தென்னிந்தியாவில், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான வனப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டுத்தீ பரவி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை, இந்திய விமானப்படை (Indian Air Force), மாநில வனத்துறையின் தீயணைப்புடன் இணைந்து தீயை அணைக்க உதவியது. Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் சுமார் 16,000 லிட்டர் தண்ணீரை "பாம்பி பக்கெட்" (Bambi Bucket) என்ற சிறப்பு கொள்கலனைப் பயன்படுத்தி தீயில் கொட்டினார்கள். ஹெலிகாப்டர் பக்கெட் அல்லது ஹெலிபக்கெட் என்றும் அழைக்கப்படும் பாம்பி பக்கெட், ஹெலிகாப்டரின் கீழ் கேபிள் மூலம் தொங்கும் ஒரு சிறப்பு கொள்கலன் ஆகும். இது தண்ணீரில் மூழ்கி நிரப்பப்பட்டு, பின்னர் நெருப்பின் மீது பறந்து, கீழே ஒரு வால்வைத் திறப்பதன் மூலம் காலி செய்யப்படுகிறது.
தரையில் இருந்து அடைய முடியாத காட்டுத் தீயை அணைக்க பாம்பி பக்கெட் (Bambi Bucket) சிறந்தது. காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் பெரும்பாலும் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில், நவம்பர் முதல் ஜூன் வரை காட்டுத் தீ காலம் (forest fire season) ஆகும். குறிப்பாக, கோடை காலம் வரும்போது பிப்ரவரி முதல் ஜூன் வரை பல தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதே வேளையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் பொதுவாக நாடு முழுவதும் தீ விபத்துகளுக்கு மிக மோசமான மாதங்களாக இருக்கும்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (Ministry of Environment, Forest and Climate Change) கீழ் உள்ள இந்திய வன ஆய்வு (Forest Survey of India (FSI)) நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய வன நிலை அறிக்கையை (India State of Forest Report (ISFR)) வெளியிடுகிறது. 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் காடுகளில் 36% க்கும் அதிகமானவை அடிக்கடி தீப்பிடிக்கும் அபாயத்தில் இருப்பதை வெளிப்படுத்தியது. மேலும், 2019-ல் இந்திய வன நிலை அறிக்கையானது (India State of Forest Report (ISFR)), காடுகளில் சுமார் 4% பகுதிகள் தீ ஏற்படுவதற்க்கு 'மிகவும் வாய்ப்புள்ளது' (extremely prone) என்றும் 6% 'மிகவும்' (very highly) தீயினால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளன என்றும் குறிப்பிடுகிறது.
2015 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 98 மில்லியன் ஹெக்டேர் காடுகள், முக்கியமாக வெப்பமண்டலப் பகுதிகளில், தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன. அவை, மொத்த வனப்பகுதியில் சுமார் 3% ஆகும்.
இந்திய வன ஆய்வின் (Forest Survey of India (FSI)) கூற்றுப்படி, வறண்ட இலையுதிர் காடுகளில் கடுமையான தீ ஏற்படுகிறது. அதே நேரத்தில், பசுமையான (evergreen), அரை பசுமையான (semi-evergreen) மற்றும் மான்ட்டேன் (montane) மிதமான காடுகள் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. வடகிழக்கு இந்தியா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள காடுகள் நவம்பர் முதல் ஜூன் வரை காட்டுத்தீயால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை.
மார்ச் 2023 இல், கோவாவில் பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. அவை, மக்களால் ஏற்படுத்தப்பட்டதா என்ற விசாரணையை மேற்கொண்டது. 2021 ஆம் ஆண்டில், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து-மணிப்பூர் எல்லை, ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் வனவிலங்கு சரணாலயங்களில் கூட காட்டுத் தீ ஏற்பட்டது.
சமீபத்தில், மிசோரம் (3,738), மணிப்பூர் (1,702), அசாம் (1,652), மேகாலயா (1,252), மகாராஷ்டிரா (1,215) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய வன ஆய்வின் (Forest Survey of India (FSI)) தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் (Indian Space Research Organisation (ISRO)), திங்கள்கிழமை தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுகள், மகாராஷ்டிராவின் கொங்கன் பெல்ட், கிர் சோம்நாத் மற்றும் போர்பந்தருக்கு அருகிலுள்ள தெற்கு கடலோர குஜராத், தெற்கு ராஜஸ்தான், தென்மேற்கு மத்தியப் பிரதேசம், கடலோர மற்றும் உள்துறை ஒடிசா மற்றும் அருகிலுள்ள ஜார்க்கண்ட் ஆகியவற்றில் மார்ச் தொடக்கத்தில் இருந்து காட்டுத் தீ அதிகரித்துள்ளதாக வெளியிட்டது. மேலும், தென்னிந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான வனப்பகுதிகளிலும் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளன.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகள் தீ விபத்துக்குள்ளாகும் பகுதிகளாகும். இருப்பினும், தென்னிந்தியாவில் உள்ள காடுகள் பெரும்பாலும் பசுமையான அல்லது அரை பசுமையான தாவரங்களைக் கொண்டிருப்பதால் ஆபத்து குறைவாக இருப்பதாக இந்திய வன ஆய்வு கூறுகிறது. ஆனால், சமீப காலமாக தமிழகத்தின் காடுகளில் காட்டுத்தீ அதிகரித்து வருகிறது.
மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கை காரணங்களால் காட்டுத் தீ ஏற்படலாம். சிகரெட்டுகளை தூக்கி எறிவது, முகாம் நெருப்பு, குப்பைகளை எரிப்பது மற்றும் பிற ஒத்த நடவடிக்கைகள் போன்ற மனித கவனக்குறைவால் பல தீ விபத்துகள் ஏற்படுகின்றன. காட்டுத் தீ ஏற்படுவதற்கு, மின்னல் என்பது மிகவும் பொதுவான இயற்கை காரணமாகும்.
வானிலை வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும்போதும், நிறைய மரங்கள் இருக்கும்போதும் காட்டுத் தீ மிக எளிதாக பரவுகிறது. இந்த ஆண்டு, தென்னிந்தியாவில் காட்டுத் தீயின் அதிகரிப்பு அதிக வறட்சி, வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை, தெளிவான வானம் மற்றும் கோடையின் தொடக்கத்தில் அமைதியான காற்று ஆகியவை ஓரளவு காரணமாகும். கடந்த மாதம் தென்னிந்தியாவில் விதிவிலக்காக வெப்பமாக இருந்தது. குறிப்பாக பிப்ரவரியில், இது 1901 க்குப் பிறகு மிக வெப்பமாக இருந்தது. மேலும், ஜனவரியில் ஏற்பட்ட வெப்பமானது, நூறு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக வெப்பமாக பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக, தென் மாநிலங்களில் வெப்பநிலையானது வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால், கோடை தொடங்குவதற்கு முன்பே அப்பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளது. எனவே, குளிர்காலம் தொடங்கியதில் இருந்து இந்த காடுகளில் உலர் உயிரி (dry biomass) ஆரம்பத்திலேயே கிடைக்கிறது.
மேற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகப்படியான வெப்ப காரணி (Excess Heat Factor (EHF)) அளவிடப்படும் வெப்ப அலைகளின் ஆபத்து இயல்பை விட அதிகமாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department) எச்சரித்துள்ளது. கடந்த வாரம், ஆந்திரா மற்றும் அருகிலுள்ள கர்நாடகாவில், கடந்த வாரம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியது. இது மார்ச் நடுப்பகுதியில் வழக்கத்திற்கு மாறானது. மழையின்மை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக, தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 'லேசான' (mild) வறட்சியை அனுபவிப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) பெயரிட்டுள்ளது.