கப்பல் போக்குவரத்து அதன் கனவு பட்ஜெட்டுக்காகக் காத்திருக்கிறது - சஞ்சய் பிரஷர்

 வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சுதேசி கப்பல் திட்டத்தை ஆங்கிலேயர்கள் முறியடித்து 100 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இன்னும் வலுவான  சொந்த, கப்பல் கட்டும் சூழல் அமைப்பு இல்லை.


கப்பல் என்பது அதிக அளவு, பணம் மற்றும் கனரகம் சார்ந்த வணிகமாகும், இது கிட்டத்தட்ட அந்நிய செலாவணியில் முக்கியமானவற்றை கையாள்கிறது. சில நேரங்களில் அந்நிய செலாவணின் சதவீதங்கள் பெரும்பாலும் குறைவாக இருக்கும், ஆனால் சில நேரங்களில் வியக்கத்தக்க வகையில் அதிகமாக இருக்கும். இந்தியாவின் உயர்மட்ட கட்டுப்பாட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வரி அதிகாரிகள் அதன் விவரங்களை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.


ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றியபோதே கப்பல் கட்டுததில் இந்தியாவுக்கு ஒரு புகழ்பெற்ற வரலாறு உள்ளது. பின்னர் அவர்கள் உள்நாட்டு கப்பல் தொழிலை 20 ஆம் நூற்றாண்டில் மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளை நசுக்கினர். வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சுதேசி கப்பல் திட்டத்தை ஆங்கிலேயர்கள் முறியடித்து 100 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இன்னும் வலுவான சொந்த, கப்பல் கட்டும் சுற்றுச்சூழல் அமைப்பு இல்லை.


கடந்த காலத்தில், இந்தியாவில் சிலர் கப்பல் போக்குவரத்தை தேசிய இறையாண்மையின் முக்கிய அங்கமாகக் கருதினர். இந்த கருத்தை ஆதரிக்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் இருந்தன. இருப்பினும், இன்று, இந்தியாவில் கப்பல் போக்குவரத்து முக்கியமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்தால் பாதிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் இந்தியாவிற்கு வெளியே எடுக்கப்பட்ட முடிவுகளால் நிர்வகிக்கப்படுகிறது.


கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் மொத்த வணிகக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்று, கிட்டத்தட்ட எந்த வணிகக் கப்பல்களும் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. சீனா உலகின் தலைசிறந்த கப்பல் கட்டும் நிறுவனமாக மாறியுள்ளது. அதே நேரத்தில், இந்தியா இப்போது மிகப்பெரிய கப்பல் கட்டும் தளங்களைக் (shipyard) கொண்டுள்ளது.


  பல சாதகமான அம்சங்களில் இந்திய கப்பல் மேலாண்மை நிறுவனங்களின் எழுச்சியும் இதில் அடங்கும். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தியாவிற்கு வெளியே பதிவு செய்யப்பட்டு செயல்படுகின்றன. கூடுதலாக, இந்திய கடற்படையினர் முக்கியமான அந்நிய செலாவணியைக் கொண்டு வருகிறார்கள்.


2024-25ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய கப்பல் போக்குவரத்தை ஆதரிப்பதற்கான பல நடவடிக்கைகள் இருந்தன. குஜராத்தின் கிப்ட் சிட்டியில் (Gift City) கப்பல் குத்தகை கட்டமைப்புகள் குறித்தும், அது எவ்வாறு ஒரு முன்மாதிரியாக உள்ளது என்பது குறித்தும் பொருளாதார ஆய்வறிக்கை கூறியது. கப்பல் போக்குவரத்து பற்றி பேசப்படுவது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி மற்றும் அரசாங்கத்தில் முடிவெடுப்பவர்கள் உண்மையில் அதன் வளர்ச்சியில் ஆர்வமாக உள்ளனர் என்பதற்கான அறிகுறியாகும்.


பட்ஜெட்டில் உள்ள விவரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட கப்பல் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி நீக்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது. முந்தைய சட்டங்கள் சுங்கத்தில் தன்னிச்சையான கோரிக்கைகளுக்கு வழிவகுத்தன. இதன் விளைவாக பல கப்பல் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் கப்பல் போக்குவரத்தில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு அந்தச் சட்டங்களே காரணமாக இருந்தன.


கடந்த கால கொள்கைகள் பெரும்பாலும் அரசாங்கத்திற்கு சொந்தமான தேசிய நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவை (The Shipping Corporation of India) ஆதரித்தன. முன்பு பல பெரிய தனியார் கப்பல் உரிமையாளர்கள் இருந்தனர்.  ஆனால், அவர்கள் யாரும் இப்போது இல்லை. கடுமையான வரி அதிகாரிகளால் சிலர் வணிகத்தை விட்டு வெளியேறினர். ஒவ்வொரு நாளும் கப்பல் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் மில்லியன் கணக்கான டாலர்கள் பரிவர்த்தனைகள் காணப்படுவது இந்த அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று, கப்பல் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் அதிகம் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. மேலும், கப்பல் நிறுவனங்கள் இந்தியாவின் கார்ப்பரேட் துறையில் குறைவாகவே காணப்படுகின்றன.


இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார முகமை (East Europe Economic Corridor) போன்ற இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளை அரசாங்கம் வலியுறுத்தினாலும், இந்தியாவிற்குள் கொள்கலன்களின் உற்பத்தியை ஆதரிப்பதற்கான கொள்கைகளை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் கொள்கலன் உற்பத்தியில் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளது, இது ஒரு முக்கிய வர்த்தகத் தடையாக உள்ளது.


தற்போதைய பா.ஜ.க அரசு பல ஆண்டுகளாக சரியான குரல்களை எழுப்பி வருகிறது. ஆனால் உறுதியான முடிவுகளின் அடிப்படையில் செயல்படுத்த திட்டம் குறைவாகவே உள்ளது. 2016-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் உள்ள வாதவன் திட்டம் (Vadhavan project) அதன் முக்கிய துறைமுகத் திட்டமாகும். 2021 -ஆம் ஆண்டில், கப்பல் போக்குவரத்துக்கான ₹1 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டில் சுமார் ₹51,000 கோடி ஒதுக்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டில், ₹76,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதை முடிப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் இதுவரை குறிப்பிடவில்லை.


ஏற்கனவே பல வாய்ப்புகள் கடந்துவிட்ட நிலையில் கிஃப்ட் சிட்டி (Gift City) குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கிடைக்கக்கூடிய பணப்புழக்கம், நியாயமான மற்றும் வெளிப்படையான நடுவர் அமைப்பு மற்றும் வரவேற்கத்தக்க ஒழுங்குமுறை சூழல் ஆகியவற்றின் காரணமாக பல இந்தியர்கள் துபாயில் வெற்றிகரமான கப்பல் உரிமையாளர்களாக மாறியுள்ளனர். அவர்களை மீண்டும் கொண்டுவர, கிஃப்ட் சிட்டி (Gift City) குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் கவர்ச்சிகரமான கொள்கைகளை வழங்க வேண்டும்.


2022-ஆம் ஆண்டில், ஒரு புதிய வணிகக் கப்பல் சட்டம்  (Merchant Shipping Act) கொண்டுவரப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது நாடாளுமன்றத்தில் இன்னும் இயற்றப்படவில்லை. இந்த ஆண்டாவது இச்சட்டம் இயற்றப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. புதிய குத்தகை உரிமை முறையும், புதிய கொள்கையும் இச்சட்டத்தில் இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டு உள்ளது.


இந்தியர்களால் நிர்வகிக்கப்படும் கப்பல் நிறுவனங்களில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டாலும், இந்திய தனியார் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை அரசாங்கம் அனுமதிக்காதது அந்த கப்பல்களை ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா படகுகளுக்கு பாதிக்கப்படக்கூடியதாக மாற்றியுள்ளது. மற்ற நாடுகள் இதை முன்னெடுத்துச் சென்று, தங்கள் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். 


உலகெங்கிலும் கப்பல்களில் பயணம் செய்யும் மூன்று லட்சம் இந்திய மாலுமிகள், அனைத்து நாட்டினரையும் விட தங்கள் தாய் நாட்டால் மிகக் குறைவாக கவனிக்கப்படுபவர்களில் ஒருவராக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் மோசமான மனித உரிமை மீறல்களை அனுபவிக்கிறார்கள். மேலும் அவர்களை அரசாங்கம் வெறும் வரி வாய்ப்பாகப் பார்க்கிறது.


இந்தியாவின் தீவுகளில் ஒன்றை திறந்த கப்பல் பதிவேட்டில் (open ship registry) உருவாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம். இது வெளிநாட்டு நிறுவனங்களை அந்த தீவில் கப்பல்களை பதிவு செய்ய அனுமதிக்கும். இத்தீவு இலவச நங்கூரம் மற்றும் எரிபொருள் வசதிகளை அனுமதிக்கலாம்.  


இதன் மூலம் இது மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாறும். ஹாங்காங் ஒரு முக்கிய சர்வதேச நிதி மற்றும் வர்த்தக மையமாக மாறியதற்கு காரணம் அதன் கப்பல் தொழிலுக்கு உகந்த கொள்கைகளாகும். இந்த யோசனைக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கலாம்.

நாட்டை வளமாக்க இந்தியாவின் கப்பல் போக்குவரத்தின் திறனை உண்மையிலேயே பயன்படுத்த தைரியமான மற்றும் பெரிய முயற்சிகள் தேவை. கப்பல் போக்குவரத்து அதன் கனவு பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறது.


  சஞ்சய் பிரஷர், எழுத்தாளர், கப்பல் தொழில் நிபுணர் மற்றும் கடல்சார் இலக்கு 2030 (Maritime Vision 2030) உருவாக்குவதில் பங்களித்த தேசிய கப்பல் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் .


Original article:

Share: