பன்முகப்படுத்தப்பட்ட விவசாயத்தின் முக்கியத்துவம் - அசோக் குலாட்டி, பிதிஷா சந்தா

 பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க மற்ற மாநிலங்களிலிருந்து மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்..


ஒரு எளிய கேள்வியுடன் ஆரம்பிக்கலாம்: ஒரு ஹெக்டேருக்கு விவசாயத்தில் மதிப்பை உருவாக்கும் வகையில் எந்த மாநிலம் அதிக உற்பத்தித் திறன் கொண்டது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் பஞ்சாப் என்று நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அதிக அரிசி மற்றும் கோதுமை உற்பத்தித்திறனுக்காக அதிக உற்பத்தியை பெற்ற போதிலும், பஞ்சாப் இந்திய மாநிலங்களில் விவசாய மதிப்பின் அடிப்படையில் (ஓரு ஹெக்டேருக்கு விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி) 13 வது இடத்தில் உள்ளது.  இதை குறைந்தபட்சம் இரண்டு வழிகளில் நாம் மதிப்பிடலாம்: முதலாவதாக, மாநிலத்தின் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதன் நிகர விதைப்புப் பகுதியின் (Net Sown Area (NSA)) மூலம் பிரிப்பதன் மூலம்; இரண்டாவதாக, வேளாண்-ஜிடிபியை அதன் மொத்த பயிர்ப் பகுதியால் (Gross Cropped Area (GCA)) பிரிப்பதன் மூலம், இது பயிர்த் தீவிரத்தைக் குறிப்பிடுகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான இரண்டு குறிகாட்டிகளையும் பயன்படுத்துவோம்.


நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (Net State Domestic Product (NSA)) மூலம் ஒரு ஹெக்டேருக்கு விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியை பகுப்பாய்வு செய்யும் போது, ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 6.43 லட்சம் வருமானம் கிடைக்கிறது. மேற்கு வங்கம் ஹெக்டேருக்கு 5.19 லட்சம் ரூபாய்க்கு அடுத்த இடத்தில் உள்ளது, தமிழ்நாடு ஹெக்டேருக்கு 5.14 லட்சம் ரூபாய். பஞ்சாப் ஹெக்டேருக்கு ரூ.3.71 லட்சம் உற்பத்தி செய்து 13வது இடத்தில் உள்ளது, ஜார்கண்ட் பஞ்சாபை விட ஹெக்டேருக்கு ரூ.4.41 லட்சத்துடன் முன்னிலையில் உள்ளது.


ஒரு ஹெக்டேருக்கு மொத்த பயிர் செய்யப்பட்ட பகுதியின் (Gross Cropped Area (GCA)) விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பார்க்கும்போது வேறுபாடுகள் இன்னும் தெளிவாகத் தெரியும். இந்த அளவீட்டில் பீகார் ஹெக்டேருக்கு ரூ.2.18 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஹெக்டேருக்கு முறையே  ரூ.2.57 லட்சம் மற்றும் ரூ.2.34 லட்சத்துடன், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களும் பஞ்சாபை விட சிறப்பாக செயல்படுகின்றன.  இந்த பட்டியலில் பஞ்சாப் ஹெக்டேருக்கு ரூ.1.92 லட்சத்துடன் குறைவாக உள்ளது.


மற்ற மாநிலங்கள் விவசாய மதிப்பில் பஞ்சாபை விட சிறந்து விளங்குகின்றன, ஏனெனில் அவை குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) பெரிதும் நம்புவதற்குப் பதிலாக பலதரப்பட்ட உயர் மதிப்புப் பொருட்களில் கவனம் செலுத்துகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP), இலவச மின்சாரம் மற்றும் மலிவான உரங்கள் ஆகியவற்றின் காரணமாக பஞ்சாப் முக்கியமாக அரிசி மற்றும் கோதுமையை விளைவிக்கிறது. 1986 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஜோல் கமிட்டி (Johl Committee) அறிக்கைகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பஞ்சாப் அதன் பயிர்களை பன்முகப்படுத்தவில்லை. தற்போது, பஞ்சாபின் மொத்த விளைச்சலில் 84% கோதுமை மற்றும் அரிசிக்காக உள்ளது, இது 76% நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துகிறது.


பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அரிசியை மட்டும் பயிரிடுவதை விட்டு விலக புதிய திட்டம் அவசரமாக தேவைப்படுகிறது. சுற்றுச்சூழல் பேரழிவைத் தவிர்க்க, குறைந்தபட்சம் 1.5 மில்லியன் ஹெக்டேர் நெல் வயல்களில் சுமார் 4.5 ஹெக்டேரில் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், மக்காச்சோளம் கோழி வளர்ப்பு மற்றும் எத்தனால், மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடிக்கு மாற்றப்பட வேண்டும். இந்த மாற்றத்தை சாத்தியமாக்க, இந்த மாற்றுப் பயிர்களை பயிரிடும் விவசாயிகள் நெல்லில் இருந்து இந்தப் பயிர்களுக்கு மாறும்போது ஹெக்டேருக்கு சுமார் ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இந்தத் தொகை மின்சாரம் மற்றும் உர மானியங்களில் இருந்து அவர்கள் சேமிக்கும் குறைந்தபட்ச தொகையாகும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து 50:50 என்ற அடிப்படையில் இந்த சலுகைகளை வழங்க வேண்டும்.


விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஏற்கனவே அதிக மதிப்புள்ள விவசாயத்திற்கு மாறியுள்ள மாநிலங்களிலிருந்து கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, பஞ்சாபுடன் ஒப்பிடும்போது ஆந்திராவின் விவசாயிகள் நிகர விதைப்பு பரப்பில் ஹெக்டேருக்கு 74% அதிக மதிப்பை உருவாக்குகிறார்கள். ஆந்திராவின் வெற்றிக்கு பெரும்பாலும் அதன் செழிப்பான உள்நாட்டு மீன்வளம் காரணமாகும். இது அதன் விவசாய மதிப்பில் 24% மற்றும் தேசிய மீன் உற்பத்தியில் 30% பங்களிக்கிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை இறால் வளர்ப்பு போன்ற உயர் மதிப்பு பயிர்களில் பன்முகப்படுத்துவதன் மூலம் இந்த மாதிரியைப் பின்பற்றலாம்.


பழ சாகுபடியில், குறிப்பாக மாம்பழம் மற்றும் வாழை சாகுபடியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அவை, அதன் பழ உற்பத்தியில் 80% க்கும் அதிகமாக உள்ளன. பழங்கள் மீதான இந்த கவனம் பஞ்சாப்புடன் ஒப்பிடும்போது விவசாயத்தில் 39% அதிக மதிப்பை உருவாக்க வழிவகுக்கிறது. இந்த வெற்றி பஞ்சாபி விவசாயிகள் தோட்டக்கலையில் பன்முகப்படுத்துவதன் மூலமும், புதுமையான விவசாய முறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் திறனை எடுத்துக்காட்டுகிறது.


தமிழ்நாட்டு விவசாயிகள் மாம்பழங்களை வளர்ப்பதற்கு தீவிர அதிக அடர்த்தி கொண்ட வேளாண்மை (Ultra High-Density Plantation (UHDP)) என்ற முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்த தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு ஏக்கரிலும் 674 மா மரங்களை நடலாம். மாறாக, பாரம்பரிய முறையில் ஒரு ஏக்கருக்கு 40 மரங்கள் மட்டுமே பொருந்தும். இந்த அணுகுமுறை மா விவசாயத்தின் மகசூல் மற்றும் லாபம் இரண்டையும் பெரிதும் அதிகரிக்கிறது. ஜெயின் பாசனம் (Jain Irrigation) இந்த நுட்பத்தை ஊக்குவிக்கிறது. இது நிறைய வளங்களையும் சேமிக்கிறது. விவசாயிகள் 50% தண்ணீரையும், 30% உரங்களையும் சேமிக்க முடியும். இதனால் விவசாயம் மேலும் லாபகரமாக உள்ளது.


மேற்கு வங்கம் 2021-22ல் விவசாயத்திற்கு 2% மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தியது. இருப்பினும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும் பஞ்சாப்பை விட இது 40% கூடுதல் விவசாய மதிப்பை உருவாக்கியது. மேற்கு வங்கத்தில், காய்கறிகள் அதன் மொத்த பயிர்ப் பரப்பில் (Gross Cropped Area (GCA)) 15%, மொத்தமாக 10.2 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்படுகின்றன. இந்த சாதனை மத்திய அரசு  காய்கறிகள் ஏற்றுமதி மண்டலம் (Agri-Export Zone (AEZ)) அமைக்க வழிவகுத்தது. இந்த மண்டலத்தில் நாடியா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்கள் அடங்கும்.


மேற்கு வங்காளத்தின் விவசாய அணுகுமுறை சந்தை தேவைகளில் கவனம் செலுத்துகிறது. காய்கறிகளின் அதிக உற்பத்தியில் இருந்து இது தெளிவாகிறது. 2020-21 ஆம் ஆண்டில், அவர்கள் 2.9 மில்லியன் மெட்ரிக் டன் கத்தரி, 2.3 மில்லியன் மெட்ரிக் டன் முட்டைக்கோஸ், 1.9 மில்லியன் மெட்ரிக் டன் காலிஃபிளவர் 15.1 மில்லியன் மெட்ரிக் டன் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ததாக தோட்டக்கலை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தோட்டக்கலையில் விவசாய ஏற்றுமதி மண்டலங்களுக்கு (Agri-Export Zone (AEZ)) அதன் சொந்த பகுதிகளை அடையாளம் காண்பதன் மூலம் மேற்கு வங்காளத்தில் இருந்து பஞ்சாப் கற்றுக்கொள்ளலாம். 


2019-20 இல் பஞ்சாபில் உள்ள பால்வளத் துறையின் மொத்த மதிப்பு விவசாய உற்பத்தியில் 28% பங்கைக் கொண்டுள்ளது. வளர்ச்சிக்கான சாத்தியம் இருப்பதை இது காட்டுகிறது. பஞ்சாப் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களில் முன்னேற வாய்ப்பு உள்ளது. இந்த தயாரிப்புகள் சீஸ் முதல் சாக்லேட் வரை இருக்கலாம். அவை இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்கப்படலாம். 


இந்திய விவசாயம் மேம்படவும், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவும் மாற்றம் தேவை. பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் சந்தை தேவையின் அடிப்படையில் அதிக மதிப்புள்ள பயிர்களுக்கு கவனம் செலுத்தும் முறையை பின்பற்ற வேண்டும். இது பாரம்பரிய பயிர்கள் மற்றும் MSP அடிப்படையிலான பயிர் முறையிலிருந்து விலகிச் செல்வதைக் குறிக்கிறது. விவசாயிகளின் செழிப்புக்கு இந்த மாற்றம் அவசியம்.


குலாட்டி புகழ்பெற்ற பேராசிரியர் மற்றும் சந்தா ICRIER இல் ஆராய்ச்சி உதவியாளர்.




Original article:


Share: