ஆளுநருடன் புதிய மோதல் : அமைச்சரை மீண்டும் நியமிக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன்? - அபூர்வா விஸ்வநாத், அருண் ஜனார்த்தனம்

 வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ள திரு.கே.பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமனம் செய்ய தமிழ்நாடு ஆளுநர் ரவி மறுத்தது ஏன்?


கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆளும் தி.மு.க. வின் மூத்த தலைவர் பொன்முடி குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அவரது வருமானத்துடன் ஒப்பிடும்போது அதிக சொத்துக்கள் வைத்திருந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்பளித்ததால் இது நடந்தது.


தற்போது, தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தபிறகும், பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க ஆளுநர் அனுமதிக்கவில்லை.


இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்த கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழக்கை கடந்த டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்க்கு மாற்றியது. இந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 2006 முதல் 2011 வரை பொன்முடி சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது அதிக சொத்துக்களை சேகரித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 


இந்த தீர்ப்பின் காரணமாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8 (3) ன் படி ஒருவர் ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு குறைந்தது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஆறு ஆண்டுகளுக்கு அரசாங்க பதவியை வகிக்க முடியாது என்று அது கூறுகிறது. இதனால் அவர் அமைச்சர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 


தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மார்ச் 11 அன்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா (Abhay Oka) மற்றும் உஜ்ஜல் புயான் (Ujjal Bhuyan) ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தண்டனையையும் நிறுத்தி வைத்தனர். அதாவது, இறுதி முடிவு எடுக்கும் வரை பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. தண்டனையின் அடிப்படையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவரை இனி தகுதி நீக்கம் செய்ய முடியாது. 


அவ்வாறு செய்யாவிட்டால், 1951 சட்டத்தின் பிரிவு 8 (3) காரணமாக அது மாற்ற முடியாத சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அவர்கள் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


 மேல்முறையீடு செய்த க.பொன்முடி மற்றும் தெய்வசிகாமணியின் தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் முடிவு செய்தது என அவர்களின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, தீர்ப்பு மற்றும் தண்டனை இரண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


சமீபத்தில் ஆகஸ்ட் 2023 இல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது உட்பட பல வழக்குகளில் இந்த விதி பின்பற்றப்பட்டுள்ளது. மார்ச் 2023 இல் சூரத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


கீழமை நீதிமன்றமும், குஜராத் உயர்நீதிமன்றமும் தண்டனையைத் தடுக்காதபோது, இராகுல்காந்தி உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார். உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்திய பின்னர், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்கிறார்.


இதேபோல், லட்சத்தீவு எம்.பி.யான முகமது பைசலுக்கு கவரட்டியில் உள்ள நீதிமன்றம் 2023 ஜனவரியில் கொலை முயற்சிக்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் இழந்தார். உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்திய போதிலும், மக்களவை அவருக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வழங்க நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. மக்களவை ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறது என்பதை உச்சநீதிமன்றம் ஆராயப் போவதற்கு முன்பு, ஃபைசலுக்கு மார்ச் 2023 இல் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது.


பொன்முடியின் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த பின்னர், மார்ச் 14 ஆம் தேதி பொன்முடியை அமைச்சராக்கி அவருக்கு உயர் கல்வி துறையை வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் பொன்முடி மீது இன்னும் ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஆளுநர் முடியாது என்று கூறிவிட்டார்.


முதல்வருக்கு ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில், பொன்முடியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தினாலும், தண்டனையை ரத்து செய்யவில்லை. ”தண்டனை நிறுத்தப்பட்டதே தவிர, ரத்து செய்யப்படவில்லை" என்று ஆளுநர் கூறினார்.


ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 (Representation of People Act 1951) பிரிவு 8 (3) இன் காரணமாக முனைவர் கே.பொன்முடியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். அதாவது பொன்முடியின் தண்டனை இன்னும் அப்படியே உள்ளது. ஆனால் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


அந்த கடிதத்தில், பொன்முடி கடுமையான ஊழல் செய்ததாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது ஒரு பொது ஊழியரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நேர்மையின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஆளுநரால் ஏற்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.


தமிழ்நாடு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனு ஏற்கனவே நடந்து வரும் வழக்கின் ஒரு பகுதியாகும். இந்த வழக்கு ஆளுநரின் பங்கு பற்றியது. மசோதாக்களுக்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிக்கிறார் என்பதில் கவனம் செலுத்துகிறது.


அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 164 (1) முதலமைச்சரை ஆளுநர் நியமிப்பதாக விளக்குகிறது. முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில் ஆளுநர் மற்ற அமைச்சர்களையும் நியமிக்கிறார். ஆளுநர் விரும்பும் வரை இந்த அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருப்பார்கள். ஆனால், இதைத் தெளிவுபடுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஆளுநரின் அதிகாரம் முக்கியமாக அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளில் இருந்து வருகிறது என்று இந்த தீர்ப்புகள் கூறுகின்றன. 


நவம்பர் 2023 இல், ஆளுநர்கள் மசோதாக்களை கையாளாததால் உச்ச நீதிமன்றம் கவலைப்பட்டது. இதனால், தனது ஒப்புதலுக்காக காத்திருந்த 10 மசோதாக்களை கவர்னர் ரவி, மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதற்குப் பிறகு, சட்டசபை விதி 26-ஐப் பின்பற்றி, மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக, சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது.




Original article:

Share: