மனித உரிமைகளை ஆயுதமாகப் பயன்படுத்திய மேற்குலகின் மீதான விமர்சனம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆனால், இந்திய தேசிய மனித உரிமை ஆணையத்தின் (National Human Rights Commission of India (NHRC)) தகுதிநிலை தொடர்ந்து ஒத்திவைப்பது இந்தியாவில் கடினமான கேள்விகளுக்கு வழிவகுக்கும்.
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission of India (NHRC)) அதன் தகுதிநிலை ஒத்திவைப்பு இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என்று கடந்த வார இறுதியில் முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவை 2023-ல் தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியின் (Global Alliance of National Human Rights Institutions (GANHRI)) அங்கீகாரத்திற்கான துணைக்குழுவால் (sub-committee on accreditation (SCA)) ஒத்திவைக்கப்பட்டது. இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை (National Human Rights Commission of India (NHRC)) 'பி' தகுதிநிலையில் வைக்க சில சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கோரிக்கையை அங்கீகாரத்திற்கான துணைக்குழு (SCA) ஏற்கவில்லை. மேலும், இந்த ஒத்திவைப்பை நீக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
இந்திய தேசிய மனித உரிமை ஆணையத்தின் (NHRC) தலைவர் முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் அரசாங்கம் தொடர்ந்து ஒத்திவைப்பதில் அதிருப்தி அடைந்திருக்கலாம். இதில், இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) மற்றும் அரசாங்கம் இந்த ஒத்திவைப்பை நீக்கி இந்தியாவின் 'A' தகுதிநிலை குறித்த கேள்விகளைத் தெளிவுபடுத்தவும் ஈடுபட்டனர். நீதிபதி மிஸ்ரா ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். இருப்பினும், புதிய அரசாங்கம் அவரை மீண்டும் நியமிக்காவிட்டால், நிச்சயமற்ற நிலையில் வெளியேறும் முதல் இந்திய தேசிய மனித உரிமை ஆணையத்தின் (NHRC) தலைவராக அவர் இருப்பார். இதனால் அவரது நியமனம் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய தேசிய மனித உரிமை ஆணையத்தின் (NHRC) கையேடு
மனித உரிமைகள் தொடர்பான நீதிபதி மிஸ்ராவின் அணுகுமுறை பற்றிய ஒரு கண்ணோட்டம் இந்திய தேசிய மனித உரிமை ஆணையத்தால் (NHRC) வெளியிடப்பட்ட 'மனித உரிமைகள் 75' (Human Rights 75) என்ற கையேட்டில் குறிப்பிட்டுள்ள, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ (Azadi Ka Amrit Mahotsav-75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கையேடு வெளியிடப்பட்டது. மேலும் இந்த கையேட்டின் தொடக்கத்தில் "இந்தியாவின் ஆரம்பகால நாகரிகங்கள், சில அடிப்படை மனித உரிமைக் கொள்கைகளுக்கு அடிப்படைக் கட்டமைப்பை அமைத்தன" என்பதை குறிப்பிட முயன்றது. இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் போன்ற பண்டைய நூல்களைக் குறிப்பிடும் வகையில், இது ஆன்மிக உண்மைகளை ஆராய்வதை ஊக்குவிப்பதாக அது சரியாக வலியுறுத்தியது. மேலும், இதை குறிப்பிடும் வகையில், "நீதி மற்றும் நியாயத்தின் கருத்தானது பண்டைய இந்திய இலக்கியங்களுக்கும் முக்கிய ஆதாரமாக அமைகிறது. மனுதர்மம் (Manusmriti) அதன் காலத்தின் சமூக நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், குற்றத்திற்கு ஏற்ற தண்டனை உட்பட நீதியின் கொள்கைகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.
இருப்பினும், வரலாற்று ரீதியாக பின்தங்கிய மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு, மனுதர்மம் (Manusmriti) அவர்கள் எதிர்கொண்ட பாகுபாடு மற்றும் வன்முறையைக் குறிக்கிறது. இந்த வேதங்களில் மறுப்புகள் இருந்தபோதிலும், இந்திய தேசிய மனித உரிமை ஆணையத்தின் (NHRC) ஆவணத்தில் இது சேர்க்கப்பட்டால், இந்திய அரசியலமைப்பை உருவாக்க அர்ப்பணிப்புள்ளவர்களையும் வருத்தமடையச் செய்யலாம். இந்தச் சேர்க்கை ஒரு கவனக்குறைவா அல்லது நீதிபதி மிஸ்ராவின் பார்வையா? இதற்கு ஒரு விளக்கம் உதவியாக இருக்கும். இந்திய அரசியலமைப்பின் மதிப்புகள் மனுதர்மத்தின் (Manusmriti) மதிப்புகளுடன் மோதுகின்றன என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.
பாரிஸ் கோட்பாடுகளிலிருந்து மாறுபட்டதா?
தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியின் (Global Alliance of National Human Rights Institutions (GANHRI)) முடிவு மனுதர்மத்தைக் (Manusmriti) குறிப்பிடுவதன் மூலம் பாதிக்கப்படவில்லை. பாரிஸ் கோட்பாடுகளை இந்தியா பின்பற்றவில்லை என்று அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) அங்கீகாரத்திற்கான துணைக்குழுவால் (sub-committee on accreditation (SCA)) ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அந்த ஆண்டின் பிற்பகுதியில் அது நீக்கப்பட்டு, இந்தியாவின் 'ஏ' தகுதிநிலையைத் தக்க வைத்துக் கொண்டது.
இந்திய தேசிய மனித உரிமை ஆணையமானது (NHRC) 'ஏ'-க்கான தகுதிநிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இது தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியின் (GANHRI), மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் ஐக்கிய நாடு பணிகளில் பங்கேற்க அனுமதிக்கிறது என்று கூறியது. 1993ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரிஸ் கோட்பாடுகள், தேசிய மனித உரிமை நிறுவனங்களுக்கு (National Human Rights Institutions (NHRI)) சர்வதேசத் தரங்களை நிர்ணயித்தன. இதற்கான ஆணை, தன்னாட்சி, சுதந்திரம், பன்மைத்துவம், வளங்கள் மற்றும் விசாரணைக்கான அதிகாரங்கள் ஆகிய ஆறு முக்கிய அளவுகோல்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணி (GANHRI) முன்பு இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) இந்தியாவின் தரநிலைகளை பூர்த்தி செய்வதைக் கண்டறிந்து அதற்கு, 'ஏ' தகுதிநிலையை வழங்கியது. இருப்பினும், தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணிக்கு (GANHRI) இப்போது அது பற்றிய சந்தேகம் உள்ளது.
இது ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட மதிப்பீடு
தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணி (GANHRI) மதிப்பீட்டு செயல்முறையானது சக மதிப்பாய்வு செய்யப்பட்டது (peer-reviewed). எனவே, 2019 முதல் இந்தியாவின் மனித உரிமை நிலைமை குறித்த விமர்சனங்களை நிராகரித்த போதிலும், அரசாங்கம் அதை புறக்கணிக்க முடியாது. தற்போதைய நரேந்திர மோடி அரசானது, சிவில் உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உணர்வுப்பூர்வமாக கவலை தெரிவித்துள்ளார். மேற்குலகில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி இந்தியாவை ஆதரித்திருக்கிறார். இந்த அணுகுமுறை இந்தியாவில் பாராட்டப்பட்டுள்ளது. மனித உரிமைகளை ஆயுதமாக்குவதாக மேற்குலகம் மீதான விமர்சனங்கள் நியாயமானவை என்றாலும், விமர்சனங்கள் மோதலாக இருக்க வேண்டியதில்லை. பொதுவாக, நாட்டில் இராஜதந்திரத்தின் செயலானது தர்க்கத்தையும் பகுத்தறிவையும் பயன்படுத்த வேண்டும். உறுதியாக இருப்பது கடுமையாக இருப்பது என்று அர்த்தமல்ல. மற்ற நாடுகளைப் போல இந்தியா முழுமையடையாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் இந்த அணுகுமுறைகள் பலவீனமாகவே காணப்படுகின்றன.
ஜெய்சங்கரின் இந்த அணுகுமுறையை, இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) அங்கீகாரத்திற்கான துணைக்குழுவுடன் (SCA) பயன்படுத்தியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால், அது வெளிப்படையாக வெற்றிபெறவில்லை என்பதை தற்போதைய ஒத்திவைப்பு காட்டுகிறது. ஆனால், இதில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது. இதில், இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) மீதான அரசாங்கத்தின் அணுகுமுறை. இந்திய தேசிய மனித உரிமை ஆணையத்தில் (NHRC) நியமனங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன மற்றும் காலியிடங்கள் காரணமாக சந்தேகங்கள் எழுகின்றன. இறுதியாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது நடவடிக்கைகளை பிரதிபலிக்க வேண்டும்.
விவேக் கட்ஜு ஓய்வு பெற்ற இந்திய வெளியுறவு சேவை அதிகாரி ஆவார்.