இரயில்வே அதிக சரக்குகளை ஈர்க்க வேண்டும் அதே நேரத்தில் பயணிகள் பயணத்திற்கான சிறந்த தேர்வாகவும் மாற வேண்டும்.
சமீபத்திய ஆண்டுகளில் ரயில்வேயின் நிதிநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரயில்வேக்கு மத்திய அரசு தனது மொத்த பட்ஜெட் ஆதரவை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ரயில்வே இப்போது வெளிக் கடன்களை குறைவாக சார்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மூலதனச் செலவில் 77 சதவீதம் அதிகரித்துள்ளது, 2024 நிதியாண்டில் ₹2.6 லட்சம் கோடியாக உச்சத்தை அடைந்தது, இந்த முதலீட்டின் கவனம் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை நவீனமயமாக்குவதற்கு உதவுகிறது. சரக்கு போக்குவரத்தில் ரயில்வேயின் பங்களிப்பை உயர்த்துவதற்கான இந்த முயற்சி (2007-08 ல் 52 சதவீதமாக இருந்தது, இப்போது வெறும் 30 சதவீதம்) சரக்கு போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கை அதிகரிக்க சில காலம் எடுக்கும்.
பட்ஜெட் நிதியாண்டுக்கான ஆதரவை ₹2.55 லட்சம் கோடியாக அதிகரிக்கிறது. இது 2024 நிதியாண்டில் ₹2.43 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ₹17,000 கோடியாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டிற்கான வெளிநாட்டுக் கடன்கள் ₹10,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலீடு மற்றும் திட்டச் செயல்பாட்டின் மீதான வருமானத்திற்கான அளவுகோல்கள் இருக்க வேண்டுமா என்பது முக்கிய கவலை. தற்போது, சரக்கு வருவாயில் எந்த முன்னேற்றமும் இல்லை.
பொருட்களின் வருவாய் வளர்ச்சிக்கான கணிப்பு (growth projection in goods earnings) 6 சதவீதம். அதாவது, கடந்த நிதியாண்டில் ₹1.64 லட்சம் கோடியாக இருந்த வருவாய், நடப்பு நிதியாண்டில் ₹1.74 லட்சம் கோடியாக உயரும். இந்த கணிப்பு மிதமானதாக தோன்றுகிறது. 2024 நிதியாண்டிற்க்கான திருத்தப்பட்ட மதிப்பீடு, இந்த ஆண்டுக்கான இலக்கான ₹1.75 லட்சம் கோடி பட்ஜெட் திட்டத்திற்குக் கணிசமாகக் குறைவாக இருந்ததால் இது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
பயணிகளின் வருவாயில் 9.5% அதிகரிப்பு, ₹80,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு சேவைகள் பயணிகளின் பயணத்தை ஆதரிப்பதில் சற்று குறைவான அழுத்தம் இருப்பதாகக் கூறுகிறது. இருப்பினும், இரயில்வே இன்னும் அதிகமான சரக்குகளை ஈர்க்க வேண்டும், அதே நேரத்தில் பயணத்திற்கான உயர்நிலை விருப்பமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
PRS இன் பகுப்பாய்வின்படி, கார் போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கு 2014 நிதியாண்டில் 1.5% ஆக இருந்து இன்று 16% ஆக அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், கடந்த பத்தாண்டுகளில் சரக்கு அளவுகளில் நிலக்கரியின் பங்கு 43% ஆக மாறாமல் உள்ளது. இரும்புத் தாது மற்றும் சிமெண்ட் ஆகியவை முறையே 15% மற்றும் சரக்கு அளவுகளில் 9% ஆகும். கன்டெய்னரைஸ் செய்யப்பட்ட அளவுகள் 7-8% என்ற அளவில் நிலையானதாக உள்ளது.
கதி சக்தி (Gati Shakti) டெர்மினல்கள் மற்றும் பிரத்யேக சரக்கு வழித்தடங்களின் வளர்ச்சி அதிக மதிப்புள்ள போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மல்டி-மாடல் (multi-modal) இணைப்பை வேறு வழிகளில் மேம்படுத்த முடியுமா என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.
திட்டச் செயலாக்கம் தொடர்பான தலைமை கணக்காய்வரின் தணிக்கைகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதைத் தவிர, பாதுகாப்பு ஒரு கவலையாக உள்ளது. புதிய லைன்கள் மற்றும் ரோலிங் ஸ்டாக் (பயணிகள் பெட்டிகள்) ஆகியவற்றில் முதலீடு அதிகரித்துள்ளது. ஆனால், சிக்னலிங், தகவல் தொடர்பு பணிகள் மற்றும் டிராக் புதுப்பித்தல் ஆகியவற்றில் குறைந்த முதலீடுகளே உள்ளது.
எளிமையாகச் சொன்னால், ரயில்வேயால் அதன் மூலதனத் தேவைகளுக்கு நிதியளிக்க முடியாது. அதன் வருவாய் சுமார் 2.75 லட்சம் கோடி ரூபாய் செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்டுகிறது, இதில் சுமார் 2,800 கோடி ரூபாய் மீதமுள்ளது. ரயில்வேக்கு நல்ல வருவாய் கிடைக்காவிட்டால், பட்ஜெட்டில் மூலதன செலவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். இயக்க செலவுகளில் மூன்றில் இரண்டு பங்குகள் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கு அளிக்கப்படுகிறது இந்த சுமையைக் குறைப்பதற்கு எளிதான தீர்வுகள் எதுவும் இல்லை. உண்மையில், ரயில்வேக்கு முக்கியமான பாதுகாப்பு பணியாளர்கள் தேவை. இறுதியாக, ரயில்வேயில் முதலீடு செய்வது பொருளாதார வருவாயைத் தருகிறது, ஆனால் உட்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை நிர்வகிப்பதில் செயல்திறன் முக்கியமானது.