மனநோயால் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களின் உரிமைகளைப் பாரமரித்தல் மற்றும் மேம்படுத்துதலில் கவனம் செலுத்துவது அவசியமானது.
மனநோயால் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களை (Homeless persons living with a mental illness (HPMI)) சமூகம் பெரும்பாலும் அடைக்கலம் தேடுபவர்களாகவே பார்க்கிறது. இது அவர்களை மனநல மருத்துவமனைகள், ஆதாரவற்றவர்களுக்கான தங்குமிடங்கள், பிச்சைக்காரர்களின் வீடுகள் அல்லது சிறைச்சாலைகளுக்கு செல்லக் காரணமாகிறது. இந்த இடமாற்றங்கள் தன்னார்வமாகவோ அல்லது கட்டாயமாகவோ இருக்கிறது. மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்துகள் காரணமாக தெருக்களில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற முக்கிய யோசனை செல்லுபடியாகும், ஆனால் விவாதிக்கப்படலாம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு மனநல நிபுணர்களின் மீதான பார்வை குறைவாகவே இருந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்புகளை உருவாக்குதல், அவர்களை தேர்வு செய்தல், அவர்களுக்கான தங்குமிடத்தை உருவாக்குதல் மற்றும் சிகிச்சை அளித்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினோம். பல சூழ்நிலைகளில் சமூக ஒழுங்கு மீதான கண்ணோட்டம் முக்கியமானதாக இருந்தது. நமது சமூகம் பல மூட நம்பிக்கைகளுக்கு இடமளித்து கொண்டிருக்கும் போது இவர்களை பாதுகாக்கும் முயற்சிகளை நாம் செய்து கொண்டிருந்தோம். தற்போதைய விதிமுறைகளை எப்போதும் பின்பற்றாத ஒரு சமூகம் இருப்பது மிகவும் சவாலானது. கலாச்சாரம், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களால் இதை சரிசெய்ய மேலும் சிறிது காலம் ஆகலாம்..
சவாலான கருத்துக்கள் மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகள்
மனநல நிபுணர்களின் ஈடுபாடு பெரும்பாலும் இந்த முயற்ச்சிகளை நன்கு ஆதரிக்கலாம். வீடற்ற மக்கள் பெரும்பாலும் மற்ற வீடற்ற நபர்கள், உள்ளூர் உணவகங்கள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் ஆதரவு நெட்வொர்க்குகளை உருவாக்குகிறார்கள், இது அவர்களுக்கு சொந்தமான உணர்வைத் தருகிறது. அடக்குமுறை, முறைகேடுகள், மோசமான மனநலம் பாதித்த நிலைகளில் உள்ளவர்களும் இதில் அடங்குவர். இந்த நிலையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கும், தீர்வு காண்பதற்கும் தற்போது கொடுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச முயற்சியை விட அதிகமாக தேவைப்படுகிறது.
இந்தியாவில் மனநோயால் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களை ஆதரிப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சி இந்தியாவில் பல நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பாகும். தேசிய சுகாதார இயக்கம் (National Health Mission), தமிழ்நாடு சுகாதாரத் துறை (Tamil Nadu Department of Health), மனநல நிறுவனம் (Institute of Mental Health), தி பனியன் (The Banyan), அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை (Azim Premji Foundation) மற்றும் உள்ளூர் சிவில் சமூக அமைப்புகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த ஒத்துழைப்பு மாவட்ட மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களை (Emergency care and recovery centres (ECRC)) உருவாக்க வழிவகுத்தது. இந்த ஒருங்கிணைப்பு இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.
முதலாவதாக, இது ஒர் நோயுற்ற மனிதனின் சிகிச்சை முறைகளை முற்றிலும் மாற்றி அமைக்கிறது. மிக முக்கியமாக, இது அதிகமான மக்களுக்கு விரைவாக சேவைகளை வழங்குகிறது. இது பல்வேறு இடங்களில் உடனடி கவனிப்பு மற்றும் நெருக்கடித் தேவைகளை உறுதி செய்கிறது. உலகளவில், இந்தியா உட்பட, சேவை நிபுணர்களின் பற்றாக்குறை, தனிப்பட்ட கவனம் தேவைப்படுபவர்களுக்கான அமைப்புகளை எதிர்மறையாகப் பாதித்துள்ளன.
இரண்டாவதாக, இது நன்கு தேர்ச்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டு சீறிய முறைகளில் பராமரிக்கிறது. இந்த அமைப்பு தனிப்பட்ட கவனிப்பையும் சிறந்த மருத்துவ சேவையையும் உறுதி செய்கிறது. நீண்டகால துன்பங்களை எதிர்கொண்ட நபர்களில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் இது முக்கியமாகப் பயன்படுகிறது.
சமீபத்திய கொள்கை மாற்றங்கள் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் அதே வேளையில், அவை ஆழமான ஈடுபாடு மற்றும் நீண்டகால உறுதிப்பாட்டையும் முன்னெடுத்து செல்கின்றன. மனித உரிமைகள் எப்போதும், ஏன் பறிக்கப்படுகின்றன என்பதையும் நாம் விமர்சன ரீதியாக ஆராய வேண்டும். சமூகம் அணுகுமுறை மற்றும் நடைமுறையை முழுமையாக ஆராய வேண்டும். மேலும் சிக்கலான பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் தலைமை மற்றும் நிர்வாக அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இந்தச் சூழலில், தோற்றத்தின் அடையாளத்தை கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, அதிக முடி உடைய நபர்கள் அல்லது மொட்டையடிக்கப்பட்ட நபர்கள் போன்றவர்கள் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம். கணநாத் ஒபேசேகர் (Gananath Obeyesekere) குறிப்பிடுவது போல், விதவைகள் அல்லது மனநல மருத்துவமனையில் வசிப்பவர்களைப் பார்க்கும்போது மொட்டையடிக்கப்பட்ட தலை துறவைக் குறிக்கும். அதை உடனடியாக மனநோயுடன் இணைக்கக் கூடாது. எனவே, நாம் நன்கு புரிதல் கொண்ட சேர்க்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டும். மனநோயால் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களின் தெரு வாழ்க்கை கஷ்டமானவை என்றாலும், அவர்களுக்கான கட்டாய கவனிப்பு பெரும்பாலும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
நிறுவன இடங்களில் உள்ள சிக்கல்கள்
இதற்கிடையில், மாநில மனநல வசதிகள் மற்றும் பிற பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் சுமார் 37% மக்கள் நீண்டகால தேவைகளை அனுபவிக்கின்றனர். இவர்கள் சராசரியாக ஆறு ஆண்டுகள் தங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வீடற்ற சூழ்நிலைகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் நீதித்துறை தலையீட்டின் விளைவாக இந்த அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 2017- ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம், ஒரு பொது நல வழக்கில் மாநில அரசுகள் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் (Department of Empowerment of Persons with Disabilities Ministry) கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, மறுவாழ்வு இல்லங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மேலும், "குணப்படுத்தப்படுவர்கள்" மற்றும் "வெளியேற்றத்திற்கு தயாராக உள்ளவர்கள்" என அடையாளம் கண்டு அவர்களை, சமூகத்தில் வாழ்வதற்கான தகுதிகளை ஏற்படுத்தி அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். சமூக அமைப்புகளில் இருந்து விலகி இருப்பதை குறைத்தல், சமூகத்தில் சம அளவில் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
உலக அளவிலும் இந்தியாவிலும், ஹவுசிங் ஃபர்ஸ்ட் மற்றும் தாராஷா (Housing First and Tarasha offer) போன்ற பெரிய அளவிலான வீட்டுவசதி முயற்சிகள் சமூக மற்றும் மருத்துவ கவனிப்பை வழங்குகின்றன. பல்வேறு குறைபாடுகள் மற்றும் மருத்துவத் தேவைகள் உள்ளவர்களுக்கு இத்தகைய விரிவான தேவை உள்ளது என்பதை அவை காட்டுகின்றன. இதேபோல், 700 க்கும் மேற்பட்டோர் ‘ஹோம் அகைன்’ (Home Again) திட்டத்தின் மூலம் வீட்டு வசதி மற்றும் சமூகப் பாதுகாப்பு பெற்றுள்ளனர். இந்த முயற்சி 2018 இல் ஒரு ஆராய்ச்சி சோதனையாக தொடங்கியது, இது கனடாவால் ஆதரிக்கப்பட்டது, பின்னர் இந்திய ஊரக ஆதரவு அமைப்பு (Rural India Supporting Trust) உதவியுடன் விரிவுபடுத்தப்பட்டது. தமிழக அரசும் பிற தேசிய அமைப்புகளும் அதை ஏற்றுக்கொண்டனர். மிதமான குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து இடம் மாறுபவர்களுக்கு, மறுவாழ்வு இல்லங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த வசதிகள் மேம்பட்ட சமூக பாதுகாப்பை வழங்குகின்றன.
ஆதரவு நடவடிக்கைகளை மாற்றுதல்
மனநோயால் பாதிக்கப்பட்ட வீடற்ற மக்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றும் ஆதரவு நடவடிக்கைகளுக்கு ஒரு தீவிர மாற்றம் தேவைப்படுகிறது. மாதாந்திர ஊனமுற்றோர் உதவித்தொகை ₹1,500 ரூபாய், குறைவாக இருந்தாலும், சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஒரு முக்கிய ஆதரவாக இருக்கலாம். ஆதார் அடையாள அட்டை மூலம் வங்கி அணுகலை எளிதாக்குவது போன்ற சிக்கல்களைச் சமாளிப்பதன் மூலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதிச் சேர்க்கை மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தலாம்.
இந்த ஆவணங்கள் மற்றும் நிதி உதவிகள் மேலும் ஆக்கப்பூர்வமான மற்றும் விரிவான அணுகுமுறைகளுடன் இணைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், பாகுபாடுகாட்டுதல், வன்முறைகள், பிரிவினை சார்ந்த பிரச்சனைகள் முக்கியமானதாக கவனிக்கப்பட வேண்டும். சமூக பராமரிப்பு மற்றும் அவர்களின் ஆதரவு நிலை ஆகியவை மேம்படுத்தப்பட்டு, மாவட்ட மனநலத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மாநில மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் முயற்சிகள் காரணமாக, மூன்று ஆண்டுகளில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களை(Emergency care and recovery centres (ECRC)) விட்டு வெளியேறிய 75% மனநல சேவை பயனர்கள் வெளியேற்றத்திற்குப் பிறகும் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த விகிதம் உலக சராசரியை விட அதிகம்.
பொருளாதார நீதியை முன்னெடுப்பது முறையான தடைகளை எதிர்கொள்வது, தனிப்பட்ட அமைப்புகளிடமிருந்து உயர்த்துவது ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தொழிலாளர் பங்கேற்பு எளிதாக்கப்படும்போது, பொருளாதாரத்தை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறும். பாரம்பரிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்பயிற்சி முயற்சிகள் பெரும்பாலும் சமகால பொருளாதார முறைகளில் இருந்து பிரிக்கப்படுதல் உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மை பற்றிய கருத்துக்களில் கவனம் செலுத்துகின்றன. இந்த சூழலில், தனிநபர்களின் குழுக்கள் உழைப்பை பரிமாறிக்கொள்ளும் சமூக கூட்டுறவுகள் ஒரு நம்பிக்கைக்குரிய வழியை வழங்குகின்றன மற்றும் சமூகம் மற்றும் நோக்கத்தின் உணர்வை வளர்க்கின்றன. நமது முயற்சிகள் சமூக மூலதனத்தை வளர்ப்பதற்கும், மனநோயால் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களின் கணிசமான சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தைத் தூண்டும் உறுதியான செயல் கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இத்தகைய ஆய்வு செய்யப்பட்ட அணுகுமுறைகளை ஒருங்கிணைக்கும் கொள்கையை விரைவில் வெளியிடும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்.
இந்தியாவில் மனநலக் கோளாறுகள் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன
இந்த பன்முக அணுகுமுறை மனநோயால் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களின் எண்ணிக்கையை குறைத்து காண்பிப்பது அவர்கள் மீதான பார்வையைச் சவால் செய்யும். மேலும், இது அவர்கள் சார்ந்த அமைப்பை வலுப்படுத்தும் ஒரு கட்டமைப்பை ஊக்குவிக்கிறது மற்றும் அவர்களின் விருப்பங்களை ஆதரிக்கிறது. மேலும் சமூகத்தில்அவர்களுக்கான இடத்தையும்,அவர்களின் உரிமையையும் ஆதரிக்கிறது.
வந்தனா கோபிகுமார், The Banyan Academy of Leadership in Mental Health and Aaladamara நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மற்றும் முப்பது ஆண்டுகள் மனநோயால் பாதிக்கப்பட்ட வாழும் வீடற்ற நபர்களுடன் பணியாற்றியுள்ளார். சுப்ரியா சாஹு, தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர். லக்ஷ்மி நரசிம்மன், The Banyan நிறுவனத்தின் இயக்குனர்.