நாடு தழுவிய ஆய்வின் மூலம் இந்தியாவில் டயாலிசிஸ் விளைவு முறைகளைப் புரிந்துகொள்ளுதல் -ரம்யா கண்ணன்

 தேசிய அளவிலான தனியார் ஹீமோடையாலிசிஸ் (haemodialysis) தரவு தளத்தின் கண்டுபிடிப்புகள், இந்தியாவில் ஹீமோடையாலிசிஸ் பெறும் நோயாளிகளின் உயிர்வாழ்வில் பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபாடு இருப்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் டயாலிசிஸ் நோயாளிகள் அனைத்து மையங்களிலும் தரப்படுத்த வேண்டிய ஒரே மாதிரியான டயாலிசிஸ் சிகிச்சையை (standardise dialysis care) மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.


இந்தியாவில் 193 மையங்களில் டயாலிசிஸ் பெறும் நோயாளிகளின் உயிர்வாழும் (survival) விகிதங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய முயற்சிக்கின்றனர். ஒரு மையத்தில் சேர்ந்த 90 நாட்களிலிருந்து தொடங்கி, தனிப்பட்ட நோயாளி விவரங்கள் போன்ற விஷயங்களைப் பார்த்து நோயாளிகள் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்பதை அவர்கள் அளவிட்டனர். இந்தியா முழுவதும் நமக்கு அதிக டயாலிசிஸ் வசதிகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க எல்லா இடங்களிலும் வழங்கப்படும் கவனிப்பு ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.


இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள்  டயாலிசிஸைப் பெறுகிறார்கள். 2018 ஆம் ஆண்டில் சுமார் 175,000 பேர் டயாலிஸ் சிகிச்சையைப் பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2016 ஆம் ஆண்டில் தொடங்கி தேசிய டயாலிசிஸ் சேவைக்கு (National Dialysis Service) ஆராய்ச்சியாளர்கள் காரணம் கூறுகின்றனர். இது, டயாலிசிஸை மிகவும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், டயாலிசிஸை மலிவானதாக மாற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் இந்தியாவில் இறுதி கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இவை அனைத்தும் நடக்கின்றன. 


இந்த ஆய்வுக்கு முன்பு, இந்தியாவில் ஹீமோடையாலிசிஸ் செய்யும் போது நோயாளிகள் எவ்வளவு காலம் வாழ்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பெரிய ஆய்வுகள் எதுவும் இல்லை, அல்லது வெவ்வேறு டயாலிசிஸ் மையங்கள் உயிர்வாழும் விகிதங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்ட ஒரே பெரிய ஆய்வு,  2008 முதல் 2012 வரை பொது நிதியுதவி காப்பீட்டுத் திட்டத்தின் (publicly-funded insurance scheme) தரவைப் பயன்படுத்தியது. ஹீமோடையாலிசிஸ் தொடங்கிய ஆறு மாதங்களுக்குள் 10.2% நோயாளிகள் இறந்துவிட்டதாக அது கண்டறிந்தது. ஆனால் மற்ற நாடுகளைப் போல வெவ்வேறு டயாலிசிஸ் மையங்களுக்கு இடையில் உயிர்வாழ்வதில் வேறுபாடுகள் உள்ளதா என்பதை இந்த ஆய்வால் உண்மையில் பார்க்க முடியவில்லை. எனவே, இந்தியாவில் டயாலிசிஸ் நோயாளிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில் ஒரு பெரிய இடைவெளி இருந்தது. இது, கவனிப்பை மேம்படுத்துவதை கடினமாக்கியது. கூடுதலாக, டயாலிசிஸ் நோயாளிகள் எவ்வளவு நன்றாக உயிர்வாழ வேண்டும் என்பதற்கான தேசிய தரநிலை இன்னும் இல்லை என்று அவர்கள் கூறினர். 

 

வேறுபாடுகளை அளவிடுதல்


இந்தியாவில் டயாலிசிஸ் மையங்களில் உயிர்வாழும் விகிதங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஒவ்வொரு மையத்தில் உள்ள தரவுகளால், உயிவாழும் விகிதங்கள் ஏன் வேறுபடுகின்றன என்பதை விளக்க முடியுமா என்பதையும் அவர்கள் சோதித்தனர். சிகிச்சை மையம் மற்றும் நோயாளிகளின் நிலைகளில் உள்ள கூறுகள், உயிர்வாழ்வதை பாதிக்கின்றன என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இருப்பினும், சிகிச்சை மையங்களுக்கு இடையில் இன்னும் விவரிக்கப்படாத வேறுபாடுகள் உள்ளன. அவை முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. 


ஏப்ரல் 2014 மற்றும் ஜூன் 2019 க்கு இடையில், குறைந்தது 90 நாட்களுக்கு நெஃப்ரோபிளஸ் நெட்வொர்க்கில் (NephroPlus network) ஹீமோடையாலிசிஸ் பெற்ற 23,600 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த ஆராய்ச்சியில் அடங்குவர். அவர்கள் பார்க்கும் முக்கிய விஷயம், ஒரு மையத்தில் சேர்ந்த 90 நாட்களுக்குப் பிறகு டயாலிசி நோயாளிகள் இறந்தார்களா இல்லையா என்பதுதான்.


ஒவ்வொரு நபரும் ஆணா அல்லது பெண்ணா, அவர்கள் புகைபிடித்திருந்தால், அவர்களுக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்திருந்தால், அவர்களுக்கு முன்பு இதய நோய் அல்லது இதய செயலிழப்பு இருந்திருந்தால், அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்திருந்தால், மற்றும் அவர்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்ததுடன், ஹெபடைடிஸ் பி அல்லது ஹெபடைடிஸ் சி ஆகியவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.  ஆய்வானது, அவர்களின் கல்வி, மாதாந்திர வீட்டு வருமானம், அவர்களுக்கு எந்த கால இடைவெளிகளில் அடிக்கடி டயாலிசிஸ் வந்தது மற்றும் அவர்களுக்கு வாஸ்குலர் அணுகல் வகை ஆகியவற்றையும் கவனித்தது. சிகிச்சை மையங்களைப் பொறுத்தவரை, சிறுநீரக மருத்துவர்கள் (nephrologist) எவ்வளவு நாள், எந்த கால இடைவெளிகளில் வருகை தந்தார்கள், படுக்கைகளின் எண்ணிக்கை, ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து ஆய்வு இருந்தது.


இறப்பு விகிதம்  


பல காரணிகளைக் கருத்தில் கொண்ட பிறகு, நோயாளிகளுக்கான 180 நாள் உயிர்வாழ்வு விகிதம் 83% முதல் 97% வரை மாறுபடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நகர்ப்புற மையங்களில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது கிராமப்புற மையங்களில் உள்ள நோயாளிகள் இறப்பதற்கான வாய்ப்பு 32% அதிகம். இந்த வேறுபாடானது ஆய்வில் அளவிடப்படாத காரணிகளால் ஓரளவு காரணமாக இருக்கலாம். இருப்பினும், கிராமப்புற மையங்கள் எதிர்கொள்ளும் சவால்களை இது சுட்டிக்காட்டுகிறது.


இறப்புடன் தொடர்புடைய சில நோயாளிகளின் பண்புகள்: எடுத்துக்காட்டாக, வாஸ்குலர் அணுகலுக்கு வடிகுழாய் அடிப்படையிலான அணுகல் ஒரு தமனி ஃபிஸ்துலா (arteriovenous fistula) அல்லது கிராஃப்ட் (graft) மூலம் அணுகலை விட அதிகமான இறப்புகளைக் கொண்டிருந்தது. அரசாங்கத் திட்டம் அல்லது தனியார் காப்பீடு மூலம் டயாலிசிஸுக்கு நிதி உதவி பெற்ற நோயாளிகள் தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துபவர்களை விட குறைவான இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தனர். ஒரு மையத்தில் சேருவதற்கு முன்பு யாராவது நீண்ட நேரம் டயாலிசிஸில் சிகிச்சையில் இருந்திருந்தால், அவர்கள் இறக்கும் ஆபத்து குறைவாக இருப்பதைக் இது காட்டுகிறது. குறிப்பாக, சிகிச்சை மையத்தில் சேருவதற்கு முன்பு ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் டயாலிசிஸில் இருந்தவர்கள் சேருவதற்கு 30 நாட்களுக்குள் டயாலிசிஸைத் தொடங்கிய புதிய நோயாளிகளுடன் ஒப்பிடும்போது 17% குறைவான இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தனர். பொதுவாக, நீரிழிவு நோய் இருப்பது அதிக இறப்பு விகிதத்துடன் தொடர்புடையது. உதாரணமாக, பணியாளர்கள், பராமரிப்பு செயல்முறைகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், டயாலிசிஸ் மையங்களில் உயிர்வாழும் விகிதங்களில் உள்ள வேறுபாடுகளை 31% குறைக்கலாம் என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.


முன்னோக்கி செல்லும் வழி


இந்தியாவில் டயாலிசிஸ் நோயாளிகள் எவ்வளவு நன்றாக உயிர்வாழ்கிறார்கள் என்பதற்கான நிலையான அளவை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தியாவில் அதிகமான மக்கள் டயாலிசிஸ் செய்வதற்கான அணுகலைப் பெறுவதால், நோயாளிகள் சிறப்பாகச் செயல்படுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெறுவதற்கு, பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. எதிர்காலத்தில் அதிகமான மக்களுக்கு டயாலிசிஸ் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 இந்த தேவையை பூர்த்தி செய்ய ஒட்டுமொத்த சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சிகிச்சை முறையை மேம்படுத்துவது அவசியம். நாடு முழுவதும் ஒரு கூட்டு தர மேம்பாட்டு அமைப்பின்  (collaborative quality improvement system) முக்கியத்துவத்தை அராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்தியாவில் டயாலிசிஸ் விளைவுகளுக்கான தேசிய தரங்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அவை வலியுறுத்துகின்றன. கூடுதலாக, சிகிச்சை மையம் மற்றும் நோயாளி மட்டத்தில் வெவ்வேறு காரணிகள் இந்த விளைவுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். சிறுநீரகவியல் (nephrology) மற்றும் பிற மருத்துவத் துறைகளில் மருத்துவ நடைமுறைகள் மற்றும் நோயாளியின் விளைவுகள் மையங்களுக்கு இடையில் பரவலாக வேறுபடுகின்றன. எனவே, டயாலிசிஸ் விளைவுகளுக்கான தேசிய அளவுகோல்களை நிறுவுவது முக்கியமானது. இந்த வரையறைகள் காலப்போக்கில் டயாலிசிஸ் மையங்களின் செயல்திறனை ஒப்பிட உதவும். ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் இந்த பயணத்தின் முதல் படியை முன்வைக்கின்றன என்று வாதிடுகின்றனர்.




Original article:

Share: