நுழைவுத் தேர்வுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தங்கள் மதிப்பு மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதே நகரில் மேலும், ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். கோட்டா இந்தியாவின் "பயிற்சியின் தலைநகரம்" (“coaching capital”) என்று அழைக்கப்படுகிறது. இரு இளைஞர்களும் நுழைவுத் தேர்வின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். போட்டித் தேர்வு அழுத்தங்கள் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. இந்த அழுத்தங்கள் சமூகம் மற்றும் குடும்ப எதிர்ப்பார்ப்புகள் காரணமாக வருகிறது. சில நேரங்களில் இந்த காரணங்கள் மரண வாக்குமூலத்திலும் இடம்பெற்றுள்ளது.
இளைஞர்கள் ஏன் இப்படி உயிரிழக்கிறார்கள்? இந்த பிரச்சினையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். விரைவில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்படும். நம் இளைஞர்கள் ஏன் தங்கள் வாழ்க்கையை இவ்வளவு கடுமையான முறையில் முடிக்கத் தேர்வு செய்கிறார்கள்? இந்த அவசர பிரச்சினையை நாம் கவனிக்க வேண்டும் மற்றும் நமது இளைஞர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தெளிவான பார்வை இல்லாத இடத்தில் மக்கள் நசிந்து போகிறார்கள்
குடும்ப அழுத்தம் போன்ற சில எதிர்மறை சக்திகள் முன்னுரிமைகள் மற்றும் விழிப்புணர்வு மூலம் மட்டுமே தணிக்க முடியும் என்றாலும், தேர்வு வாரியங்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளால் கட்டுப்படுத்தக்கூடிய வேறுசில கூறுகளும் நிச்சயமாக உள்ளன. அவர்கள் தேர்வுகள் அல்லது மதிப்பெண்களுக்குப் பதிலாக நமது இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
பயிற்சி நிறுவனங்களின் எழுச்சி
மருத்துவம், தொழில்முறை படிப்புகள், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (National Council of Educational Research and Training (NCERT)) மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)) பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய தேர்வு முகமை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இருப்பினும், பயிற்சி நிறுவனங்களின் எழுச்சி பல்வேறு சவால்களை உருவாக்குகிறது. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் கடினமான பயிற்சி முறைகளைப் பயன்படுத்துகின்றன. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்கள் இளம் பருவ வாழ்க்கையை இழக்கின்றனர்.
இந்த "வெற்றியாளர்கள்" (“winners”) பெரும்பாலும் சமூகத் திறன்கள் இல்லாத எந்திரங்களைப் போல மாறுகிறார்கள். புறநிலை வகை கேள்விகளின் எல்லைக்கு வெளியே நன்கு தொடர்பு கொள்ள அவர்கள் போராடுகிறார்கள். இந்தக் கேள்விகள் பயிற்சி மையங்களில் கற்பிக்கப்படும் பாடங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இவற்றில் பல மையங்கள் ஆரோக்கியமற்ற மற்றும் பாதுகாப்பற்ற கட்டிடங்களில் உள்ளன. தீவிர நிகழ்வுகளில், தங்கிப் படிக்கும் பயிற்சி நிறுவனங்கள் (residential coaching institutions) இளம் மாணவர்களை சேர்க்கின்றன. சில சமயங்களில் 10ஆம் வகுப்பு படிக்கும் இளம் மாணவர்களையும் சேர்க்கின்றன. அவர்கள் அவர்களை மாநில வாரியம் அல்லது CBSE பள்ளியின் கீழ் பதிவு செய்கிறார்கள். இந்த நிறுவனங்கள் மாணவர்களின் குழந்தைப் பருவத்தை பறிக்கின்றன.
இவர்களின் தினசரி வழக்கம் காலை 5 மணிக்கு குளிர்ந்த நீர் குளியலுடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து விரைவான காலை உணவு. பிறகு 10 மணி நேரம் தீவிரமாகப் படிப்பார்கள். அவர்களின் நாள் இரவு 10 மணிக்கு முடிகிறது. நுழைவுத் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்துவதே பயிற்சி மையங்களின் முக்கிய குறிக்கோள். இவர்கள் வெறும் குழந்தைகள்! பயிற்சி மையங்கள் அவர்களை நடைப்பிணமாக (zombies) மாற்றினால், பயிற்சி மையங்களின் நோக்கம் என்ன?
பள்ளிக்குப் பிறகு
சமீபத்தில், இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Test (CUET)) என்ற புதிய தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி பல்கலைக்கழகம் இப்போது சேர்க்கைக்கு பள்ளி வாரிய மதிப்பெண்கள் அல்லது முந்தைய கல்லூரி மதிப்பெண்களுக்கு பதிலாக CUET-ஐப் பயன்படுத்துகிறது. படிப்புகளில் சேரும் மாணவர்களின் குறைந்த தரம், அவர்களின் மோசமான சிந்தனைத் திறன், அடிப்படைக் கருத்துக்களில் கவனம் செலுத்தாதது மற்றும் சமூக விதிமுறைகளை புறக்கணிப்பது குறித்து ஆசிரியர்கள் புகார் கூறியுள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அருகிலும் கிராமப்புறங்களிலும் பல பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. படிப்புகளுக்கான சேர்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க போட்டியிடுகின்றன.
சில பெற்றோர்கள், முதல் தலைமுறை கற்பவர்கள்கூட, இந்த விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, இதில் ஒரு இடத்தைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களால் வாங்க முடியாத பணத்தைக் கடனாக வாங்குகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக CUET மதிப்பெண்களை மட்டுமே நம்பியிருப்பது சரியாக வேலை செய்யவில்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility-cum-Entrance Test (NEET)) மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வுகள் (Joint Entrance Examinations (JEE)) இன்னும் கடினமான உள்ளன. இறுதியில், பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். இது இந்தியாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல, உலகின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது.
மாணவர்கள் 12 ஆண்டுகள் பள்ளியில் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளுக்கு சிறந்த ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தேவை. இதற்கு தனியார் பள்ளிகள் உதவலாம். தேசிய கல்விக் கொள்கை (National Education Policy’s) பள்ளிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. பள்ளிக் கல்வி முக்கியமானதாக இருக்க வேண்டும். மாநில, CBSE மற்றும் பிற வாரியங்கள் சமமாக தேர்வு நடத்த வேண்டும். CUET மாணவர்களின் 12 வருட முயற்சியை மறுக்கக்கூடாது. தேவைப்பட்டால் பொதுநுழைவுத் தேர்வைப் பரிசீலிக்கலாம்.
தனிப்பட்ட நேர்காணலில் கவனம் செலுத்துங்கள்
நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் தங்கள் பலத்தைப் பற்றி பேசும் தனிப்பட்ட நேர்காணல்களை நடத்த வேண்டும். CUET அல்லது JEE போன்ற தேர்வுகளால் 12-வருட பள்ளிப் படிப்பின் கல்வி மதிப்பெண்களை புறக்கணிக்கக்கூடாது. 12-ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் நேர்காணல்களில் தனிப்பட்ட திறமைகளுடன் கணக்கிடப்பட வேண்டும். JEE, CUET அல்லது NEET ஆகியவை கூடுதலாக இருக்கலாம். இந்த தேர்வுகள் அளவுகோல் அல்ல. தனிப்பட்ட நேர்காணல்கள் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும். புனித ஸ்டீபன் கல்லூரி இந்த முறையை 70 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக பயன்படுத்துகிறது. கல்லூரிக்கு செல்லாவிட்டாலும், நேர்முகத் தேர்வுக்குப் பிறகும் மாணவர்கள் ஏன் அழுத்தத்தில் இருப்பதாக உணர்கிறார்கள். இதை ஏன் நாடு தழுவிய அளவில் அமல்படுத்தக் கூடாது?
தனிப்பட்ட நேர்காணல்கள் சவாலானவை. ஆனால், மாணவர்களின் திறனை வெளிகொண்டுவருவதற்கு முக்கியமானவை. மாணவர்கள் வெறும் மதிப்பெண்களை விட மேலானவர்கள் என்பதை இந்த நேர்காணல்கள் வெளிப்படுத்தும். நுழைவுத் தேர்வுகளில் தனிப்பட்ட நேர்காணல்களைச் சேர்ப்பது இளம் உயிர்களைக் காப்பாற்றும்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள், குறிப்பாக கோட்டா பகுதியைச் சேர்ந்தவர்கள், நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தொடர்ந்து போராட நேரிடும்.
ஜான் வர்கீஸ், புது தில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் ஆவார்.