்க தயாராக உள்ளன. நாட்டின் அனுமதியுடன் மனிதாபிமான விமானங்களை இயக்கிய 88 இந்திய ராணுவ வீரர்கள், ஒரு சிவிலியன் குழுவினால் (civilian group) மாற்றப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி வலுப்பெற்று வருகிறது. சீனாவின் வர்த்தக மற்றும் எரிசக்தி தேவைகளில் பெரும்பாலானவை இந்த பகுதி வழியாக செல்கின்றன. எனவே, சீனா தனது வர்த்தக பாதைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், இந்தியாவின் பாதுகாப்பை சீர்குலைக்கும் சீனாவின் உத்திதான் பிரச்சினையாக உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகள் மீது செல்வாக்கு செலுத்துவதன் மூலம் அதனை செயல்படுத்துகிறது. ஜிபூட்டி (Djibouti), கியாக்பியூ (Kyaukphyu), குவாடர் (Gwadar) மற்றும் அம்பாந்தோட்டை (Hambantota) போன்ற இடங்களில் கடற்படை தளங்களை நிறுவுவதற்கான சீனாவின் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க இராஜதந்திரமாக உள்ளது. ஒரு இராஜதந்திர தீர்வு இல்லாமல் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நீடித்த இந்தியாவுடனான எல்லை மோதலுடன், இரு நாடுகளும் எதிரிகளாக எதிர்கொள்வதைக் குறிக்கிறது.
வலுவான உறுதியுடன் இந்தியா ஒரு "மிரட்டலை" (bully) எதிர்கொள்கிறது என்று இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் சமீபத்தில் குறிப்பிட்டார். எல்லைப் பிரச்சினைகள் மற்றும் இந்தோ-பசிபிக் நிலைமை குறித்து அவர் பேசினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு இது ஒரு முக்கியமான நேரம் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த விஷயத்தில் முக்கிய பங்கேற்பாளர்களாக உள்ளன. இவ்விரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது சீனாவின் இராஜதந்திர சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவுகிறது. புதிய அச்சுறுத்தல்களைக் கையாளுவதற்கு நீருக்கடியில் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதில் ஒத்துழைப்பது முக்கியம்.
அமெரிக்காவைத் தவிர, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் நிலைப்பாடுகள் இந்து சமுத்திரம் தொடர்பான போட்டிகள் என்ன? அவர்கள் பிராந்தியத்திற்கு நெருக்கமாக இருப்பதால், சீனா என்ன செய்கிறது என்பதில் தெளிவான நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். தென் சீனக் கடலில் சீனாவின் சட்டவிரோத உரிமைகோரல்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள். அதே நேரத்தில், இந்தியப் பெருங்கடலில் இதேபோன்ற உறுதியான மற்றும் விரோதமான நடத்தை நடப்பதையும் அவர்கள் கவனிக்கிறார்கள். ஒவ்வொரு வீரரும் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறார்கள். முன்னேற்றம் படிப்படியாக நடக்கிறது. இருப்பினும், சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் அதன் நீண்ட கால இலக்குகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி அவர்கள் தெளிவாக இல்லை. ஐரோப்பிய நாடுகள் சீனாவிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. அவர்கள் தங்கள் ஆசிய நாடுகளின் இராஜதந்திரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் உக்ரைன் மற்றும் காஸாவில் உள்ள மோதல்களில் கவனம் செலுத்துவதால் அவர்கள் அதைச் செய்வார்களா? ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் அறிஞர்களுடனான சமீபத்திய பேச்சுக்கள் நமக்கு சிறிய நம்பிக்கையைத் தருகின்றன. எனவே, நாம் அவர்களை நம்ப வைக்க முயற்சிக்க வேண்டும்.
இந்தியாவின் பிற விருப்பங்கள்
அரசாங்கம் பரிசீலிக்க வேண்டிய பல உத்திகள் உள்ளன. முதலாவதாக, இந்தோ-பசிபிக்கில் தனது பொறுப்புகளை அங்கீகரித்தாலும், அதன் முக்கிய கவனம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் என்பதை இந்தியா தனது இராஜதந்திர உறுப்பு நாடுகளிடம் தெளிவுபடுத்த வேண்டும். இரண்டாவதாக, இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கம் (Indian Ocean Rim Association (IORA)) மற்றும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு (Colombo Security Conclave (CSC)) ஆகியவற்றின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வது முக்கியம். இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கம் (IORA) மிகவும் பயனுள்ளதாக இல்லை. மேலும், கொழும்பு பாதுகாப்பு மாநாடு (CSC) ஒரு உறுப்பினராக மாலத்தீவை இழக்கக்கூடும். ஏனெனில், மாலத்தீவு சீனாவுடன் நெருங்கி வரக்கூடும். கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் புதிய குழுவைத் தொடங்குவது இந்தியாவின் விருப்பமாக இருக்கலாம். இந்த புதிய குழுவில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், மொரீஷியஸ், சீஷெல்ஸ், கொமொரோஸ் மற்றும் மடகாஸ்கர் ஆகியவை அடங்கும். மாலத்தீவுகள் விவேகமான கொள்கையைப் பின்பற்றினால் ஒன்பதாவது இடத்தைப் பெறலாம். இதனால், இந்தக் குழுவை 'இந்தியப் பெருங்கடல் ஒத்துழைப்பு அமைப்பு' (Indian Ocean Cooperation Organisation) என்று அழைக்கலாம். வெளிவிவகார நுண்ணறிவு மற்றும் மதிப்பாய்வு இந்திய கடற்படையை உலகளவில் ஏழாவது சக்திவாய்ந்ததாக மதிப்பிட்டுள்ளது. இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், அதன் கடற்படையை மூன்றாவது அல்லது நான்காவது வலிமையானதாக மாற்றுவதற்கு அதிக பட்ஜெட் ஆதாரங்களைக் கண்டறிய வேண்டும்.
ராஜீவ் பாட்டியா முன்னாள் தூதர் மற்றும் 'இந்தியா-ஆப்பிரிக்கா உறவுகள்: மாறும் எல்லைகள்' (India-Africa Relations: Changing Horizons) என்ற புத்தகத்தின் ஆசிரியர்.