உத்தரகண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில், இளம் குழந்தைகளின் தாய்மார்களில் 30-40% பேர் 10 ஆம் வகுப்புக்கு மேல் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். தமிழ்நாட்டில், இந்த எண்ணிக்கை 43% க்கு அருகில் உள்ளது, இமாச்சலப் பிரதேசத்தில் இது 54% க்கும் அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது, இந்த தாய்மார்களில் கிட்டத்தட்ட 72% பேர் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைப் பெற்றுள்ளனர்.
புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 (National Education Policy 2020) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 29 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை 2020-இன் முக்கிய பரிந்துரைகளில் ஒன்று, குழந்தைகள் 3 ஆம் வகுப்பை நிறைவு செய்யும் நேரத்தில், அவர்கள் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் திறன்களைப் பெற்றிருப்பதை உறுதி செய்வதாகும்.
இந்த நோக்கத்திற்காக, மத்திய அரசு, புரிந்துணர்வு மற்றும் எண்ணறிவுடன் படித்தலில் தேர்ச்சிக்கான தேசிய முன்முயற்சி (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN)) பாரத் மிஷனை (Bharat Mission) ஜூலை 5, 2021 அன்று தொடங்கியது. இந்த இயக்கம் பல மாநிலங்களில் தீவிரமாக செயல்படுத்தப்படுத்தப்பட்டது. கல்வியின் அடித்தள நிலைக்கான புதிய கட்டமைப்பை உருவாக்கியது.
புதிய இலக்குகளை கொண்ட ஆசிரியர் பயிற்சி, ஆரம்ப வகுப்பு வகுப்பறைகளில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கற்பித்தல்-கற்றல் பொருட்கள் போன்றவை இந்த கட்டமைப்பில் அடங்கும். பள்ளிகளில் உள்ள முயற்சிகளுக்கு கூடுதலாக, சமூக மற்றும் மக்கள்தொகை போக்குகள் உள்ளன, அவை திறம்பட பயன்படுத்தினால், NIPUN பாரத் திட்டத்தை வலுப்படுத்த உதவும்.
குழந்தைகளின் கற்றல் பயணத்தை வலுப்படுத்த அவர்களின் பங்களிப்பு எவ்வாறு உதவும் என்பதைப் பார்க்க, பெற்றோர்கள், குறிப்பாக இளம் குழந்தைகளின் தாய்மார்கள் (4 முதல் 8 வயது வரை) மீது இங்கு கவனம் செலுத்தப்படுகிறது.
இரண்டு முக்கிய மக்கள்தொகைப் போக்குகள்
பள்ளி சேர்க்கை நிலைகள் (6-14 வயதுக்கு இடையில்) கடந்த சில பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டியுள்ளன. 2001-ஆம் ஆண்டில் சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan) தொடங்கப்பட்டதன் மூலம், 2000-ஆம் ஆண்டின் முற்பகுதியில் கிராமப்புற இந்தியாவில் பள்ளி சேர்க்கை அளவு 90% க்கும் அதிகமாக எட்டியது. அனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான உந்துதல் என்பது அதிகமான குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் அதிக விகிதத்தில் தொடக்கக் கல்வியை நிறைவு செய்வது அதிகரித்து வருகிறது.
4 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களின் கல்வி நிலைகள் குறித்த தரவு - நிபுன் பாரத் மிஷனின் (NIPUN Bharat mission) இலக்கு வயது - கடந்த பத்தாண்டில் செங்குத்தான உயர்வைக் காட்டுகிறது. வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)) கணக்கெடுப்பின்படி, 2010 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில், 5 ஆம் வகுப்புக்கு மேல் படித்த தாய்மார்களின் எண்ணிக்கை 35% முதல் கிட்டத்தட்ட 60% வரை உயர்ந்துள்ளது. உண்மையில், 2010-ஆம் ஆண்டில், 10% க்கும் குறைவான இளம் கிராமப்புற தாய்மார்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிப்படிப்பை முடித்திருந்தனர். 2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 20% க்கும் அதிகமாக இருந்தது.
உத்தரகண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில், இளம் குழந்தைகளின் தாய்மார்களில் 30-40% பேர் 10 ஆம் வகுப்புக்கு மேல் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். தமிழ்நாட்டில், இந்த எண்ணிக்கை 43% க்கு அருகில் உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் இது 54% க்கும் அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அங்கு, தாய்மார்களில் கிட்டத்தட்ட 72% பேர் உயர்நிலைப் பள்ளி கல்வியைப் பெற்றுள்ளனர்.
இருப்பினும், இந்தியாவில் உள்ள இளம் பெண்கள் மற்ற படித்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய விகிதத்தில் தொழிலாளர் சக்தியில் சேரவில்லை. காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு( Periodic Labour Force Survey (PLFS)) 2022 - 23-ஆம் ஆண்டின் சமீபத்திய தரவுகளின்படி, ஒட்டுமொத்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் வேலை தேடும் மக்கள்தொகையின் சதவீதத்தைக் காட்டுகிறது. இந்தியாவில் 37% மட்டுமே (கிராமப்புறத்தில் 41.5%, நகர்ப்புற இந்தியாவில் 25.4%). 15-29 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, (கிராமப்புறங்களில் 25.8%, நகர்ப்புற இந்தியாவில் 20.8%) ஆக குறைவாக உள்ளது.
படித்த தாய்மார்களை ஊக்குவித்தல்
இந்தியாவின் குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தின் (Labor Force Participation Rate) பொருளாதார தாக்கங்கள் இந்தியாவின் பொதுக் கொள்கை வட்டாரங்களில் விவாதிக்கப்படுகின்றன. இந்த விஷயத்தில் அதிக முன்னேற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் படித்த தாய்மார்கள் இளம் குழந்தைகளின் கற்றலை ஆதரிப்பதற்கான தனித்துவமான முறையை வழங்குகிறார்கள். தந்தையின் கல்வியும் முக்கியமானது என்றாலும், அவர்களால் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாத சூழ்நிலை உள்ளது. கிராமப்புற இந்தியாவில் 65.5% இளைஞர்கள் (15-29 வயதுக்குட்பட்டவர்கள்) பணியாளர்களின் ஒரு பகுதியாக உள்ளனர். அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவைப் பெறுவதற்கான குழந்தைகளின் பயணத்தில் இளம் தாய்மார்களின் பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான தனித்துவமான நிலையில் இந்தியா இன்று உள்ளது என்று மேலே கோடிட்டுக் காட்டப்பட்ட தரவு தெரிவிக்கிறது.
கொரோனா போன்ற கடினமான சூழ்நிலைகளில், இந்த ஈடுபாட்டிற்கான அடித்தளத்தை ஏற்கனவே அமைத்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டதால், பெற்றோர்கள் தங்கள் சொந்த கல்வி நிலைகளைப் பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகளின் கல்வியில் ஈடுபட வேண்டியிருந்தது. தொற்றுநோய்க்கு முன்பு, பெற்றோர்கள் பெரும்பாலும் கற்றல் செயலை பள்ளிகளுக்கு விட்டுவிட்டனர்.
நிபுன் பாரத் மிஷனின் (NIPUN Bharat Mission) இலக்குகளை அடைய குடும்பங்களின், குறிப்பாக தாய்மார்களின் தீவிர பங்கேற்பு மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். சிறு குழந்தைகள் வளரவும், செழிக்கவும், ஆசிரியர்களும் தாய்மார்களும் கைகோர்ப்பதை விட சக்தி வாய்ந்தது எதுவும் இருக்க முடியாது.
சஞ்சய் குமார், இந்திய அரசின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலர். ருக்மிணி பானர்ஜி, பிரதம் கல்வி அறக்கட்டளையின் ( Pratham Education Foundation)தலைமை நிர்வாக அதிகாரி.