9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவது டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரும் தடையாக உள்ளது ஏன் ? -விதீஷா குந்தமல்லா

 023-24 கல்வியாண்டில், டெல்லி அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு மாணவர்களில் சுமார் 36% பேர் சிறப்புத்தேர்வில் (remedial or compartment exam) தேர்வில்  தேர்ச்சி பெறத் தவறியதால் அவர்கள் அடுத்த வகுப்பிற்க்கு தேர்வாகவில்லை.


டெல்லி அரசாங்கத்தின் பள்ளிக் கல்வி முறை பல ஆண்டுகளாக கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதன் சாதனைகளில் இதை அடிக்கடி கூறுகிறது. ஆனால்  9ஆம் வகுப்பில் மாணவர்களின் அதிக தோல்வி விகிதம் என்ற சிக்கலை எதிர்கொண்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் சமீபத்தில் இது தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டது. சிறப்புத்தேர்வு உட்பட 9ஆம் வகுப்பில் இரண்டு முறை தோல்வியடைந்த மூன்று மாணவர்களில் கிட்டத்தட்ட இருவர் டெல்லியில் உள்ள தேசிய திறந்தநிலைப் பள்ளியில் (National Institute of Open School (NIOS)) சேரவில்லை. இதனால், இம்மாணவர்கள் பள்ளிக் கல்வியை முற்றிலுமாக கைவிடும் அபாயம் உள்ளது. 


9 ஆம் வகுப்பு ஏன் கடினமான தடையாக உள்ளது? 


தில்லி அரசின் கல்வித் துறையின் சமீபத்திய தரவுகள், அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் தோல்வி விகிதம் அதிகம் என்பதைக் காட்டுகிறது. 9 ஆம் வகுப்பு தொடர்ந்து அனைத்து தரங்களிலும் அதிக தோல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சரியான புள்ளிவிவரங்கள் மாறுபடலாம். சராசரியாக, 9 ஆம் வகுப்பு மாணவர்களில் 30-40% வரை தோல்வியடைகிறார்கள். 


2023-24 ஆம் கல்வியாண்டில், 9 ஆம் வகுப்பு மாணவர்களில் சுமார் 36% பேர் தேர்வாகவில்லை. அவர்கள் சிறப்புத்தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிவிட்டனர்.


9-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் சமீபத்தில் தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விடக் குறைந்துள்ளது. 2019ல் தேர்ச்சி விகிதம் 84.72% ஆக இருந்தது. 2020ல் இது 87.13% ஆக இருந்தது. 2021ல் இது 88.49% ஆக இருந்தது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டில், தேர்ச்சி சதவீதம் சுமார் 65.52% ஆக குறைந்தது.


2022-இல் தோல்வியடைந்த மாணவர்களில் சுமார் 40% பேர் பள்ளியை விட்டு வெளியேறினர்.

 

9 ஆம் வகுப்பில் தோல்வி விகிதம் அதிகமாக இருப்பது ஏன்?


இதில் பல காரணிகள் உள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் தடுப்புக் கட்டுப்பாடு இல்லாத கொள்கையானது (no-detention policy) 8-ஆம் வகுப்பு வரை பொருந்தும். இந்தக் கொள்கையின் படி, மாணவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி பெறவேண்டும். இதன் விளைவாக, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக ஒரு வகுப்பில் தோல்வியடையும் வாய்ப்பு உள்ளது.


இந்த ஆண்டு டில்லி அரசு தடுப்புக் காவல் கொள்கையை நீக்கியது. இப்போது 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளிலும் மாணவர்களும் தேர்வில் தோல்வியடையலாம். 2022-ஆம் ஆண்டில், அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ’இந்த மாற்றம்  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இருக்கும் அதே அளவு தீவிரத்தன்மையை தொடக்க வகுப்புகளிலும் கொண்டு வர வேண்டும்’ என்று கூறினார்.


தில்லி பல்கலைக்கழகத்தின் கல்வித் துறையின் உதவிப் பேராசிரியை லத்திகா குப்தா, 9ஆம் வகுப்பு நிலை நிலவரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். மாணவர்கள் அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இது கல்வி அழுத்தத்தை சேர்க்கிறது. கூடுதலாக, தேர்வு முறைகளில் இப்போது கொள்குறி கேள்விகள் (MCQகள்) அடங்கும். குப்தா, இந்த மாற்றம்,  கற்றலுக்கு வழிவகுக்கிறது. ஆனால், இது மாணவர்களிடையே தோல்வி விகிதத்தை அதிகரிக்கிறது என்றார்.


மாணவர்கள் ஏன், எப்போது திறந்தவெளிப் பள்ளிக்கு தள்ளப்படுகிறார்கள்?


டெல்லியில், 9 ஆம் வகுப்பில் இரண்டு முறை தோல்வியுற்ற மாணவர்கள் தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open School (NIOS)) அல்லது Patrachar பள்ளிகளில் சேரலாம், அவை வார இறுதி வகுப்புகள் மற்றும் தொலைதூர கல்வி முறையில் வகுப்புகளை நடத்துகின்றன. பல டெல்லி அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடையாத ஆனால் பலவீனமான கல்வி செயல்திறனைக் கொண்ட மாணவர்களும் திறந்தவெளி பள்ளியில் சேர பள்ளி நிர்வாகத்தால் நிர்பந்திக்கப்படுகிறார்கள். 

 

குப்தா கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சியமைத்த போது, மாநிலத்தின் கல்வி முறையை மாற்றம் செய்தது. இது ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ முடிவுகளில் சரியான தேர்சி சதவீதத்தை உருவாக்க அரசாங்கம் பள்ளிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. நல்ல மதிப்பெண் பெறாத பல மாணவர்கள் திறந்தவெளி பள்ளியை நோக்கி தள்ளப்படுகிறார்கள்” என்று கூறினார். 


மாணவர்கள் சிறப்பாக செயல்படவும், பள்ளிக் கல்வி முறையிலிருந்து வெளியேறாமல் இருக்கவும் டெல்லி அரசு சோதனை முயற்சியாக தேசிய திறந்தநிலைப் பள்ளியைத் (National Institute of Open School (NIOS)) தொடங்கியது. ஆனால் பல மாணவர்களும் பெற்றோர்களும் கல்வியின் தரம் தரமாக இல்லை என்று கூறி வருகின்றனர்.


இந்த ஆண்டு 903 அரசுப் பள்ளிகளில் 17,308 மாணவர்கள் 9ஆம் வகுப்பில் தோல்வியடைந்துள்ளனர். இதில், 6,200 மாணவர்கள் (சுமார் 36%) NIOS இல் பதிவுசெய்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 9 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களில் 10% NIOS மூலம் திறந்தவெளிப் பள்ளியில் சேர்ந்ததாக அறிவித்தது. அவர்களில், 38% பேர் அடுத்த ஆண்டு 9 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர், 12% பேர் மீண்டும் தோல்வியடைந்தனர்.


இந்த சவாலை சமாளிக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன?


டெல்லி அரசு பல ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய பாடங்களில் சிரமப்படும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த வகுப்புகளில் உள்ள முக்கிய பாடங்களில் ஒன்று கணிதம்.

ஆசிரியர் பயிற்சி திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

 

கல்வித் துறையின் மிஷன் புனியாத் (Mission Buniyaad) திட்டத்தின் கீழ், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன. இந்த திட்டம் 3 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை மையமாகக் கொண்டது.

 

மணீஷ் சிசோடியா இரு மடங்கு உத்தியை அறிமுகப்படுத்தினார். முதலில், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் கண்டறியப்படுவார்கள். இரண்டாவதாக, இந்த மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும். பள்ளிக்கு வெளியே இருக்கும் போது அவர்கள் செய்த வேலைகள் அடையாளம் காணப்படும். இந்த வேலையின் அடிப்படையில் அவர்களின் திறன்களை வளர்க்க அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.



Original article:

Share: