ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பிரிட்டன் ஒரு வரி புகலிடமாக மாறியது, அப்போது ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் எகிப்திய நிலத்தில் ஒரு இங்கிலாந்து நிறுவனம் வர்த்தகம் செய்து சட்டத்தில் ஒரு ஓட்டையை உருவாக்கியது பற்றிய வழக்கை முடிவு செய்தது. 1929-ஆம் ஆண்டின் முடிவு, வெளிநாட்டவர்கள் இங்கிலாந்தில் நிறுவனங்களை அமைக்க அனுமதித்தது. மேலும் அவை பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ் இங்கிலாந்து குடியிருப்பாளர்களாகக் கருதப்படாது. ஏனெனில் அவை வெளிநாட்டிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றன. முக்கியமாக, அவை வெளிநாட்டில் இணைக்கப்பட்டிருந்ததால் வரிவிதிப்பிலிருந்து பாதுகாக்கப்படலாம். அந்த தீர்ப்பு, குறைந்தபட்ச பெருநிறுவன வரி (corporate tax) மற்றும் அதிகபட்ச இரகசியத்தை வழங்க நாடுகள் போட்டியிடும் வரி புகலிடங்களின் ஒரு "கடல் கடந்த உலகத்தை" (offshore world) உருவாக்குவதை நோக்கி நகர்ந்தது.
இந்த அமைப்பு விரைவில் முடிவுக்கு வரலாம். அடுத்த மூன்று வாரங்களில், 193 ஐ.நா. உறுப்பு நாடுகள் நியூயார்க்கில் சந்தித்து உலகளாவிய வரி விதிகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாநாட்டிற்கான வரைவு விதிமுறைகளை விவாதிக்கும். ஆப்பிரிக்கக் குழுவின் தலைமையிலான பல நாடுகள், அவை நிகழும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு வரி விதிக்கும் உரிமையை விரும்புகின்றன. இது இயற்றப்பட்டால், பன்னாட்டு நிறுவனங்கள் இலாபங்களை மறைத்து வைக்கும் வரி புகலிடங்களாக செயல்படுவது மட்டும் அல்லாமல், ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி உண்மையான வேலைகளைச் செய்யும் இடங்களில் வரி செலுத்த வேண்டும் என்று ஒப்பந்த நாடுகளை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் மரபைக் காண முடியும்.
கடந்த ஆண்டு, ஐரோப்பிய ஒன்றிய வரி ஆய்வகம் (EU Tax Observatory), 2022 ஆம் ஆண்டில், நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு வெளியே சம்பாதித்த லாபத்தில் 35%, 1 டிரில்லியன் டாலரை வரி புகலிடங்களுக்கு மாற்றியுள்ளன, அரசாங்கங்கள் ஆண்டுதோறும் 240 பில்லியன் டாலர் முதல் 600 பில்லியன் டாலரை இதனால் இழக்கின்றன. 2023 ஆம் ஆண்டில், ஏழு பெரிய அமெரிக்க மருந்து நிறுவனங்கள் $40 பில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய லாபத்திற்கு அமெரிக்காவில் வரி செலுத்தவில்லை. பணக்கார நாடுகள் இத்தகைய வரி விதிப்புக்கு உடந்தையாக உள்ளன. பெருநிறுவன இலாபங்கள் பெருகிய போதிலும், உலகெங்கிலும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பயனுள்ள வரி விகிதங்கள் 1975ல் இருந்து மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க பணத்திற்காக ஏங்கும் ஏழை நாடுகள்தான் மிகப்பெரிய இழப்பாளர்களாக உள்ளன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் வரி இழப்புகள் (47 பில்லியன் டாலர்) அவற்றின் பொது சுகாதார வரவு செலவுத் திட்டங்களில் (public health budgets) பாதிக்கு சமம்.
ஐக்கிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் நடவடிக்கைகளை முறியடிக்க முயன்ற போது ஐ.நா, வரி பேச்சுவார்த்தைகள் முறையற்ற முறையில் தொடங்கின. இந்த நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் வரி விதிகளை நடத்தும்போது பணக்காரர்களுக்கு ஆதரவான, பெருநிறுவன-நட்பு (corporate-friendly) வழியை விரும்பின. அதன் 2019 முன்மொழிவுகள் 80% "மறுபகிர்வு செய்யப்பட்ட இலாபங்களை" (redistributed profits) பணக்கார நாடுகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இழக்கும் நிலையில் இருந்தன. அந்த அணுகுமுறை வெளிப்படையான ஏற்றத்தாழ்வுகள் மீதான கோபத்தை அதிகரிக்க வழிவகுத்தது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்
(Joseph Stiglitz) சுட்டிக்காட்டியதைப் போல: "வரி தவிர்ப்பு உலகெங்கிலுமான அரசாங்கங்களை அவற்றின் குடிமக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்குவதில் இருந்து தடுத்துள்ளது, இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு பங்களிப்பு செய்வது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 3,000க்கும் குறைவானவர்களே கிட்டத்தட்ட 15 டிரில்லியன் டாலர் வைத்திருக்கிறார்கள். இது ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய ஒன்றியம் ஒருங்கிணைந்த வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (annual GDP) சமம்."
பணக்கார நாடுகள் இப்போது ஐ.நா. செயல்முறையில் ஈடுபடுகின்றன. இந்த குழப்பத்திற்கு இங்கிலாந்துக்கு ஒரு வரலாற்று பொறுப்பு உள்ளது. அதன் வெளிநாட்டு பிரதேசங்கள் மற்றும் பல நாடுகளின் அமைப்புகளின் வலையமைப்புடன், உலகளாவிய பெருநிறுவனவரி (corporate tax) இழப்பில் கிட்டத்தட்ட கால் பகுதிக்கு இது பொறுப்பாகும். வரி நீதி வலையமைப்பின் (Tax Justice Network) தலைமை நிர்வாகி அலெக்ஸ் கோபாம் (Alex Cobham), வரி ஏய்ப்புக்கு எதிரான அவர்களின் வலுவான நிலைப்பாட்டிற்காக தொழிலாளர் அமைச்சர்களைப் பாராட்டினார். அவர்கள் இப்போது "முந்தைய அரசாங்கத்தின் கொள்கையைத் தொடர்வார்களா மற்றும் ஐ.நா.வின் முயற்சிகளைத் தொடர்ந்து விரக்தியடையச் செய்வார்களா?" என்று அவர் கேட்கிறார். அவர்கள் உலக அரங்கில் இங்கிலாந்துக்கு ஒரு புதிய போக்கைக் உருவாக்குவார்களாக மற்றும் வரி துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவளிப்பவர்களா? சலுகை பெற்ற ஒரு சிலரின் இலாபங்களை விட கொள்கைகள் முன்னுரிமை பெறுகின்றன என்பதை அரசாங்கம் காட்ட வேண்டும் என்கிறார்.