உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசியின் 50 ஆண்டுகால தாக்கம் -ஹன்னா ரிச்சி

 தட்டம்மை தடுப்பூசி உயிர்களைக் காப்பாற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதன் மூலம் 94 மில்லியன் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.


ஆண்டுகளில், பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் காரணமாக சுமார் 150 மில்லியன் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, தட்டம்மை தடுப்பூசிகள் மட்டுமே இந்த காப்பாற்றப்பட்ட உயிர்களில் 60% க்கு காரணமாகின்றன.


தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோய்களால் ஏற்படும் இறப்புகளின் குறைப்பு, உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டங்களின் பரவலான விரிவாக்கம் காரணமாகும். எடுத்துக்காட்டாக, உலகளாவிய தட்டம்மை தடுப்பூசி (measles vaccination) விகிதம் 2000-ல் 20%-க்கும் குறைவாக இருந்து 2021-க்குள் 70% -ஆக அதிகரித்தது. டிப்தீரியா, பெர்டுசிஸ் மற்றும் டெட்டனஸ் (diphtheria, pertussis, and tetanus (DTP3)) ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசியிலும் இதேபோன்ற அதிகரிப்பு காணப்பட்டது. குழந்தை இறப்பு விகிதங்களைக் குறைப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, இது 1974-ல் 10% ஆக இருந்து 2024-ல் 3% ஆகக் குறைந்தது. இந்த வீழ்ச்சியில் 40% தடுப்பூசிகளால் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.


விளக்கப்படம் 1 உலகளவில் 1974 முதல் 2024 வரை பல்வேறு தடுப்பூசிகளால் காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. தட்டம்மை தடுப்பூசி (Measles vaccination) மிகவும் பயனுள்ளதாக உள்ளது, இது 94 மில்லியன் மக்களுக்குப் பயனளிக்கிறது. அதைத் தொடர்ந்து டெட்டனஸ் தடுப்பூசி (tetanus) 27.9 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. கக்குவான் இருமல் (tuberculosis) மற்றும் காசநோய்க்கான தடுப்பூசிகள் முறையே 13.17 மில்லியன் மற்றும் 10.87 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றின.


     உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தபடி, தட்டம்மைக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கான பிராந்திய தரவை விளக்கப்படம்-2 காட்டுகிறது. மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் தடுப்பூசி விகிதங்களில்  விளக்கப்படம்-2-ல் காட்டப்பட்டுள்ளபடி, 2000-ல் 2% -இலிருந்து 2021-ல் 91% ஆக தடுப்பூசிக்கான தரவு அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவும் தட்டம்மை தடுப்பூசி கவரேஜில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டது. இது 2010-ல் 15% ஆக இருந்து 2021-ல் கிட்டத்தட்ட 80% ஆக அதிகரித்துள்ளது.


          விளக்கப்படம் 3 டி.டி.பி 3 (DTP3) தடுப்பூசி பெற்ற ஒரு வயது குழந்தைகளின் சதவீதத்தைக் காட்டுகிறது. 2021ஆம் ஆண்டில், 80% க்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் மூன்றாவது DTP3 தடுப்பூசியை பெற்றனர். மேற்கு பசிபிக் பிராந்தியத்தில், விகிதம் 1980-ல் 10% ஆக இருந்து 2021-ல் 90% ஆக உயர்ந்தது.


50 ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு வெளியே கிட்டத்தட்ட யாரும் தடுப்பூசி போடவில்லை. 5%-க்கும் குறைவான குழந்தைகள் டி.டி.பி 3 (DTP3) தடுப்பூசியைப் பெற்றனர். ஆனால் 1974-ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பின் முடிவெடுக்கும் அமைப்பான உலக சுகாதார சபை, நோய்த்தடுப்புக்கான அத்தியாவசிய திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டம் தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோய்களை எதிர்த்துப் போராட உலகளவில் பல்வேறு தடுப்பூசி முயற்சிகளைத் தொடங்கியது, இது தடுப்பூசி விகிதங்களில் பெரிய அதிகரிப்புக்கு வழிவகுத்தது.

2000-ம் ஆண்டில், முன்னேற்றம் குறைந்தது, குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில், உலகின் பல ஏழை குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் இல்லாமல் போனது. இதை சரிசெய்ய பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (Bill and Melinda Gates Foundation), உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் மற்றும் உலக வங்கி போன்ற கூட்டாளர்களுடன், தடுப்பூசி கூட்டணி உருவாக்கப்பட்டது. உலகளாவிய தடுப்பூசி விகிதங்கள் மேம்பட்டாலும், தடுப்பூசி போடாததால் மில்லியன் கணக்கானவர்கள் இன்னும் இறக்கின்றனர்.





தடுப்பூசிகள் தடுக்கக்கூடிய நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதை விளக்கப்படம் 4 காட்டுகிறது. ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் காசநோயால் இறக்கின்றனர். தட்டம்மை, டெட்டனஸ், கக்குவான் இருமல், மூளைக்காய்ச்சல் மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகியவற்றால் ஆயிரகணக்கானோர் இறக்கின்றனர்.


அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கங்கள் அதிக முதலீடு செய்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தடுப்பூசிகள் குறித்த மக்களின் சந்தேகங்களையும் அச்சங்களையும் போக்க வேண்டும்.




Original article:

Share: