இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு நிபுணத்துவத்தை அதிகளவில் நம்பியுள்ளது. குறிப்பாக சீனாவின் நிபுணத்துவத்தை சார்ந்துள்ளது.
சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்திய அதிகாரிகள் அதிக விசா வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்திய வணிகங்களுக்கு அவர்களின் உதவி அவசியம் தேவை. இதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்பாட்டு துறையின் செயலாளரானா ராஜேஷ் குமார் சிங் இந்திய நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று சீன மற்றும் இந்திய தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க திறன் இடைவெளி இருப்பதாக நிறுவனங்களின் கூற்றை ஏற்றுக்கொண்டார்.
வேலூரைச் சேர்ந்த காலணி உற்பத்தியாளர் ஒருவர் இந்த இடைவெளியை விளக்கினார். சீன வல்லுநர்கள் அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்கள் என்று அவர் கூறினார். இந்தியத் தொழிலாளர்கள் 100 பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் அதே வளங்களைக் கொண்டு சீனர்களால் 150 பொருட்களைத் தயாரிக்க முடியும் என்றார்.
சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிக விசா வழங்குவதற்கான அழைப்பை இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ஆதரிக்கிறார்.
இந்திய வணிகங்கள், காலணி மற்றும் ஜவுளி முதல் பொறியியல், மின்னணுவியல் வரை, சீனாவிலிருந்து இயந்திரங்களை வாங்கியுள்ளன. இருப்பினும், சீன தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியின்றி அவர்களால் இந்த இயந்திரங்களை உற்பத்தி செய்ய முடியாது. இயந்திரங்கள் செயலிழந்து கிடப்பதையும், ஏற்றுமதி ஆர்டர்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதையும் இந்திய தொழில் சங்கங்களின் தலைவர்கள் தொடர்ந்து அதிகாரிகளுக்கு நினைவூட்டுகிறார்கள். கௌதம் அதானியின் சோலார் உற்பத்தி நிலையமும் சீனத் தொழிலாளர்களுக்கான விசாக்களுக்காகக் காத்திருக்கிறது.
இந்தியாவின் குறிப்பிடத்தக்க திறன் பற்றாக்குறையை ஒப்புக்கொள்வது அவசியம். எளிமையான, உழைப்பு மிகுந்த வேலைக்கு கூட நிறைய சிறப்பு அறிவு தேவை என்பதற்கான தெளிவான சான்றுகளைக் காண்பது அரிது.. சீனா கடந்த 40 வருடங்களாக இந்த நிபுணத்துவத்தில் முன்னேரியுள்ளது. இது உலகின் உற்பத்தி மையமாக சீனாவை மாற்றியது. சீன வல்லுநர்கள் மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தைப் பெருவார்கள். இருந்த போதிலும், சர்வதேச நிபுணர்கள் மீது அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி சீன நிபுணர்களை கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்பாடு சிக்கலாக உள்ளது. உலகத் திறன் வரிசையில் மிகக் குறைந்த படிகளில் இந்தியா கால் பதிக்க சீன வல்லுநர்கள் உதவ முடியும். இந்த முன்னேறும் வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சீனர்களுக்கு அதிக விசா வழங்குவதற்கான வாக்குறுதியை அரசாங்கம் ஏற்கனவே தாமதப்படுத்தி வருகிறது. இந்த தருணத்தில் உண்மையான குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பரிதாபகரமான நிலையில் இந்தியக் கல்வி உள்ளது. இப்படிப் பேசினாலும் உலகமே இந்தியாவுக்காகக் காத்திருக்கவில்லை. வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி இல்லாமல், வேலை செழிப்பு நன்றாக இருக்காது. உள்நாட்டுக் கல்வியும் பெருமளவில் மேம்படுத்தப்பட வேண்டும். இது சீனாவிற்கும் பொருந்தும்.
விசா வாய்ப்புகளை ஊக்கப்படுத்துதல்
2019ஆம் ஆண்டில், 200,000 சீனர்கள் விசாவைப் பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் இந்திய மற்றும் சீனத் துருப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை கனிசமாக குறைந்தது. சீனர்கள் விசா நிபந்தனைகளை மீறியதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இந்தியாவின் வரிச் சட்டங்களை ஏய்ப்பதற்காகவும் மேலும் அவர்கள் பணமோசடி செய்ததாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டினர். கடந்த ஆண்டு, சீனப் பணியாளர்களுக்கான விசா எண்ணிக்கை 2,000 ஆகக் குறைந்தது. பாதுகாப்பு சார்ந்த மனநிலை வேரூன்றியுள்ளது. இந்த ஆண்டு, சீன எலக்ட்ரானிக்ஸ் நிபுணர்களுக்கு 1,000 விசாக்கள் கூட வழங்கவில்லை
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகள் சாதகமான கருத்துக்களை தெரிவித்தனர். இருப்பினும், ஒரு கேபினட் அமைச்சர், பெயர் குறிப்பிடாமல் எதிர்பார்ப்புகளைத் தீர்த்தார். சீன தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வணிகர்களுக்கு பரிசீலிக்கப்பட்ட பின்னரே விசா வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். இந்த பரிசீலனைக்கு பயண நிபந்தனைகள் மீறப்படாது என்ற உத்தரவாதம் தேவை.
சக்திவாய்ந்த தேசிய பாதுகாப்பு வாதம் "தற்சார்பு இந்தியா" (Atmanirbhar Bharat) என்ற வார்த்தையில் உள்ளது. இந்த வார்த்தையின் அர்த்தம் தற்சார்பு இந்திய உற்பத்தியின் பொற்காலம். இந்திய அதிகாரிகள் தன்னம்பிக்கையைத் தூண்டுவதன் முரண்பாட்டை உணரவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் வெளிநாட்டு நிபுணத்துவத்தைச் சார்ந்துள்ளது. இந்த நிபுணத்துவத்தின் பெரும்பகுதி சீனாவிலிருந்து வருகிறது.
வெளிநாட்டு அறிவை ஒருங்கிணைத்தல்
கிழக்கு ஆசியாவின் பொருளாதார வரலாறு, வெளிநாட்டு அறிவு முக்கியமானது என்பதை நமக்குக் கற்பிக்கிறது. ஆனால், போதுமான கல்வியறிவு பெற்ற மக்கள் இருந்தால் மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியமாகும். பலவீனமான இந்தியக் கல்வி வெளிநாட்டு நிபுணத்துவத்தை அவசரமாக்குகிறது. 1980களில், கொரிய வணிகங்கள் வெளிநாட்டு இயந்திரங்களை வாங்கினார்கள். அவர்கள் இந்த இயந்திரங்களை அகற்றி, தலைகீழ் பொறியியல் செய்தனர். அந்த நேரத்தில், கொரியா கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வலுவான கல்வியைப் பெற்றிருந்தது. இதன் காரணமாக, அவர்களுக்கு மிகக் குறைந்த மனித உதவி தேவைப்பட்டது. இந்த இயந்திரங்கள் மூலம் வெளிநாட்டு அறிவைப் பெற்றனர்.
1980களின் முற்பகுதியில் சீனா தனது விரைவான வளர்ச்சியைத் தொடங்கியது. அந்த நேரத்தில், சீனாவின் கல்வி முறை கொரியாவைப் போல வலுவாக இல்லை. இருப்பினும், கம்யூனிஸ்ட் காலத்தில், சீன ஆரம்பக் கல்வி தரமானதாக இருந்தது. இது சீனாவின் விரைவான வளர்ச்சிக்கான களத்தை அமைத்தது. இது, 1981 இல் உலக வங்கி அறிக்கையால் கணிக்கப்பட்டது.
உள்நாட்டுத் திறன்களை அதிகரிக்க, டெங் சியாபிங் (Deng Xiaoping) மூத்த கொள்கை வகுப்பாளர்களை சர்வதேச ஆய்வுப் பயணங்களுக்கு அனுப்பினார். உலக அறிவை சீனாவிற்கு கொண்டு வர வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் அவர் அழைத்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவின் இந்த கலவையானது சக்திவாய்ந்ததாக நிரூபிக்கப்பட்டது. இது சீனாவை உலகின் முன்னணி உற்பத்தி மையமாக மாற உதவியது.
இந்தியாவும் அதிகப் பள்ளிகளைக் கட்டி அதிக குழந்தைகளைச் சேர்த்து கல்வியை வழ்ங்கியது. இருப்பினும், கற்றல் விளைவுகளின் ஆய்வுகள் இந்த பள்ளிகள் குழந்தைகளுக்கு குறைவான திறம்பட கல்வியைக் கற்பித்துள்ளன என்பதைக் காட்டுகின்றன.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னணி அறிஞரான எரிக் ஹனுஷேக் (Eric Hanushek), இந்தியப் பள்ளி மாணவர்களில் 15% பேர் மட்டுமே சர்வதேச பொருளாதாரத்திற்குத் தேவையான அடிப்படை வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறன்களைப் பெற்றுள்ளனர் என்று கூறுகிறார். மாறாக, 85% சீனக் குழந்தைகள் இந்தத் திறன்களைக் கொண்டுள்ளனர்.
சீனா தனது கல்வி முறையை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 2018 முதல், சீனப் பள்ளி மாணவர்கள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (Organisation for Economic Co-operation and Development (OECD)) நடத்தப்படும் சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான திட்டத்தின் (Programme for International Student Assessment (PISA)) ஆய்வில் உலகத் தரம் வாய்ந்த கற்றல் நிலைகளை அடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றன.
இந்தியா 2009 இல் சர்வதேச மாணவர் மதிப்பீட்டில் (Programme for International Student Assessment (PISA)) பங்கேற்றது, ஆனால் மோசமான செயல்திறன் காரணமாக விலகியது.
சிவப்பு ராணி இனம் (Red Queen race)
லூயிஸ் கரோலின் (Lewis Carroll’s) த்ரூ த லுக்கிங் கிளாஸ் (Through the Looking Glass) நாவலில் சிவப்பு ராணி கற்பித்த ஒரு அடிப்படைப் பாடத்தை சீனா கற்றுக் கொண்டு அதன் படி செயல்படுகிறது. ஒரே இடத்தில் இருக்க உங்களால் முடிந்தவரை இரண்டு மடங்கு வேகமாக ஓட வேண்டும். நீங்கள் முன்னேற அதை விட வேகமாக ஓட வேண்டும். சீன பல்கலைக்கழகங்கள் உலகின் சிறந்தவை, குறிப்பாக கணினி அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறப்பாக உள்ளன. சீன விஞ்ஞானிகள் தொழில்துறை முன்னேற்றத்துடன் தொடர்புடைய பல்வேறு பயன்பாட்டு அறிவியல்களில் முன்னேற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் தொழில்நுட்பத்தில் சீனா உலகில் முன்னணியில் உள்ளது மற்றும் செயற்கை நுண்ணறிவில் முன்னேறி வருகிறது.
சுருக்கமாகச் சொன்னால், உலகளாவிய தொழில்நுட்பத்தில் சீனா முன்னணியில் உள்ளது. இந்த சாதனை மேற்கத்திய தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தலைவர்கள் தங்கள் தோல்வியுற்ற கல்வி முறைகளைச் சரிசெய்வதற்கு பதிலாக, சீன இறக்குமதிகளுக்கு எதிராக நியாயமற்ற போட்டியைக் கூறி வர்த்தக தடைகளை சுமத்துகின்றனர். இருப்பினும், அத்தகைய பாதுகாப்புவாதம், "தொழில்துறைக் கொள்கை" என்று கட்டமைக்கப்பட்டாலும் கூட, அவர்களின் கல்வி முறைகளில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது.
சீனாவின் முன்னுதாரணத்திலிருந்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள முடியவில்லை. பொருளாதார வல்லுநர்கள் ரோஹித் லம்பா மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோர் உழைப்பு மிகுந்த தயாரிப்புகளின் பெரிய உலகளாவிய சந்தைக்கான இந்திய வேலைகளை உருவாக்குவதில் நம்பிக்கையை இழந்துள்ளனர். அதற்குப் பதிலாக, தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட சேவை ஏற்றுமதியில் இந்தியா வேலைகளை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த முன்மொழிவு உயர்தர இந்தியப் பல்கலைக்கழகக் கல்வியின் சிறிய அடித்தளத்தை புறக்கணிக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் சீரழிவு குறித்த வரலாற்றாசிரியர் முகுல் கேசவனின் உருக்கமான விவரிப்பு நமக்கு நினைவூட்டுவது போல, இந்தியா, அதன் சில சிறந்த நிறுவனங்களை அகற்றி வருகிறது.
இந்தியாவின் யதார்த்தம்
கோவிட்-19 ஆண்டுகளில் தொழில்நுட்பம் தொடர்பான சேவை ஏற்றுமதியில் இந்தியாவின் வேகம் குறைந்துள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழக பட்டதாரிகள் கூட வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். பெங்களூரின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆதரவு, பராமரிப்பு மற்றும் அடிப்படை நிரலாக்கப் பணிகளில் (basic coding roles) முன்பு பணியாற்றிய பல நபர்கள் இப்போது கிக் பொருளாதாரத்தில் (gig economy) வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். 2023 இல் ஐந்து மில்லியனுக்கும் அதிகமாக இருந்த IT வேலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகை ஒரு பில்லியன் மக்கள் மற்றும் 600 மில்லியன் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை சிறியது.
இந்த நிலை இருந்தபோதிலும், Financial Times இன் மார்ட்டின் வுல்ஃப் (Martin Wolf), இந்தியா, உலகப் பொருளாதார வல்லரசாக மாறுவதற்கான பாதையில் இருப்பதாக கணித்துள்ளார். இந்தியா தனது குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கும் அதன் பரந்த மக்களுக்கு கண்ணியமான வேலைகளை வழங்குவதற்கும் போராடுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார். இந்தியாவும் "சீனா-பிளஸ்-ஒன்" வாய்ப்பை (China-plus-one window) இழந்துவிட்டது. இந்த வாய்ப்பை மெக்சிகோ மற்றும் வியட்நாம் பயன்படுத்திக் கொண்டன. மெக்சிகோ மற்றும் வியட்நாமின் சாதகமான இருப்பிடம் மற்றும் திறமையான பணியாளர்கள் ஆகியவை சீன தயாரிப்புகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டபோது அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள உதவியது. பெட்ரோ கெமிக்கல்கள் மற்றும் இரசாயனங்கள் தவிர்த்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது இந்தியாவை தவிர்த்து வருகின்றனர். இந்தியாவின் உழைப்பு மிகுந்த உற்பத்தி ஏற்றுமதிகள், உலக சந்தைகளில் 1.3% மட்டுமே. இது வியட்நாமின் பங்கை விட குறைவு.
வெளிநாட்டு நிபுணர்கள் இந்தியாவிற்க்கு வருவதை தேசிய பாதுகாப்பு மற்றும் தற்சார்பு நம்பிக்கை ஆகியவைத் தடுக்க இந்தியா அனுமதிக்கக்கூடாது. இந்த நிபுணர்களுக்கான விசாக்கள் தடுக்கப்பட்டால், இந்தியா முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பை இழக்க நேரிடும். பள்ளி மற்றும் பல்கலைக்கழக கல்வியில் நாடு பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. மேலும், ரூபாய் மதிப்பு அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்சனைகள், உழைப்பு மிகுந்த உற்பத்தி ஏற்றுமதிக்கான இந்தியாவின் வாய்ப்புகளை அச்சுறுத்துகின்றன.
இந்தியா தனது உலகளாவிய நிலையைப் பற்றி கனவு காண்பதற்குப் பதிலாக அதன் மனித வளத்தை மேம்படுத்த வேண்டும். உலகளாவிய போட்டி அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கண்ணியமான வேலைகளுக்காக காத்திருப்பதால் அதிக வாய்ப்புகள் இழக்கப்படும்.
அசோகா மோடி சமீபத்தில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.