பொது சுகாதாரத்திற்கான செலவினங்கள் மாநிலங்களால் அதிகரிக்கப்படுகின்றன, ஒன்றிய அரசால் அல்ல. -இந்திரனில்

 தொற்றுநோய்க்குப் பிறகு ஒன்றிய அரசின் சுகாதார செலவினங்கள் குறைந்துள்ளன. அதே நேரத்தில் மாநிலங்கள் தொடர்ந்து அதிகமாக செலவழித்து வருகின்றன. 


இந்தியாவில் சுகாதாரத்திற்கான பொதுச் செலவு வரலாற்று ரீதியாக குறைவாகவே உள்ளது. சமீபத்தில், பல சிந்தனைக் குழுக்கள் (think tanks) எப்போதும் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கும் சற்று அதிகமாக சுகாதாரத்திற்காக செலவழித்து வரும் இந்தியா, தற்போதைய ஆட்சியின் கீழ் 2%ஆக அதிகரித்துள்ளது என்று குறிப்பிடுகிறது. பொதுச் செலவு அதிகரிப்பின் பின்னணியில் ஒன்றிய அரசு இருப்பதாகச் சொல்வது சரியா? 

   

முதலாவதாக, பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா இன்னும் சுகாதாரத்திற்கு குறைவாகவே செலவிடுகிறது. இரண்டாவதாக, சுகாதார செலவினங்கள் அதிகரித்திருந்தாலும், அதில் பெரும்பாலானவை மாநிலங்களிடமிருந்து வருகின்றன, ஒன்றிய அரசிடமிருந்து அல்ல. மத்திய சுகாதார அமைச்சகம் சமீப காலமாக மாநிலங்களுக்கு குறைந்த நிதியையே வழங்கி வருகிறது. மேலும், மத்திய அரசு தேசிய சுகாதாரத் திட்டத்திற்கான (National Health Mission (NHM)) வரவு செலவு திட்டத்தைக் குறைத்து வருகிறது. அதே நேரத்தில், அரசு நிதியளிக்கும் சுகாதார காப்பீட்டு திட்டங்களுக்கு அதிக செலவு செய்தும் வருகிறது.


2021ஆம் ஆண்டில், பூட்டானின் சுகாதாரத்திற்கான தனிநபர் பொதுச் செலவு (per capita public spending on health)  இந்தியாவை விட 2.5 மடங்கு அதிகம் என்பதை விளக்கப்படம்-1 வெளிப்படுத்துகிறது. தனிநபர் சுகாதாரத்திற்காக இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாக இலங்கை செலவிடுகிறது. கூடுதலாக, பல பிரிக்ஸ் நாடுகள் (பழைய பட்டியலில் இருந்து) இந்தியாவை விட 14-15 மடங்கு அதிகமாக சுகாதாரத்திற்காக செலவழிக்கின்றன.


        கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பொது சுகாதார செலவினங்களில் அதிகரிப்பு இருந்ததை விளக்கப்படம்-2 காட்டுகிறது. இந்த அதிகரிப்பு முக்கியமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் இயக்கப்படுகிறது. தொற்றுநோய்க்குப் பிறகும், இந்த பிராந்தியங்கள் சுகாதாரத்திற்காக அதிக செலவு செய்தன. இந்த நீடித்த அதிகரிப்பு, குறிப்பாக அவற்றின் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கருத்தில் கொண்டு குறிப்பிடத்தக்கது. இதற்கு நேர்மாறாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதமாக ஒன்றிய அரசின் சுகாதார செலவினம் தொற்றுநோய்களின்போது மிதமாக மட்டுமே உயர்ந்தது. இருப்பினும், தொற்றுநோய் முடிந்த பிறகு இந்த செலவு குறைந்தது.


தொற்றுநோய்களின் போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக சுகாதார செலவினங்களில் அதிகரிப்பு இருந்தபோதிலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் எதிர்மறை மற்றும் குறைந்த வளர்ச்சி விகிதங்களின் காரணமாக ஓரளவு இருந்தது என்பதை விளக்கப்படம்-3 சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், பணவீக்கத்தை சரிசெய்யும்போது ஆரோக்கியத்திற்கான செலவினங்களில் உண்மையான அதிகரிப்பு பெரிதாக இல்லை.


  ஒன்றிய சுகாதார அமைச்சகத்திலிருந்து, மாநிலங்களுக்கு சுகாதார வளங்களை ஒதுக்கீடு செய்வது குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது. 2014 நிதியாண்டில், ஒன்றியத்தின் சுகாதாரச் செலவினங்களில் 75.9% மாநிலங்களுக்கு மாற்றப்பட்டது பற்றி விளக்கப்படம்-4-ல் காட்டப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance(NHM)) அரசாங்கத்தின் முதல் மூன்று ஆண்டுகளில், இந்த பங்கு பாதிக்கும் மேல், அதாவது 53.4% குறைந்துள்ளது. இது தொடர்ந்து குறைந்து, வரவு செலவு திட்ட மதிப்பீடுகளின்படி 2024 நிதியாண்டில் 43% ஆக குறைந்துள்ளது. இந்தப்போக்கு பொதுவாக மாநில அதிகார வரம்பின் கீழ் வரும் ஒரு துறையான சுகாதாரத்தில் நிதி ஆதாரங்களை மையப்படுத்துவதை நோக்கிய நகர்வைக் குறிக்கிறது.


  2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance(NHM)), ஒன்றிய அரசின் முக்கிய முயற்சியாகும். இருப்பினும், விளக்கப்படம்-5 இல் காட்டப்பட்டுள்ளபடி, கடந்த ஏழு ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான நிதி பெரும்பாலும் தேக்கமடைந்துள்ளது அல்லது குறைந்துள்ளது. 2014 நிதியாண்டுக்கும் 2019 நிதியாண்டுக்கும் இடையில், தேசிய ஜனநாயக கூட்டணி மீதான செலவு சராசரியாக 7.4% அதிகரித்துள்ளது. 2018 நிதியாண்டில் செலவினங்களில் அதிகளவில் அதிகரிப்பு இருந்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ஆகும். இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், உண்மையான சுகாதார செலவினங்களில் அடிப்படையில் சராசரியாக 5.5% குறைந்துள்ளது.


    ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)) மீது மோடி அரசாங்கத்தின் கவனம் அதன் பட்ஜெட் ஒதுக்கீடுகளில் தெளிவாகத் தெரிகிறது. ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) உட்பட பல்வேறு அரசு நிதியுதவி பெறும் சுகாதார காப்பீட்டு திட்டங்களுக்கான (government-funded health insurance (GFHI)) செலவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. FY15 மற்றும் FY20-க்கு இடையில், உண்மையான அடிப்படையில் செலவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 18% விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இந்தத் திட்டங்களை ஒன்றிய அரசு கணிசமாக ஊக்குவித்த போதிலும், செலவினங்களில் பெரும்பகுதியை மாநிலங்களே ஏற்கின்றன.


கோவிட்-19 தொற்றுநோய் இந்தியாவின் சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்களை வெளிப்படுத்தியது. பொது சுகாதாரத்திற்கு அதிகப் பணம் செலவழிக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. இந்த சிக்கல்களை எதிர்கொள்ள மாநிலங்கள் முன்வந்தாலும், நிதி வரம்புகள் இருந்தபோதிலும், ஒன்றிய அரசின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.




Original article:

Share: