MIRV முன்னேற்றத்துடன் இந்தியாவின் அணுசக்தி தடுப்பு திறன் - ஹர்ஷ் வி.பந்த், கார்த்திக் பொம்மகாந்தி

 அக்னி-5 பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகன (multiple independently targetable reentry vehicle (MIRV)) ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த ஏவுகணை, குறிப்பாக, சீனாவிற்க்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)) சமீபத்தில் நடத்திய அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணையின் (Agni-5 ballistic missile)  "திவ்யாஸ்திரா" (Divyastra) சோதனையானது  குறிப்பிடத்தக்க இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அக்னி-5 ஆனது 5,000 கிலோமீட்டர்களுக்கு மேல் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இது இன்றுவரை சோதிக்கப்பட்ட இந்தியாவின் ஏவுகனைகளில் மிக நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணையாகும். இந்தியாவின் அணுசக்தி தடுப்பு திறன்களை கணிசமாக உயர்த்தும் பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு  (Multiple Independently Targetable Re-entry Vehicles (MIRVs)) ஏவுகணை இந்த சோதனையை முக்கியமாக்குகிறது.


சீனாவுடன் ஒப்பிடுகையில்


பல்வேறு இலக்குகளைத் பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகன (MIRVs) ஏவுகணை தொழில்நுட்பம் உலகிற்கு புதியதல்ல. ஆனால், இது இந்தியாவுக்கு புதிது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஐந்து முக்கிய அணுசக்தி நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளைக் கொண்டுள்ளன. இந்த ஏவுகணைகளை அந்த நாடுகள் தங்கள் அணு ஆயுத அமைப்புகளில் பயன்படுத்துகின்றனர். இப்போது, பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனங்களை (MIRVs) சுமந்து செல்லக்கூடிய ஏவுகணையையும் இந்தியா உருவாக்கியுள்ளது. இது இந்த மேம்பட்ட ஏவுகணை தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் இனைந்துள்ளது.


பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனங்கள் (MIRV) இன்றியமையாதவை, ஏனெனில் அவை ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் மற்றும் இதனால் எதிரிகள் தங்களை தற்காத்துக் கொள்வது கடினம். சீனா Hongqi (HQ-19) தரை அடிப்படையிலான இடைமறிப்பான்கள் போன்ற பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புகளை உருவாக்கி வருகிறது, ஆனால் அக்னி-5 போன்ற ஏவுகணைகளுக்கு எதிரான அவற்றின் செயல்திறன் நிச்சயமற்றது. இருப்பினும், இந்த விஷயத்தில் சீனா முன்னேறி வருகிறது. இந்த பாதுகாப்புகள் அக்னி ஏவுகணையின் முந்தைய பதிப்புகளை இடைமறிக்கக்கூடும். குறிப்பாக, அவை ஒரே ஒரு போர்க்கப்பலை மட்டுமே கொண்டு சென்றால். சீனா தனது அணு ஆயுதங்களை கட்டமைத்து, அதை பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புடன் இணைத்தால், அணு ஆயுத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் திருப்பி தாக்கும் திறனை அது குறைக்கலாம். அக்னி-5ல் பல போர்க்கப்பல்களை ஒருங்கிணைப்பதன் மூலம், சீனாவுடனான அணுசக்தி உறவில் இந்தியா ஓரளவு சமநிலையை மீட்டுள்ளது. இருப்பினும், பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனங்களுடனான (MIRV) அக்னி-5 இன் கூடுதல் சோதனை இந்தியாவின் அணு ஏவுகணை ஆயுதக் திறனைக் மிகவும் நம்பகமானதாக மாற்றுவதற்கு அவசியமாகிறது. ஏனெனில், இந்திய இராணுவம் அதன் திறன்களில் நம்பிக்கையுடன் இருக்க அதிக சோதனைகள் தேவைப்படலாம்.


அவசியமான தேவைகள்


பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகன (MIRV) பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவது கடினம், ஏனெனில் இது கடினமான தொழில்நுட்ப தரநிலைகளை பூர்த்தி செய்வதை உள்ளடக்கியது. இந்த தரநிலைகளில் அணு ஆயுதங்களை சிறியதாக்குவது, போஸ்ட் பூஸ்ட் வாகனத்திலிருந்து (Post Boost Vehicle (PBV)) வெளியிடப்படுவதற்கு முன், சுமந்து செல்லும் கொள்கலன் எடை குறைந்ததாக இருப்பதை உறுதிசெய்து, ஏவுகணைக்குள் பொருத்தி, போஸ்ட் பூஸ்ட் வாகனத்திலிருந்து பிரிந்து செல்லும் வகையில், மறு நுழைவு வாகனங்களை துல்லியமாக கட்டமைப்பது ஆகியவை அடங்கும். வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது இந்த வாகனங்களுக்கு வழிகாட்டுதல் துல்லியமாக இருக்க வேண்டும். ஒரு பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனத்தை (MIRV) அதன் வரம்பிற்குள் உள்ள பல இடங்களை மட்டுமே குறிவைக்க முடியும். சமீபத்திய அக்னி-5 சோதனை மூலம், இந்தியா இந்த சவாலான தொழில்நுட்ப இலக்குகளில் வெற்றி பெற்றுள்ளது. 

ஆரம்பத்தில், இந்தியா தனது அணுசக்தி திறன்களில் இரண்டு முக்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டது. முதலாவதாக, போதுமான அணுகுண்டு சோதனை இல்லை, சிறிய போர்க்கப்பல்களை தயாரிப்பதில் இந்தியாவிற்கு பல சிரமங்கள் இருந்தன. வெவ்வேறு இலக்குகளைத் தாக்க ஒரே ஏவுகணையில் பலவற்றை பொருத்துவதற்கு இந்தியாவிற்கு சிறிய போர்க்கப்பல்கள் அவசியம். இரண்டாவதாக, சோதனைகள் இல்லாததால் ரீ-என்ட்ரி வாகனங்களின் வடிவமைப்பையும் பாதித்தது. பூமியின் வளிமண்டலத்தில் ஏவுகணைகளை எடுத்துச் செல்ல இந்த வாகனங்கள் தேவைப்படுகின்றன.


இருப்பினும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் அதனுடன் தொடர்புடைய முகமைகள் இந்தத் தடைகளைத் தாண்டிவிட்டன. ஏவுகணைகளுடன் போர்க்கப்பல்களை ஒருங்கிணைக்கும் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகம் (Terminal Ballistics Research Laboratory (TBRL)) மற்றும் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (Advanced Systems Limited (ASL)) ஆகியவை இந்த நிறுவனங்கள், அக்னி-5 ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றனர்.  

      

சீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் அக்னி-5 ஏவுகணையை அதன் விமானத்தின் நடுவானில் இடைமறிக்க முயற்சி செய்யலாம். இருப்பினும், இந்தியாவின் அணுசக்தி ஆணையம், குறிப்பாக பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC), சிறிய அணு ஆயுதங்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போர்க்கப்பல்கள் ஏவுகணைகளில் பலவற்றை சுமந்து செல்லும் அளவுக்கு சிறியவை, இது ஒரு ஏவுகணை மூலம் பல இலக்குகளை தாக்குவதற்கு அவசியமானது. அக்னி-5 சீனாவை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இது சீன இராணுவ முன்னேற்றத்திற்கு எதிரான ஒரு இராஜதந்திர நடவடிக்கை என்பதைக் குறிக்கிறது.


இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission (AEC)) ஆகியவற்றிலிருந்து இன்னும் முன்னேற்றங்கள் இருக்கலாம். நீண்ட தூர நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி (Submarine Launched Ballistic Missile (SLBM)) பரிசோதிப்பதன் மூலம் தனது அணுசக்தித் திறனை மேலும் வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த வகை ஏவுகணையை இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவ முடியும்.


அக்னி-5 ஏவுகணை சேர்க்கப்பட்டது, குறிப்பாக பல போர்க்கப்பல்களில் எளிதாக கொண்டு செல்லும் திறன் கொண்டது, சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் அணுசக்தி நிலையை கணிசமாக மேம்படுத்துகிறது. ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் சீனாவின் முன்னேற்றத்தை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்ற தெளிவான செய்தியை அந்நாட்டிற்கு இது தெரிவிக்கிறது. அக்னி-5 பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகன (MIRV) ஏவுகணை சோதனையின் மூலம், இந்தியா ஒரு பெரிய அணுசக்தி மற்றும் ஏவுகணை சக்தியாகக் கருதப்படும் இலக்கில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 


ஹர்ஷ் வி.பந்த், புது தில்லியில் உள்ள அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (Observer Research Foundation) ஆய்வுகளுக்கான துணைத் தலைவர். கார்த்திக் பொம்மகாந்தி, அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் மூத்த ஆய்வாளர்.




Original article:

Share: