கோவிட் வைரஸின் புதிய FLiRT திரிபு என்றால் என்ன? அது கவலைப்படத்தக்கதா? - அங்கிதா உபாத்யாய், அன்னா தத்

 FLiRT திரிபு தடுப்பூசிகள், கடந்தகால நோய்த்தொற்றுகளிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கலாம். காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அதன் அறிகுறிகள் முந்தைய வகைகளைப் போலவே இருக்கும்.


கொரோனா தொற்றுநோயின் புதிய திரிபு KP.2, FLiRT என்றும் அழைக்கப்படுகிறது. இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென் கொரியாவில் அதிக கோவிட்-19 தொற்றுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில், இது நவம்பர் 2023 முதல் உள்ளது என்று இந்தியாவின் மரபணு வரிசைமுறை குழுவான (Indian SARS-CoV-2 Genomics Consortium (INSACOG))-இன் தரவுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் இதுவரை KP.2-இன் சுமார் 250 தொடர் வரிசைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.


கோவிட் -2 வைரஸின் KP.19 திரிபு என்ன?


KP.2 தொற்று JN.1 திரிபிலிருந்து வருகிறது. இது புதிய மாற்றங்களுடன் ஒரு வகையான ஓமிக்ரான் தொற்றாகும். KP.2-இன் மற்றொரு பெயரான FLiRT வைரஸ் என்று அழைக்கிறார்கள். ஏனெனில், இது எதிர்திரள்விகளைத் (ANTI BODIES) தடுக்க உதவும் இரண்டு பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.


மரபணு விஞ்ஞானி டாக்டர். வினோத் ஸ்காரியா (Dr. Vinod Scaria), இந்த பிறழ்வுகள் ஸ்பைக் புரதத்தில் (spike protein) உள்ள புள்ளிகளைக் குழப்பிவிடுகின்றன. அங்கு எதிர்திரள்விகள் (ANTI BODIES) வைரஸைப் பிடித்து நிறுத்துகிறது.  இதனால் புதிய தொற்று எதிர்திரள்விகளைக்  கடந்து செல்ல முடியும்.


இந்தியாவிலிருந்து KP.2 -ன் மரபணுத் தரவு என்ன காட்டுகிறது?


INSACOG-ஆல் ஆய்வு செய்யப்பட்ட 250 மரபணுக்களில் பாதிக்கும் மேற்பட்டவை மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. மொத்தம் 128 வரிசைகள். இந்த வரிசைகளின் அதிக எண்ணிக்கை மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்டது.


உலகளவில்  KP.2வை  வரிசைப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அனைத்து இன்ஃப்ளூயன்ஸா தரவையும் பகிர்வதற்கான உலகளாவிய முன்முயற்சிக்கு (Global Initiative on Sharing All Influenza Data (GISAID)) 29% கோவிட்-19 வரிசைகள் பதிவேற்றப்பட்டன.


இருப்பினும், நாட்டில் SARS-CoV-2-ன் முதன்மையான திரிபாக JN.1 தொடர்கிறது. மே 14 அன்று 679 பேர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஒருவர் இந்த தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.

KP.2 கடுமையான நோயை ஏற்படுத்துமா?


FLiRT தடுப்பூசிகள் மற்றும் கடந்தகால நோய்த் தொற்றுகளிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கிறது. இதன் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், சோர்வு மற்றும் வயிற்று பிரச்சினைகள் உள்ளிட்ட முந்தைய திரிபுகளைப் போலவே இருக்கும்.


நிபுணர்கள் FLiRT மீது ஒரு கண் வைத்திருக்கிறார்கள். ஆனால், அதிகம் கவலைப்படவில்லை. அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அனுராக் அகர்வால் (Dr. Anurag Agarwal) கூறுகையில், ‘பீதி அடையத் தேவையில்லை, ஏனெனில் இதுபோன்ற நோய் எதிர்த்து தப்பிக்கும் பிறழ்வுகள் இதற்கு முன்பு காணப்பட்டது’ என்கிறார்.


KP.2 மற்றொரு திரிபு, மற்ற திரிபுகளைவிட மக்களை நோய்வாய்ப்படுத்தும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்  (Centers for Disease Control (CDC)) கூறுகிறது.


இருப்பினும், KP.2 தொற்றுநோய்களை அதிகரிக்க முடியுமா?


FLiRT மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவுகிறது. மேலும் இது தொற்றுநோய்களின் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று டாக்டர் ஸ்காரியா எச்சரிக்கிறார். பாதிக்கப்பட்ட பலருக்கு கடுமையான அறிகுறிகள் இல்லாததால், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் இருக்கின்றனர். இதனால் வைரஸ் அமைதியாக பரவி வருகிறது. 


டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் சாவ்லா (Dr Rajesh Chawla), கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்துகிறார். குறிப்பாக, பலவீனமான நோயெதிர்ப்பு  சக்தி உள்ளவர்களுக்கு, மூச்சுக்காற்று மூலம் தொற்று எளிதில் பரவுகிறது.


வயதானவர்கள் கோவிட்-19-லிருந்து மிகவும் நோய் வாய்ப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். ஏனெனில், அவர்கள்  வயதாகும் போது  அவர்களது உடலில் பல்வேறு  மாறுபாடு ஏற்படுகிறது. அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது. பிற சுகாதாரப் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் வயதான நபர்கள் கடுமையான அபாயங்களை எதிர்கொள்கின்றனர். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக இதய நோய், நுரையீரல் நோய், நீரிழிவு நோய் அல்லது புற்றுநோய் போன்ற நிலைமைகளைக் கொண்டவர்கள், இளையவர்களைவிட கோவிட்-19-ஆல் கடுமையாக நோய்வாய்ப்படுவது அல்லது இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், அல்லது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்படைவார்கள். 


KP.2 நோய்த்தொற்றின் அறிகுறிகள் யாவை?


இந்தத்  திரிபு, மற்ற ஓமிக்ரான் வகைகளைப் போலவே, சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. டாக்டர்.ஸ்காரியாவின் (Dr. Scaria) கூற்றுப்படி, அது எவ்வாறு வெளிப்படுகிறது என்பதில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.


இந்தத் திரிபு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், மூச்சுத் திணறல் அல்லது மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடல் வலி, சுவாசிப்பதில் சிக்கல், சோர்வு, சுவை அல்லது வாசனை இழப்பு, தெளிவாக சிந்திப்பதில் சிக்கல் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகள் உள்ளன என்று டாக்டர் சாவ்லா (Dr. Chawla) விளக்கினார்.


இந்த அறிகுறிகள் இருந்தபோதிலும், டாக்டர் சாவ்லாவின் கூற்றுப்படி, மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் இயல்பைவிட அதிகமாக இல்லை என்றும் டாக்டர் சாவ்லா கூறினார்.


நோய்த்தொற்றை எவ்வாறு தடுப்பது?


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் பரவத் தொடங்கியதிலிருந்து, பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் அப்படியே உள்ளன. அவை இடைவெளியைப் பராமரிக்கவும் மற்றும் அனைத்து கோவிட்-19 வகைகளிலிருந்தும் பாதுகாக்க பொது இடங்களில் N95s அல்லது KN95s போன்ற நன்கு பொருத்தப்பட்ட முகக்கவசத்தை அணிந்திட வேண்டும் போன்றவை.


சிறந்த காற்றோட்டம் மற்றும் காற்று சுத்திகரிப்பான்களை வீட்டிற்குள் வைத்திருப்பது நோய்வாய்ப்படும் அபாயத்தையும் குறைக்கும். கோவிட் நோயால் உண்மையில் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், மற்றும் கோவிட் பரவும் இடங்களில் வசிப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.


கோவிட் -19 தடுப்பூசிகளின் ஊக்குவிப்பு ஊசிகள் (Booster Shots) நமக்குத் தேவையா?


இந்தியாவில் பெரும்பாலான கோவிட் -19 தடுப்பூசிகள் அசல் தொற்றைக்  குறிவைக்கின்றன.  டாக்டர் ஸ்காரியா "ஏப்ரல் பிற்பகுதியில், வைரஸின் JN.1 பதிப்பை புதிய தடுப்பூசிகளுக்கு பயன்படுத்த WHO பரிந்துரைத்தது, ஏனெனில் FLiRT அதனுடன் தொடர்புடையது. ஆனால் இந்திய தடுப்பூசிகள் JN.1 உடன் புதுப்பிக்கப்படவில்லை. எனவே பூஸ்டர்கள் இங்கு சரியாக வேலை செய்யாது." என்று குறிப்பிட்டார்.


டாக்டர் அகர்வால் (Dr Agarwal) மேலும் கூறுகையில், ‘பெரும்பாலான இந்தியர்களுக்கு ஊக்குவிப்பு ஊசிகள் தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஜே.என்.1 திரிபுடன் அவர்களுக்குத் தெரியாத பல நோய்த்தொற்றுகள் இருக்கலாம்’ என்றார்.




Original article:

Share: