இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்கள் விலங்கு நலம் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் அமைப்பு ஆரோக்கியம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்ட வேண்டும்.
வனிகரீதியிலான கால்நடை உற்பத்தியில் பாதுகாப்பற்ற நிலைமைகள் குறித்து நிபுணர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எச்சரித்து வருகின்றனர். H5N1 வைரஸின் இன் தற்போதைய வெடிப்பு இது நடக்கக் காத்திருக்கும் ஒரு பேரழிவு என்பதைக் காட்டுகிறது. இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் சட்ட சூழலில் பண்ணை விலங்குகளின் நலனைப் பற்றி பேசுவது முன்னெப்போதையும் விட இப்போது முக்கியமானது. இந்தியாவின் சட்டங்களில் விலங்குகள் நலம் பற்றி நாம் அவசரமாக விவாதிக்க வேண்டும். விலங்குகளின் நலன், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பாதிக்கிறது என்பதை தற்போதைய நெருக்கடி காட்டுகிறது.
உயிர்ப்பாதுகாப்பு பிரச்சினையின் அளவு
மனிதர்களில் H5N1 நோய்த்தொற்றின் முதல் பதிவு 1997ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் நடந்தது. இது கோழிகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாகப் பரவியது. இந்தியாவின் மகாராஷ்டிராவில், முதல் H5N1நோயாளி 2006 இல் அறிவிக்கப்பட்டார். டிசம்பர் 2020 மற்றும் 2021 தொடக்கத்திற்கு இடையில், 15 மாநிலங்களில் நோய்பரவல் ஏற்பட்டது. இந்த வைரஸ் பல்வேறு விலங்குகளை பாதித்துள்ளது. ஆர்க்டிக்கில் துருவ கரடிகள் மற்றும் அண்டார்டிகாவில் சீல்கள் மத்தியில் இறப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, 52 முதல் கண்டறியப்பட்ட 888 நோய்பதிவுகளில் 463 இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இறப்புகளின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு (WHO) H5N1 இன் இறப்பு விகிதத்தை 52% என மதிப்பிடப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் A (H5N1) உடன் மனித நோய்த்தொற்றின் கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளும் பாதிக்கப்பட்ட பறவைகள் மூலமும் அல்லது அசுத்தமான சூழல்களுடன் நெருங்கிய தொடர்பினால் ஏற்பட்டுள்ளது.
'பேட்டரி கூண்டுகள்' (battery cages) என்று அழைக்கப்படும் குறுகலான கம்பி கூண்டுகளில் கோழிகளை அதிக எண்ணிக்கையில் வளர்பதினால் அசுத்தமான சூழல்கள் ஏற்படுகின்றன. இது காற்றின் தரம் மற்றும் கழிவு மேலான்மையில் பாதிப்புகளை ஏர்படுத்துகிறது. இந்தியாவில் துர்நாற்றம், மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வு காரணமாக. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) 5,000க்கும் மேற்பட்ட கோழிகளைக் கொண்ட கோழி பண்னைகளை மாசுபடுத்தும் தொழில்களாகக் கருதுகிறது. கோழிப்பண்னை அமைப்பதற்க்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் தேவை. சில கோழிப்பண்னைகள் சரியாக சட்டத்தை பின்பற்றாத காரனத்தினால் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பண்னைகளுக்கு சீல் வைத்தன.
ஒப்பந்த விவசாயம், அதிகக் கடன்கள் மற்றும் சிறப்பு திறன்கள் காரணமாக கோழிப்பண்ணையாளர்கள் தொழில்துறையை விட்டு வெளியேறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சந்தை மாற்றங்கள் மற்றும் தொழில்துறை நடைமுறைகள் போன்ற சிக்கல்கள் பெரும்பாலும் அவர்களைப் பாதிக்கின்றன. உதாரணமாக, பறவைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்தாகவும் வளர்ச்சி ஊக்கியாகவும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன, இதனால் அதிக லாபத்திற்காக அதிக விலங்குகளை வளர்க்க முடியும். புரதத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் கால்நடைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பினால் முக்கியமானவை மற்றும் மிகவும் முக்கியமானவை என வகைப்படுத்தப்பட்ட பல நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நோய்தடுப்பு பயன்பாட்டிற்காக விவசாயிகளுக்கு பரவலாக விற்கப்படுகின்றன. ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளுக்கு நோய் மற்றும் இறப்பைக் குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது, இந்த நடைமுறை இன்னும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது என்று தி இந்து நாளிதழில் புலனாய்வு இதழியல் பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வனிகமுறை பண்னைகளில் விலங்குகள் நெரிசலான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் வளர்கப்படுகின்றன. இந்த நிலைமை விலங்குகளின் நலன் மற்றும் நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பும் குறிப்பிடத்தக்கது, வளிமண்டலத்தில் வெளியிடப்படும் தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகள், நீர் நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் மண்ணை மாசுபடுத்தும் திடக்கழிவுகள் ஆகியவையும் அடங்கும். இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, தற்போதுள்ள சட்ட ஒழுங்குமுறை கட்டமைப்புகளை சிறப்பாகக் கண்காணித்து அமலாக்குவதற்கான முக்கியமான தேவை உள்ளது.
கூடுதலாக, இந்த வசதிகளில் கோழி கழிவுகளை பெரும்பாலும் உள்ளூர் விவசாயிகளால் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், உரத்தின் அளவு அதிகமாகி, நிலத்தை மாசுபடுத்தியாக மாற்றுகிறது. இந்த அதிகப்படியான உரம் பயிர்களை சேதப்படுத்துகிறது மற்றும் ஈ போன்ற நோய் பரப்பும் பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்க்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, இந்த வசதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது சுவாசப் பிரச்சனைகள் மற்றும் துர்நாற்றங்களை ஏற்படுத்துகிறது.
விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டத்தின் 1960 (Prevention of Cruelty to Animals (PCA) Act, 1960) கீழ் விலங்குகளை நெரிசாலான இடங்களில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. இந்த பண்னைகளில் விலங்குகளின் செயல்பாடுகளும் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. உடல் உறுப்பு சிதைவு, பட்டினி, தாகம், கூட்ட நெரிசல் ஆகியவற்றால் அவைகள் அவதிப்படுகின்றது. இவை விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டம் 1960 ஐ மீறுவதாகும்.
நியாயமான சட்டங்களை உருவாக்குதல்
2017 இல் 269வது இந்திய சட்ட ஆணைய அறிக்கை (Law Commission of India Report) டாடா நினைவு மையத்திலிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றது. கோழிகளுக்கு சிகிச்சை அல்லாத நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கொடுப்பதால் அவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் என்று அது கூறியது. அவைகளின் வாழ்க்கை நிலைமைகள் அசுத்தமாக இருப்பதால் இது ஏற்படுகிறது. விலங்குகள் வாழும் இடங்கள் சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தால், அதிக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்படாது என்று அறிக்கை பரிந்துரைத்தது. இது அவைகளின் முட்டை மற்றும் இறைச்சியை உண்ணுவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும். இறைச்சி மற்றும் முட்டைத் தொழில்களில் கோழிகளின் நலனுக்காக இரண்டு வரைவு விதிகளை உருவாக்கவும் அறிக்கை பரிந்துரைத்தது. இந்த விதிகள் விலங்குகளின் நலனை மேம்படுத்தவும், உணவைப் பாதுகாப்பானதாக்கவும் உதவும்.
ஆனால், 2019 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (Ministry of Agriculture and Farmers’ Welfare) வெளியிட்ட முட்டைத் தொழிலுக்கான வரைவு விதிகள் போதுமான இல்லை. அவர்கள் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழல் விதிகளை கண்டிப்பாக கண்காணித்து செயல்படுத்துவது முக்கியம். ஏனெனில் கோழிப்பண்ணை தொழில் அதிக மாசு விளைவிப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, இந்த சிக்கலைத் தீர்ப்பது முக்கியம்.