உணவு விலை ஆதாயத்தில் சிறிய தேக்கம்

 உணவுப் பணவீக்கம் (Food inflation) தொடர்ந்து அதிகரித்து வருவதால், மற்ற விலைகளை சீராக வைத்திருப்பது கடினமாகிறது.


ஏப்ரல் மாத சில்லறை பணவீக்க தரவு (retail inflation data) ஒரு சிறிய முன்னேற்றத்தைக் காட்டியது. நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) சில்லறை விலைகள் முன்பை விட மெதுவாக அதிகரித்ததைக் காட்டுகிறது. இது கடந்த ஆண்டை விட 4.83% அதிகரித்துள்ளது. இந்த விகிதம் மார்ச் மாதத்தின் 4.85%-லிருந்து சிறிது குறைவு. இந்த விகிதம் 11 மாதங்களில் இல்லாத குறைந்த அளவாகும். இருப்பினும், இந்த சிறிய மந்தநிலை உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவில்லை. நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (Consumer Food Price Index (CFPI))) கடந்த மாதத்தைவிட 18 அடிப்படை புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது நான்கு மாதங்களில் அதிகபட்சமாக 8.7%-ஐ எட்டியது. உணவுப் பொருட்களின் மாதாந்திர அதிகரிப்பு மார்ச் மாதத்தில் 0.16%-ல் இருந்து 0.74%-ஆக கணிசமாக அதிகரித்துள்ளது. உணவு மற்றும் பிற பொருட்களின் விலை உயர்வு காரணமாக நகர்ப்புற மக்களைவிட கிராமப்புற மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டனர். 


கிராமப்புற பணவீக்கம் 5.43 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் 4.11 சதவீதமாகவும் இருந்தது. இந்த ஏற்றத்தாழ்வு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளை எடுத்துக்காட்டுகிறது. கடந்த ஆண்டின் மோசமான பருவமழை மற்றும் இந்த ஆண்டின் அதிக வெப்பநிலையால் இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். கிராமப்புற உணவு பணவீக்கம் 8.75% அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் 8.56% அதிகரிப்பை விட 19 அடிப்படை புள்ளிகள் அதிகம். உணவு விலை உயர்வு கிராமப்புற மக்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில், நகரங்களை விட வேகமாக கிராமப்புற பணவீக்கம் அதிகரித்து  வருகிறது. உணவு அனைவருக்கும் தேவையான ஒன்று என்பதால், இது பல குடும்பங்களுக்கு இந்த அதிகரிப்பு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது.

 

உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்களின் விலை இன்னும் அதிகரித்து வருகிறது. தானியங்களுக்கான பணவீக்கம் (cereals inflation) 26 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.63% ஆக உள்ளது. நுகர்வோர் விவகாரங்களின் விலைக் கண்காணிப்புப் பிரிவின் (Consumer Affairs’ Price Monitoring Division) கூற்றுப்படி, மே 14-அன்று அரிசியின் சராசரி விலை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 14.3% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நிலைமயை இன்னும் மோசம் ஆக்குகிறது. இதேபோல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோதுமை விலை 6.4% உயர்ந்துள்ளது. இது தானிய விலைகளுக்கு உடனடி நிவாரணம் இருக்காது என்பதைக் குறிக்கிறது.


ஏப்ரல் மாதத்தின் அதிக வெப்பநிலை காய்கறிகளுக்கான தொடர்ச்சியான உயர் பணவீக்க விகிதங்களுக்கு காரணமாக இருக்கிறது. அவை அழுகக்கூடிய பொருட்களாக, குறிப்பாக அத்தகைய நிலைமைகளுக்கு உணர்திறன் கொண்டவை. காய்கறிகளின் விலை தொடர்ந்து ஆறு மாதங்களாக இரட்டை இலக்கத்தில் உள்ளது. இது 27.8%-ஐ எட்டியுள்ளது. பருப்பு வகைகளின் பணவீக்கமும் இதேநிலையில் உள்ளது. பதினோரு மாதங்களாக இரட்டை இலக்கங்களில் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. 


மே 14-ஆம் தேதி வரை ஐந்து முக்கிய பருப்பு (கொண்டைக் கடலை, துவரை, உளுந்து, பாசிப்பயறு மற்றும் மசூர்) வகைகளின் விலை உயர்ந்து வருவதாக நுகர்வோர் விவகாரத் துறையின் தரவு கூறுகிறது. மேலும், நாட்டின் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. மே 9-ஆம் தேதி நிலவரப்படி 27% மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரியை விட குறைவு. நிலையான விலைகளுக்கான முன்னறிவிப்பு, எதிர்பார்க்கப்படும் ‘சாதாரண பருவமழை’ (‘normal monsoon’) வரவிருக்கும் மாதங்களில் சரியான நேரத்தில் மழையைக் கொண்டுவருமா என்பதைப் பொறுத்து உணவு பொருட்களின் விலை இருக்கும் .




Original article:

Share: