கூடுதல் நுரையீரல் காசநோய் (extrapulmonary tuberculosis (EPTB)) குனப்படுத்துவது சவாலானது, ஏனெனில் மருத்துவர்கள் உட்பட பலருக்கு இந்த நோயைப் பற்றிய போதுமான தெளிவு இல்லை, நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க போதுமான வழிகள் இல்லை.
காசநோய் பொதுவாக நுரையீரலைப் பாதிக்கிறது, ஆனால் சுமார் 20% நோய்கள் நிணநீர், மூளை, குடல் அல்லது கண்கள் போன்ற பிற உறுப்புகளைப் பாதிக்கின்றன. இந்த உறுப்புகளில் சில உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து சிறப்புப் பாதுகாப்பைக் கொண்டுள்ளன, எனவே நுரையீரல் தொற்று நீங்கினாலும், மற்ற நோய்த்தொற்றுகள் ஒட்டிக்கொள்ளக்கூடும். கூடுதல் நுரையீரல் காசநோய்களை நாம் துல்லியமாக கணிக்காததால், இது நாம் உணர்ந்ததை விட பெரிய பிரச்சினையாக இருக்கும்.
உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) ஒவ்வொரு ஆண்டும், 10 மில்லியனுக்கும் அதிகமான காசநோய் பாதிப்புகள் பதிவாகிறது என்று கூறுகிறது, மேலும், உலகளாவிய காசநோய் பாதிப்பில் 27% இந்தியாவில் மட்டுமே பதிவாகிறது. ஆனால் கூடுதல் நுரையீரல் காசநோயில் (EPTB) எத்தனை பாதிப்புகள் உள்ளன என்பதை அறிவது கடினம், ஏனெனில் இது வழக்கமான காசநோய் சோதனைகளில் தெரிவதில்லை. இது மற்ற நோய்களைப் போலவே தோற்றமளிக்கலாம், மேலும் இது நுரையீரல் தொற்றுநோயுடன் இணைக்கப்படாமல் இருக்கலாம், எனவே சமூகத்தில் கூடுதல் நுரையீரல் காசநோயின் (EPTB) உண்மையான பரவல் மறைக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் காசநோய் மிகவும் பொதுவானது என்பதால், அதை குணப்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியமானது. காசநோய் முக்கியமாக நுரையீரலை பாதிப்பதால், இந்தவகை காசநோயைக் குறைப்பது அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்த உதவும். ஆனால் காசநோய் மிகவும் பரவலாக இருப்பதால், கூடுதல் நுரையீரல் காசநோய் (EPTB) போன்ற பிற வகைகளும் பலரைப் பாதிக்கின்றன. கூடுதல் நுரையீரல் காசநோய் கண்டறியப்படாமல் இருந்தால், கண்கள் போன்ற உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது, இது பார்வைப் பிரச்சனைகள் அல்லது குருட்டுத்தன்மைக்குக் கூட வழிவகுக்கும். எனவே, காசநோயை முழுமையாகக் கையாள்வது முக்கியம்.
அறிவுசார் இடைவெளி
கூடுதல் நுரையீரல் காசநோய்க்கு (EPTB) சிகிச்சையளிப்பது கடினம், ஏனென்றால் பல மருத்துவர்களுக்கு இதைப் பற்றி போதுமான மருத்துவ அறிவு இல்லை, மேலும், நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க தெளிவான முறைகளும் இல்லை. ராபர்ட் கோச் என்பவரால் கண்ணில் காசநோய் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், கண் நிபுணர்கள் உட்பட பல மருத்துவர்கள் இந்த இணைப்பைப் பற்றி அறிந்திருக்கவில்லை. காசநோயால் பாதிக்கப்பட்ட மற்ற உறுப்புகளுக்கும் பரவுகிறது. சிகிச்சை முறை தெரிந்த மருத்துவர்களுக்குக் கூட துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது கடினம்.
காசநோய் பல உறுப்புகளை பாதிக்கக்கூடும் என்பதால், வெவ்வேறு துறைகளில் உள்ள சிறந்த மருத்துவர்களுக்கு தகவல்களைப் பகிர்ந்து கொள்ள போதுமான வழிகள் இல்லை. 2014ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள பல்வேறு சுகாதார நிறுவனங்களின் வல்லுநர்கள், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் காக்ரேன் தொற்று நோய்க் குழுவுடன் (Cochrane Infectious Disease Group) இணைந்து, கூடுதல் நுரையீரல் காசநோயை (EPTB) நிர்வகிப்பதற்கான INDEX-TB வழிகாட்டுதல்களை உருவாக்கினர். அவர்கள் 10 உறுப்புகளுக்கான மருத்துவப் பயிற்சி புள்ளிகளையும் உருவாக்கினர், ஆனால் ஐந்து மட்டுமே போதுமான ஆதாரங்களைக் கொண்டிருந்தன. இருப்பினும், இந்த வழிகாட்டுதல்கள் குறிப்பாக காசநோய் சாதாரணமாக இருக்கும் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை.
மருத்துவமனைகளுக்குக் கூடுதல் நுரையீரல் காசநோய்க் (EPTB) குறித்த சிறந்த தரவு தேவை. ஆனால் தற்போதைய தரவுகள் பெரும்பாலும் பெரிய பொது மருத்துவமனைகளின் காசநோய் துறைகளிலிருந்து வருகின்றன. கூடுதல் நுரையீரல் காசநோய் முக்கியமாக சிகிச்சையளிக்கப்படும் சிறப்புத் துறைகளிலிருந்து அல்ல. இந்தத் துறைகள் தரவுகளை சேகரிக்க வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளன. எனவே நாடு முழுவதும் கூடுதல் நுரையீரல் காசநோய் (EPTB) பற்றிய தெளிவானத் தகவல் நம்மிடம் இல்லை. மேலும் தரவை தேசிய காசநோய்க் கட்டுப்பாட்டு திட்டத்துடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்க வேண்டும். இது குறிப்பாக கூடுதல் நுரையீரல் காசநோய் (EPTB) நோயாளிகளுக்கு. தேசிய காசநோய் நோயாளி மேலாண்மை இனையதளமான ‘நி-க்ஷாயை (Ni-kshay)’ மேம்படுத்தக்கூடும்.
ஆராய்ச்சி முன்னுரிமை
தொற்று எவ்வாறு பரவுகிறது மற்றும் காசநோய் பாக்டீரியம் நம் உறுப்புகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது போன்ற முக்கிய அம்சங்களை கூடுதல் நுரையீரல் காசநோய் (EPTB) கொண்டுள்ளது. சிகிச்சையின் பின்னரும் கூட, நோயின் தாக்கம் இருப்பதால், இது கவலைக்குரியதாக இருக்கிறது. உதாரணமாக, கண்ணில் தொற்று நீங்கிய பின்னரும் நோயெதிர்ப்பு அமைப்பு சுறுசுறுப்பாக இருக்க முடியும். இதனால் தொடர்ந்து கண்களில் வீக்கம் ஏற்படுகிறது. இது மற்ற உறுப்புகளிலும் நிகழலாம், நோய் குணமான பின்னரும் நோயின் தாக்கம் தொடரும். கூடுதல் நுரையீரல் காசநோய் (EPTB) உள்ளவர்களுக்கு இது கடினம், மேலும் இந்த சிக்கலைப் புரிந்துகொள்வதற்கும் தீர்ப்பதற்கும் ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
பல்வேறு கூடுதல் நுரையீரல் காசநோய் (EPTB) சிறப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு அணுகுமுறை, ஒற்றை செல் RNA வரிசைமுறை போன்ற மேம்பட்ட நோயெதிர்ப்பு சக்திகளுடன் இணைந்து, நோய்க்கு அடிப்படையான நோயெதிர்ப்பு வழிமுறைகளை வெளிப்படுத்த உதவும். தற்போது, இந்த வழிமுறைகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல், மருத்துவர்கள் பெரும்பாலும் நீண்ட கால காசநோய் எதிர்ப்பு சிகிச்சைகளை நாடுகிறார்கள். இது சில சமயங்களில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும். இந்த அணுகுமுறை பாதிக்கப்பட்ட உறுப்புகளில் தொடரும் தொற்றுநோயைக் குறிக்கிறது. ஆனால் இது பெரும்பாலும் நோயைக் குணப்படுத்துவதில் தோல்வியுறுகிறது மற்றும் நீண்ட கால சிகிச்சையின் பக்கவிளைவுகளை நோயாளிகளுக்கு ஏற்படுத்துகிறது.
தற்போது, கூடுதல் நுரையீரல் காசநோயால் (EPTB) பாதிக்கப்பட்ட அனைத்து உறுப்புகளுக்கும் விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சை நெறிமுறைகள் இல்லை. இந்த நெறிமுறைகளை உருவாக்க, மருத்துவ பரிசோதனைகளிலிருந்து உயர்தர தரவு தேவைப்படும். கூடுதலாக, பத்து ஆண்டிற்க்கு முன்னர் நிறுவப்பட்ட INDEX-TB வழிகாட்டுதல்கள், சமீபத்திய தரவு மற்றும் மருத்துவ அனுபவங்களை இணைக்க உடனடி புதுப்பிப்புகள் தேவை. இந்த வழிகாட்டுதல்கள் பலதரப்பட்டதாக இருக்க வேண்டும், பல்வேறு சிறப்பு வாய்ந்த சுகாதாரத் துறைகளின் நுண்ணறிவுகளைப் பெறுகிறது.
கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு காசநோயாளி கூடுதல் நுரையீரல் காசநோய் (EPTB) நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையானவர்கள் கண்டறியப்படாமல் உள்ளனர். நோயறிதலுக்கு உள்ளானவர்கள் கூட சிறப்பு சுகாதார வசதிகளை அணுகாத வரையில் போதுமான கவனிப்பைப் பெறுவதில்லை. நோயறிதல், சிகிச்சை மற்றும் நோயின் ஒட்டுமொத்த மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு கூடுதல் நுரையீரல் காசநோய் சிகிச்சைக்கு (EPTB) முன்னுரிமை அளிப்பது மற்றும் கவனத்திற்கு கொண்டு வருவது மிகவும் முக்கியமானது.
தேஜா பாலந்த்ராபு எல்வி பிரசாத் கண் மருத்துவமனையில் அறிவியல், சுகாதாரத் தரவு மற்றும் Story-telling ஆகியவற்றுக்கான இணை இயக்குநராகப் பணிபுரிகிறார். சௌம்யவா பாசு எல்வி பிரசாத் கண் மருத்துவமனையில் Uveitis Services தலைவராக உள்ளார்.