பெண்களின் நிதி உள்ளடக்கத்திற்கான கொள்கையை உருவாக்க தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் தரவு எவ்வாறு உதவும் ? -ஸ்ருதி ஜோஷி & அன்ஷுமன் கமிலா

 நிதி உள்ளடக்க (Financial inclusion) விழிப்புணர்வு திட்டங்கள் பெண்கள் தலைமை வகிக்காத குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் 


ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நிதி உள்ளடக்கம் முக்கியமானது. இது ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளின்  (Sustainable Development Goals (SDGs)) ஒரு முக்கிய அம்சமாகும். 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் எட்டு இலக்குகளை அடைய நிதிச் சேர்க்கை உதவுகிறது. உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023 (Global Gender Gap Report 2023) இல், பொருளாதாரப் பிரிவில் இந்தியா சராசரிக்கும் குறைவான மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது, இது வேலைகள் மற்றும் வருமானத்தில் உள்ள பாலின இடைவெளிகளையும் பார்க்கிறது. நிதிச் சேவைகளில் பெண்களைச் சேர்ப்பது இந்த இடைவெளிகளைக் குறைக்க உதவும். 


உலக வங்கியின் குளோபல் ஃபைன்டெக்ஸ் தளம் 2021 (World Bank’s Global Findex Database 2021) இன் படி, 2011 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உலகளவில் வங்கிக் கணக்குகள் அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளைப் பயன்படுத்தும் பெரியவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. இந்தியாவிலும், 42 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான இடைவெளி வெகுவாக குறைந்துள்ளது. 2014ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) இதில் பெரும் பங்கு வகித்துள்ளது. ஜனவரி 2024க்குள் 280 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் அடிப்படை சேமிப்புக் கணக்குகளைத் திறக்க இது உதவியுள்ளது. தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா (Deendayal Antyodaya Yojana), தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihood Mission (DADAY-NRLM)), திறன் இந்தியா திட்டம் (Skill India Mission), மிஷன் சக்தி (Mission Shakti) மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) போன்ற பிற முயற்சிகள் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana) ஆகியவை பெண்களுக்கான நிதி ஆதாரங்களை உயர்த்தியுள்ளது.


இந்தியாவில் பெண்களின் நிதி உள்ளடக்கத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (National Family Health Survey (NFHS))) பல சுற்றுகளின் தரவை பயன்படுத்தியுள்ளோம். கடந்த இருபது ஆண்டுகளில், பெண்கள் தங்கள் சொந்த பணத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருத்தல், தாங்களே நிர்வகிக்கும் வங்கிக் கணக்குகளைக் கொண்டிருத்தல், நுண் கடன் திட்டங்களைப் (micro-credit programs) பற்றி அறிந்துகொள்ளுதல் மற்றும் அந்த திட்டங்களை அணுகுதல் போன்ற துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.


நிதி சேவைகளுக்கான பெண்களின் அணுகலை பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன என்பதையும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் தரவு காட்டுகிறது. கிராமப்புற இந்தியாவில் உள்ள 5.44 லட்சம் பெண்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 2019-21 ஆம் ஆண்டிலிருந்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் 5 தரவைப் பயன்படுத்தி, பெண்களின் உரிமை மற்றும் முறையான வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துதல், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துதல் மற்றும் நுண் கடன் திட்டங்களின் விழிப்புணர்வு மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் என்ன செல்வாக்கு செலுத்துகிறது என்பதைப் பார்த்தோம்.


கல்வி, டிஜிட்டல் திறன்கள், தொழில், மின்னணு ஊடகங்களுக்கான அணுகல் மற்றும் வயது ஆகியவை பெண்களின் நிதி உள்ளடக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாங்கள் கண்டறிந்தோம். உதாரணமாக, படித்த பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள குறுங்கடன் திட்டங்களைப் (micro-credit schemes) பற்றி அறிந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி பெற்ற பெண்கள் இந்த திட்டங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் உயர் கல்வி பெற்றவர்கள் குறைவாகவே இருந்தனர். உயர் கல்வி பெற்ற பெண்கள் பெரும்பாலும் முறையான வங்கி சேவைகளை அணுகுவதால் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அதே நேரத்தில் நுண் கடன் திட்டங்கள் பாரம்பரிய வங்கியை அணுக போராடும் குறைந்த கல்வி மட்டங்களைக் கொண்ட பெண்களை இலக்காகக் கொண்டுள்ளன.


வேலைக்குச் செல்லும் பெண்கள், அவர்களின் வேலை வகையைப் பொருட்படுத்தாமல், நுண் கடன் திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். படித்த, டிஜிட்டல் திறமையான, இளம் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்த அதிக ஆர்வம் காட்டினர். கூடுதலாக, குடும்பத் தலைவரின் பாலினம் மற்றும் அவர்களின் செல்வம் நுண்கடன் அணுகலை பாதிக்கிறது.


நிதி சேர்க்கை உள்ளடக்க முயற்சிகளை மேம்படுத்துவதற்கான சில முக்கியமான நுண்ணறிவுகளை எங்கள் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. பெண்கள் தலைமையிலான குடும்பங்களில் உள்ள பெண்கள் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதற்கும், மொபைல் வங்கியைப் பயன்படுத்துவதற்கும், நுண் கடன் திட்டங்களை அணுகுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, நிதி உள்ளடக்கத் திட்டங்கள் இந்த குடும்பங்களை குறிப்பாக குறிவைக்க வேண்டும். 


மேலும், நிதி உள்ளடக்கத்தில் கல்வி மற்றும் திறன்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருப்பதால், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் நிதி கல்வியறிவு தொகுப்புகளைச் சேர்ப்பது முக்கியம். நிதித் துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தத் தொகுப்புகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும். இளைஞர்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சைபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

 

ஜோஷி இந்திய ரிசர்வ் வங்கியிலும், கமிலா இந்தியன் பொருளாதார சேவையிலும் பணிபுரிகின்றனர். 




Original article:

Share: