பொலிவுறு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission (SCM)) : ஒரு பார்வை -டிகேண்டர் பன்வார்

 அரசாங்கம் பொலிவுறு நகரங்களை எப்படி வரையறுக்கிறது. பொலிவுறு நகரங்கள் திட்டம் கொண்டுள்ள இரண்டு முக்கிய அம்சங்கள் என்ன? இத்திட்டம் சிலரை விலக்குகிறது என்று பலர் நினைக்கிறார்கள். 74-வது அரசியலமைப்பு திருத்தத்தை சீர்மிகு நகரங்கள் திட்டம் மீறியதா?


பொலிவுறு  நகரங்கள் திட்டம் (Smart Cities Mission (SCM)) என்பது தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance (NDA-1)) அரசாங்கத்தின் ஒரு பெரிய திட்டமாகும். இந்த ஆண்டு, தேர்தல் வாக்குறுதிகளில் இந்த திட்டத்தைப் பற்றி எந்த குறிப்பும் இடம் பெறவில்லை. 


பொலிவுறு  நகரங்கள் திட்டம் (Smart Cities Mission (SCM)) என்றால் என்ன?


2009-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதிச் சரிவுக்குப் பிறகு 'பொலிவுறு  நகரங்கள்' (Smart Cities Mission) என்ற சொல் பிரபலமானது. பொலிவுறு  நகரங்கள் என்பது சிலிக்கான் பள்ளத்தாக்கைப் போலவே, நன்கு இணைக்கப்பட்ட விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், தகவல் தொடர்பு மற்றும்  கணினி கட்டமைப்பு கொண்ட நவீன நகரங்கள்ஆகும்.  இந்த  நகரங்கள் ஒரு அறிவுசார் நகரம் (intellectual city) என்று அழைக்கப்படுகிறது. இது மேம்பட்ட தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தை (Information and Communications Technology (ICT)) கொண்டுள்ளது.


தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல்  திட்டத்தின் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) மூலம் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட உலகளாவிய மாற்றங்களைத் தொடர விரும்பியது. பொலிவுறு  நகரங்கள் திட்டம், 25 ஜூன் 2015-இல் அறிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் நூறு நகரங்களை பொலிவுறு  நகரங்களாக மாற்றுவது நோக்கமாக கொண்டிருந்தது. இருப்பினும், பொலிவுறு  நகரங்கள் என்றால் என்ன என்பதை தெளிவாக விளக்கவில்லை. பொலிவுறு  நகரங்கள் என்பதற்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிவுறு  நகரம் என்ற சொல்  நகரத்திற்கு நகரம் வேறுபட்டது மற்றும் நாட்டிற்கு நாடு மாறுகிறது. இந்த மாறுபாடு நகரத்தின் வளர்ச்சி நிலை, மாற்றம் மற்றும் சீர்திருத்தத்திற்கான அதன் விருப்பம், கிடைக்கும் வளங்கள் மற்றும்  அந்த பகுதியில் குடியிருப்பாளர்களின் விருப்பத்தை பொறுத்தது.  இந்தியாவின் பொலிவுறு  நகரம் திட்டம் ஐரோப்பிய திட்டத்தில்  இருந்து வேறுபட்டது. இந்தியாவில், பொலிவுறு  நகரத் திட்டத்தைப் பற்றி ஒரு தெளிவான வரையறை இல்லை." 


பொலிவுறு  நகரங்கள் திட்டம் என்றால் என்ன?


பொலிவுறு நகரங்கள் திட்டம் இரண்டு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. முதலாவது பகுதி அடிப்படை வளர்ச்சி, இது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:

1. மறுவடிவமைப்பு (redevelopment), அதாவது நகர புதுப்பித்தல்.

2.மறுசீரமைப்பு (retrofitting), அதாவது நகரத்தை மேம்படுத்துதல்.

3. பசுமைக் களத் திட்டங்கள் (green field projects), அதாவது நகர விரிவாக்கம்.


இரண்டாவது பகுதி மேம்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நகர் முழுமைக்குமான தீர்வுகள் (pan-city solutions) ஆகும். இது ஆறு வகைகளை உள்ளடக்கியது:


1. மின் ஆளுமை.

2. கழிவு மேலாண்மை.

3. நீர் மேலாண்மை.

4. ஆற்றல் மேலாண்மை.

5. நகர்ப்புற இயக்கம்.

6. திறன் மேம்பாடு.


இந்த பணிக்கு சுமார் ₹2 லட்சம் கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. பொது-தனியார் கூட்டாண்மை (public-private partnerships (PPP))  இந்தத் திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 


இந்தப் பணி முதலில் 2020-ஆம் ஆண்டிற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த திட்டம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. மேலும், புதிய காலக்கெடு இப்போது ஜூன்-2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது. பணியின் செயல்திறனை உறுதிப்படுத்த, ஒரு புதிய ஆளுகை மாதிரி (new governance model) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாதிரியானது நாட்டின் வழக்கமான நகர நிர்வாக மாதிரிகளிலிருந்து வேறுபட்டது. இந்தப் பணியை வழிநடத்த சிறப்பு நோக்க வாகனம் (special purpose vehicle  (SPV)) உருவாக்கப்பட்டது. இந்த பணிகள்  சிறப்பு அதிகாரி அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) பிரதிநிதியால் வழிநடத்தப்படுகிறது. மற்ற முக்கிய பங்குதாரர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த SPV நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலுக்கு இந்த நிர்வாகக் கட்டமைப்பில் குறைந்தபட்ச பங்கு உள்ளது.


சிறப்பு நோக்க வாகனத்தின் (special purpose vehicle  (SPV))  நிலை என்ன?


நகர்ப்புற அமைச்சகத்தின் முகப்பில்  (Urban Ministry’s dashboard) ஏப்ரல் 26 வரையிலான தரவுகள் காட்டப்படுகிறது. 8,033 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தப் பணம் ₹2 லட்சம் கோடியிலிருந்து ₹1,67,875 கோடியாகக் குறைந்துள்ளது. இது 16% குறைவாகும். ₹65,063 கோடி மதிப்பிலான 5,533 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்றும், ₹21,000 கோடி மதிப்பிலான 921 திட்டங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன என்றும் முகப்பில் வெளிப்படுத்துகிறது.


ஜூன் 2024-வரை நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 10 நகரங்களில் 400 திட்டங்களை முடிப்பதற்கு இன்னும் சிறுது காலம் தேவைப்படலாம்.  அளிக்கப்பட்ட நிதியில்  சிறிய பகுதி 5%-க்கும் குறைவானது மட்டுமே பொது-தனியார் கூட்டாண்மை மூலம் வந்துள்ளது.


பொலிவுறு  நகரங்கள் திட்டம் (Smart Cities Mission (SCM)) எங்கே தடுமாறியது?


ஒவ்வொரு நகரமும் வித்தியாசமாக இருப்பதால், 100 நகரங்களை வளர்ச்சிக்காக தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் சில சிக்கல்கள் நீடித்தது. மேற்கு நாடுகளைப் போல் இல்லாமல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் இந்திய நகரங்களின் சூழ்நிலைகளை இந்தத் திட்டம் கருத்தில் கொள்ளவில்லை.


பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் சண்டிகர் (Chandigarh) முதல் தவணையாக ₹196 கோடியைப் பெற்றுள்ளது. பல திட்டங்களுக்கு பணம் செலவிடப்பட்டது. ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்கள், WI-FI மண்டலத்தை உருவாக்குதல் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் பிரிவு 43 என்ற ஒரு பகுதியில் கவனம் செலுத்தின.


மெக்கின்சி (McKinsey) இரண்டு முக்கிய அறிக்கைகளை வெளியிட்டது. இந்திய நகரங்கள் வாழத் தகுந்ததாக இருக்க 2030-ஆம் ஆண்டுக்குள் $1.2 டிரில்லியன் மூலதனச் செலவு தேவை என்று அறிக்கை கூறுகிறது. இந்தச் சூழலில், ஒன்பது ஆண்டுகளில் ₹1,67,875 கோடி $120 பில்லியன் குறைவாக உள்ளது. இது நகர்ப்புற இந்தியாவின் மொத்த தேவையில் 0.027% ஆகும். அதனால், இத்திட்டம் பெரிய அளவில் ஆதரவைப் பெறவில்லை.


பொலிவுறு நகரங்கள் திட்டம் சிறப்பு நோக்க வாகன மாதிரியைப் பயன்படுத்தியது. இந்த மாதிரியானது 74-வது அரசியலமைப்புத் திருத்தத்துடன் (74th Constitutional Amendment) ஒத்துப்போகவில்லை. பல நகரங்கள் இந்த நிர்வாகக் கட்டமைப்பை ஏற்கவில்லை. இந்த மாதிரி மிகவும் மேலிருந்து கீழாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். ₹100 கோடிக்கும் குறைவான வருடாந்திர  மதிப்பீடு கொண்ட ஒரு சிறிய மலைப்பாங்கான நகரம் ₹2,500 கோடி மதிப்பிலான திட்டங்களை முன்மொழிகிறது. நகரவாசிகள் இந்தத் திட்டங்களுக்கு போதிய ஆதரவளிக்கவில்லை.


உலக வங்கியின் (World Bank) கூற்றுப்படி, இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகையில் 49% பேர் சேரிகளில் (slums) வாழ்கின்றனர். பொலிவுறு  நகரங்கள் திட்டங்கள் ஏழைப் பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்வதற்கு  மட்டுமே வழிவகுத்தது. உதாரணமாக, தெருவோர வியாபாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


பொலிவுறு நகரங்கள் திட்டத்தின்  மற்றொரு முக்கிய பிரச்சினை நகர்ப்புறங்களில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதுவரை வெள்ளம் இல்லாத சில நகரங்கள் இப்போது இந்த சிக்கலை எதிர்கொள்கின்றன. உள்கட்டமைப்பு திட்டங்கள் இயற்கை நீர் வழித்தடங்களை அளித்தது மற்றும் வரையறைகளை சேதப்படுத்தியது இதற்கு முக்கிய காரணமாகும். 


திகேந்தர் சிங் பன்வார் சிம்லாவின் முன்னாள் துணை மேயர் மற்றும் கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினர் ஆவார்.




Original article:

Share: