5 ஆண்டுகளில் உணவு விலைகள் 71% அதிகரித்துள்ளன. ஆனால், சம்பளத்தின் உயர்வு வெறும் 37% மட்டுமே - ஸ்ருதி பாலாஜி, & விக்னேஷ் ராதாகிருஷ்ணன்

 மாதச் சம்பளம் வாங்கும் குடும்பங்கள் உண்மையில் தேவையில்லாத பொருள்கள் அல்லது ஆடம்பரப் பொருட்களுக்கு குறைவாகச் செலவழிக்கக்கூடும் என்று இந்த வேறுபாடு தெரிவிக்கிறது. 


மகாராஷ்டிராவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வீட்டில் சமைத்த சைவ உணவான தாலியின் (thali) விலை 71% அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, அதே நேரத்தில், மாநிலத்தில் வழக்கமான வேலை மூலம் ஒரு நபர் சம்பாதிக்கும் சராசரி மாத சம்பளம் 37% மட்டுமே அதிகரித்துள்ளது. சாதாரண தொழிலாளர்களின் ஊதியம், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, 67% அதிகரித்து வரும் அதே வேளையில், தொழிலாளர்கள் ஏற்கனவே தங்கள் மாத ஊதியத்தில் அதிகப் பங்கை உணவுக்காகச் செலவழித்து வருவதைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

 

இந்த பகுப்பாய்விற்கு, ஒரு சராசரி இந்தியக் குடும்பம் காலை, மதியம் மற்றும் இரவு உணவு என ஒரு நாளைக்கு இரண்டு ’தாலிகளுக்கு’ சமமான உணவை உட்கொண்டால், அவர்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று கருதப்படுகிறது. கடந்த கால தரவு இல்லாததால் அசைவ உணவுகள் கருதப்படவில்லை. பொருட்களின் விலைகளைப் பெற, நிலையான தரவு கிடைப்பதால் மகாராஷ்டிரா ஒரு முன்மாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் மற்றும் சம்பளம் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.  


மகாராஷ்டிராவில் இரண்டு தாலிகளின் சராசரி விலையை தீர்மானிக்க, தேவையான பொருட்கள் அடையாளம் காணப்பட்டன. வெள்ளை அரிசி, துவரம் பருப்பு, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி, ஆட்டா (கோதுமை மாவு), முட்டைக்கோஸ், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவை இதில் அடங்கும். இரண்டு நபர்களுக்குத் தேவையான அளவு அளவிடப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, முந்தைய ஆண்டான 2023 மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2019 இந்த பொருட்களுக்கான சராசரி சில்லறை விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சகம் மற்றும் தேசிய தோட்டக்கலை வாரியத்திலிருந்து (Consumer Affairs Ministry and the National Horticulture Board) சேகரிக்கப்பட்டன. சில காய்கறிகளுக்கான தரவு இல்லாத இடங்களில், மும்பையில் இருந்து விலைகள் மாற்றாக பயன்படுத்தப்பட்டன.


உதாரணமாக, இரண்டு தாலி உணவுகள் தயாரிக்க அவசியமான 125 கிராம் துவரம் பருப்பின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.9.3 லிருந்து ரூ.20.1 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், 300 கிராம் உருளைக்கிழங்கின் விலை ரூ.6.8ல் இருந்து ரூ.8.6 ஆக உயர்ந்துள்ளது.


மகாராஷ்டிராவில் இரண்டு தாலி உணவுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களின் மொத்த விலை இந்த ஆண்டு ரூ.79.2 ஆகும். இது, கடந்த ஆண்டாண 2023ல் ரூ.64.2 மற்றும் 2019ல் ரூ.46.2 ஆக அட்டவணை 2 காட்டுகிறது. எனவே, மகாராஷ்டிராவில் ஒரு மாதத்திற்கு ஒரு வீட்டில் இரண்டு தாலிகள் தயாரிப்பதற்கான செலவு 2019 இல் ₹1,386 லிருந்து 2024 இல் ₹2,377 ஆக உயர்ந்துள்ளது.


மகாராஷ்டிராவில் ஒரு தனிநபரின் தினசரி சராசரி ஊதியம் 2019 இல் ₹218 லிருந்து 2024 இல் ₹365 ஆக உயர்ந்தது. இந்த அதிகரிப்பு மாதாந்திர வருவாயை மதிப்பிடுவதற்காக 30 நாட்களில் கணக்கிடப்பட்டது. அதே காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் சராசரி மாத சம்பளம் ₹17,189 லிருந்து ₹23,549 ஆக அதிகரித்துள்ளதாக அட்டவணை 3 காட்டுகிறது.


ஒரு மாதத்தின் ஒவ்வொரு நாளும் இரண்டு தாலி உணவுகள் தயாரிப்பதற்கான செலவு, ஊதியம்/சம்பளத்தின் பங்காகக் கருதப்படும்போது, 2019 இல் ஒரு சாதாரண தொழிலாளியின் மாத வருவாயில் 21.1% இலிருந்து 2024 இல் 21.7% ஆக சிறிதளவு அதிகரித்துள்ளது. இந்தக் கணக்கீட்டில் அனைத்து நாட்களுக்கும், ஓய்வு நாட்களுக்கான கட்டணமும் அடங்கும். வழக்கமாக பெறும் சம்பள தொழிலாளர்களுக்கு, இந்த உணவுக்காக செலவழித்த சம்பளத்தின் விகிதம் ஐந்து ஆண்டுகளில் 8.1% முதல் 10.1% வரை கணிசமாக உயர்ந்துள்ளது என அட்டவணை 4 குறிப்பிடுகிறது. 

ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது தாலி உணவு தயாரிப்பதற்கு 71% அதிகமாக செலவாகும் என்று அட்டவணை 2 மற்றும் 3 காட்டுகிறது. ஆனால், தனிநபரின் மாத சம்பளம் 37% மட்டுமே உயர்ந்துள்ளது. அட்டவணை 3 மற்றும் 4, சாதாரண தொழிலாளர்களின் ஊதியமானது விலையுடன் அதிகரித்ததைக் காட்டுகின்றன. அவர்கள் ஏற்கனவே தங்கள் வருவாயில் 20% க்கும் அதிகமாக உணவுக்காக செலவளிக்கின்றனர். இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.  


வருமானம் மற்றும் உணவு செலவுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் இந்த இடைவெளி, வழக்கமான சம்பளம் பெறும் தனிநபர்களைக் கொண்ட குடும்பங்கள் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் ஆடம்பரங்களுக்கான செலவுகளைக் குறைக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. தினசரி ஊதியம் பெறும் குடும்பங்களைப் பொறுத்தவரை, அவர்களின் வருமானத்தின் கணிசமான பகுதி அத்தியாவசிய உணவு செலவுகளுக்கு தொடர்ந்து செல்வதால், அத்தகைய விருப்புரிமை செலவினங்கள் எட்டாக்கனியாகவே உள்ளன, இது ஓரளவு அதிகரித்துள்ளது.




Original article:

Share: