போட்டி, மோதல்

 அமெரிக்காவும் சீனாவும் தங்கள் கருத்து வேறுபாடுகளை கவனமாக கையாள வேண்டும்.


அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன உயர் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார். இரு நாடுகளும் தங்கள் உறவை மேம்படுத்த விரும்புகின்றன. சீனாவுடனான போட்டியை அமைதியான முறையில் வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது என்று பிளிங்கன் வலியுறுத்தினார்.  


சண்டையிடுவதற்குப் பதிலாக அவர்கள் என்ன ஒப்புக்கொள்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜி ஜின்பிங் கூறினார். இருப்பினும், ரஷ்யாவின் இராணுவத் தொழிலுக்கு சீனாவின் ஆதரவு, சீனா அதைச் சரி செய்யாவிட்டால் மீண்டும் இருநாடுகளுக்கு இடையில் விரிசல் ஏற்படும் என்று  பிளிங்கன் தனது கருத்தை முன்வைத்தார்.  


 உக்ரைனுக்கு  $61 பில்லியன் இராணுவ உதவிகளை அனுப்பியதற்காக அமெரிக்காவை சீனா விமர்சித்தது மற்றும் ரஷ்யாவுடனான சீனாவின் வர்த்தகம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. தைவான் மற்றும் தென் சீனக் கடல் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளுடன் சீனா உடன்படவில்லை, சீனாவின் வளர்ச்சியை நேர்மறையாக அணுகுமாறு அமெரிக்காவிடம்  சீனா கேட்டுக் கொண்டது.  


அமெரிக்காவும் சீனாவும் ஒருவரையொருவர் கடுமையாக சந்தேகிக்கின்றனர். அமெரிக்க ஆவணங்களில், சீனா ஒரு "திருத்தல்வாத சக்தி" (“revisionist power”), தொழில்நுட்பம் மற்றும் இராணுவ வலிமையில் சீனாவை அமெரிக்கா பெரிய சக்தியாக பார்க்கிறது. குறைக்கடத்தி (semiconductors)  போன்ற முக்கியமான பகுதிகளில் சீனாவின் வளர்ச்சியைக் குறைக்க, ஏற்றுமதியில் அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 


சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கான வரியையும் உயர்த்தியுள்ளது. தைவானுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்து வருகிறது. பிலிப்பைன்ஸுடன் நெருக்கமான உறவை அமெரிக்கா கொண்டுள்ளது. தென் சீனக் கடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அமெரிக்கா தான் காரணம் என்று சீனா தனது குற்றசாட்டுகளை முன்வைத்தது. தைவானுக்கு  அமெரிக்கா ஆதரவளிப்பதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், அவர்கள் இணைந்து பணியாற்றக்கூடிய பகுதிகள் இன்னும் உள்ளன. 


 நவம்பர் 2023 இல், ஜனாதிபதிகள் ஜி ஜின்பிங் மற்றும் பைடன் சந்தித்து இராணுவ பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும், செயற்கை நுண்ணறிவு (artifical intelligence (AI)) மூலம் ஏற்படும் அபாயங்கள் மற்றும் ஃபெண்டானில் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர். பருவநிலை மாற்றம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 


பெரிய நாடுகள் சண்டையிட்டால், அது உலகளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை பலபோர்கள் கற்றுக்கொடுத்துள்ளது. எனவே, அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்குள் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்களால் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியாவிட்டாலும், அவர்கள் ஒன்றாக வேலை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.




Original article:

Share: