இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் (National Institution for Transforming India (NITI Aayog)) கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது
பிரதமர் தலைமையில் நிதி ஆயோகின் ஒன்பதாவது கூட்டம் டெல்லியில் நடைப்பெற்றது. 10 மாநில மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் ஒன்றிய பட்ஜெட் குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். தங்களது மாநிலத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்க்கான திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புறக்கணிப்பு மற்றும் வெளிநடப்பு ஆகியவை பிரச்சனைகள் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. சிந்தனைக் குழு (think tank), ஒன்றிய அரசின் ஆலோசனை அமைப்பாக மட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத மாநில அரசுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் தனது முதல் ஆட்சி காலத்தில் (2014-2019) திட்டக்குழுவில் பல்வேறு மாற்றங்களை செய்து நிதி ஆயோக் ஆயோக்கை உருவாக்கியது. திட்டக் குழு பயன்படுத்திய ‘மேல்-கீழ்’ (“top-down”) அணுகுமுறையை அகற்றுவதே அரசின் நோக்கமாக இருந்தது. மாறாக, ‘கூட்டுறவு கூட்டாட்சி’ (“cooperative federalism”) என்பதில் முழு கவனம் செலுத்தப்பட்டது.
நிதி ஆயோக் ஒரு ஆலோசனை அமைப்பு மட்டுமே. மாநிலங்களுக்கு வளங்களை பகிர்ந்தளிக்கவோ அல்லது ஒதுக்கீடு செய்யவோ அதற்கு அதிகாரம் இல்லை. இது மாநிலங்களை மதிப்பிடுவதற்கான குறியீடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாக தற்செயலாக ‘போட்டி கூட்டாட்சிக்கு’ (“competitive federalism”) வழிவகுத்தது. மாநிலங்களுக்கான மானியங்கள் அளிப்பது குறித்து முடிவெடுக்க நிதி அமைச்சகத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இதற்கு மாறாக, திட்டக்குழு மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அந்த அமைப்பு இருந்த வரை நிதி ஒதுக்கிடு சம்மந்தமான விசியங்கள் பற்றி மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தியது.
பாரதிய ஜனதா கட்சி மாநில தேர்தல்களில் "இரட்டை இயந்திர அரசு" (“double engine”) என்ற வாக்குறுதியுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கியது. முதலீட்டுத் திட்டங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி அல்லாத மாநில அரசுகள் புறக்கணிக்கப்படுவதாக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் பீகார் மற்றும் ஆந்திர பிரேதேசத்தை ஆளும் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சிப் பிரச்சினைகள் உள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் கோரிக்கைகளை பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோரிக்கைகளின் தகுதியைப் பொருட்படுத்தாமல், திட்டக் குழுவிற்கு பிறகு, மானியங்கள் மற்றும் திட்டங்களில் மாநிலங்களுடனான ஆலோசனைகள் குறைந்துள்ளன.
16-வது நிதி ஆணையம் மாநிலங்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை (horizontal imbalance) சரிசெய்வதற்காகச் செயல்படுகிறது. நிதி அமைச்சகம் பெருநிலைப் பொருளாதாரம் (macro-economic) ஸ்திரத்தன்மை மற்றும் நிதி அமைப்பில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், மாநிலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் மூலதன முதலீடுகள் மூலம் வளர்ச்சியை எதிர்கொள்வதற்கு ஒன்றிய அரசின் ஆதரவு தேவை.
இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் (National Institution for Transforming India (NITI Aayog)) மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். திட்டக் குழுவிற்கு இருந்த சில பொறுப்புகளை நிதி ஆயோக் ஏற்க வேண்டும். இது ‘கூட்டுறவு கூட்டாட்சியின்’ ("cooperative federalism") உண்மையான வடிவத்தை அடைய உதவும்.