ஏப்ரல் மாதத்தில் தீவிர வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) கணித்துள்ளது. இந்த நிலைமைகள் நாட்டின் பல பகுதிகளை பாதிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை காணப்படுகிறது. முதல் 26 நாட்களுக்கு, இந்தியாவில் சிறிய அல்லது பெரிய பகுதிகள் கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டதது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தீபகற்பம் (southern peninsular) மற்றும் தென்கிழக்கு கரையோர (southeastern coast areas) பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த பருவத்தில் வடக்கு சமவெளிகளில் இன்னும் வெப்ப அலைகள் இல்லை.
ஏப்ரல் ஏன் மிகவும் வெப்பமாக இருந்தது?.இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் வெப்ப அலையை அறிவிப்பதற்கான அளவுகோல்கள் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலைகளின் அளவு பற்றிய விளக்கம் இங்கே உள்ளது.
ஆனால் முதலில், இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும்?
மைய வெப்ப அலை மண்டலம் (Core Heatwave Zone (CHZ)) மத்திய, வடக்கு மற்றும் தீபகற்ப இந்தியாவை உள்ளடக்கியது. இது குஜராத்தில் இருந்து மேற்கு வங்கம் வரை நீண்டுள்ளது. இப்பகுதி பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் வரையிலும், சில சமயங்களில் ஜூலையிலும் வெப்ப அலைகளை அனுபவிக்கிறது.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிராவின் விதர்பா, கங்கை நதியான மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகியவை ஆபத்தில் உள்ள மாநிலங்கள் மற்றும் பகுதிகள்.
இந்திய வானிலை ஆய்வு மையம் எப்போது வெப்ப அலையை அறிவிக்கிறது?
சமவெளிகளில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களிலாவது சாதாரண அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் அல்லது இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தால் இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலையை அறிவிக்கிறது. மலைப்பாங்கான மற்றும் கடலோர பகுதிகளில், வெப்பநிலை முறையே 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 37 டிகிரி செல்சியஸ் தாண்ட வேண்டும்.
வெப்பநிலை இயல்பை விட 6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தால் கடுமையான வெப்ப அலை (severe heatwave) என அறிவிக்கப்படும்.
ஏப்ரல் ஏன் இவ்வளவு வெப்பமாக இருந்தது?
ஏப்ரல் மாதத்திற்கான தீவிர வெப்பம் மற்றும் நீடித்த வெப்ப அலை நிலைகள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலில், 2024 நினோ நிலையுடன் (El Niño) தொடங்கியது. எல் நினோ என்பது பூமத்திய ரேகை பசிபிக் பகுதியில் (equatorial Pacific Ocean) வழக்கத்திற்கு மாறாக சூடான கடல் நீரை உள்ளடக்கிய காலநிலை வடிவமாகும். இது உலகளாவிய வானிலையை பாதிக்கிறது மற்றும் அடிக்கடி கடுமையான வெப்பம், கடுமையான வெப்ப அலைகள் மற்றும் பருவமழைக்கு முந்தைய மழை குறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஜூன் 2023 இல் எல் நினோ தொடங்கியது.
இரண்டாவதாக, தெற்கு தீபகற்பம் மற்றும் தென்கிழக்கு கடற்கரைகளில் நிலைத்திருக்கும் எதிர்ச்சூறாவளி (high-pressure systems) அமைப்புகள் வெப்பதை ஏற்படுத்திகின்றன. இந்த உயர் அழுத்த அமைப்புகள் சுமார் 3 கிமீ உயரம் மற்றும் 1,000 முதல் 2,000 கிமீ நீளம் வரை இருக்கும். அவை காற்றை பூமியை நோக்கித் தள்ளுகின்றன, இது காற்று வீழ்ச்சி (air subsidence) என்று அழைக்கப்படுகிறது. இந்த தள்ளப்பட்ட காற்று மேற்பரப்புக்கு அருகில் வரும்போது வெப்பமடைகிறது, வெப்பநிலையை அதிகரிக்கிறது.
எதிர்சூறாவழி அமைப்புகள் (anticyclone systems) காற்றை நிலத்திலிருந்து கடலுக்கு இழுத்து செல்லும். இது குளிர்ந்த கடல் காற்றுகளைத் தடுக்கிறது. இது பொதுவாக நிலத்தை குளிர்விக்கிறது.
எல் நினோ மற்றும் எதிர்சூறாவழிகள் இணைந்து ஏப்ரல் மாதத்தில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைகளை ஏற்படுத்தியது. கங்கை நதியான மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவை பாதித்தன.
இந்த ஏப்ரலில் வெப்ப அலைகளின் அளவு என்ன ?
ஏப்ரல் 1, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளைத் தவிர, நாட்டின் சில பகுதிகளை வெப்ப அலைகள் அல்லது கடுமையான வெப்ப அலைகள் பாதித்தன.
தென் தீபகற்ப இந்தியா மற்றும் தென்கிழக்கு கடற்கரைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, சிக்கிம், பீகார், ஜார்கண்ட் மற்றும் கங்கை மேற்கு வங்காளம் ஆகியவை அடங்கும்.
ஒடிசா மற்றும் கங்கை மேற்கு வங்கத்தில் முறையே ஏப்ரல் 15 மற்றும் ஏப்ரல் 17 முதல் தொடர்ந்து வெப்ப அலை அல்லது கடுமையான வெப்ப அலை நிலைகள் உள்ளன.
வெப்ப அலை பட்டியலில் கேரளா மற்றும் சிக்கிம் மாநிலங்களைச் சேர்த்தது, முக்கிய வெப்ப அலை மண்டலத்திற்கு (Core Heatwave Zone (CHZ)) வெளியே உள்ள பகுதிகளில் கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம்.ராஜீவன் (M Rajeevan) கூறுகையில், காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான (Intergovernmental Panel on Climate Change (IPCC)) குழுவின் அறிக்கைகள் மற்றும் வானிலை மாதிரி பகுப்பாய்வுகள் இந்தியாவில் வெப்ப அலைகள் பாரம்பரியமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு பரவும் என்பதைக் காட்டுகின்றன. புதிய பகுதிகள், குறிப்பாக தென் தீபகற்ப இந்தியாவில், ஏற்கனவே வெப்ப அலைகளை எதிர்கொண்டுள்ளன.