இந்தியாவின் வாக்குச் சாவடிகள் எவ்வாறு செயல்படுகின்றன? -ரவி மிட்டல்

 இந்தியாவில்  மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகளில் திரைமறைவில் பல நடவடிக்கைகள் நடக்கின்றன. இங்குதான் இந்திய மக்கள் வாக்களிக்கின்றனர்.


தற்போதைய மக்களவைத் தேர்தலில் 96.8 கோடி மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இந்த வாக்காளர்கள் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்குகளை செலுத்தவுள்ளனர்.  இவை பரபரப்பான பெரிய நகரங்களிலும், மிகவும் தொலைதூர பகுதிகளிலும் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.


வாக்குச்சாவடிகள் அமைத்தல்: விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகள்


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of the People Act, 1951 (R.P.A.)) பிரிவு 25, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு (district election officer (DEO)) ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தை வழங்குகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்டத்தில் உள்ள அனைத்து  வாக்களிக்கக்கூடிய இடங்களின் பட்டியலைத் தயாரித்து அதனை வெளியிடுவார். 


சில விதிகளின் அடிப்படையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இந்த விதிகள் இதை உறுதி செய்கின்றன. வாக்காளர்கள் வாக்களிக்க இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நடக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடியும் குறைந்தது 20 சதுர மீட்டர் அளவுக்குள் இருக்க வேண்டும். அடிப்படையில், ஏராளமான வாக்காளர்கள் (1,500க்கும் மேற்பட்டவர்கள்) இருக்கும்போது, கூடுதல் வாக்குச் சாவடிகள் ஒரே இடத்தில் அமைக்கப்படும். நகரங்களில், ஒரு கட்டிடத்தில் நான்கு வாக்குச் சாவடிகள் வரையிலும், கிராமப்புறங்களில் இரண்டு வாக்குச் சாவடிகள் வரையிலும் தேர்தல் நடத்தலாம்.  300 வாக்காளர்களுக்கு மேல் உள்ள கிராமத்திலும் ஒரு வாக்குச்சாவடி இருக்க வேண்டும்.


இந்த விதிகள் மாறக்கூடியவை. உதாரணமாக, ஒரு பகுதியை சென்றடைவது கடினம் என்றால், 300-க்கும் குறைவான வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடி அமைத்து தர வேண்டும். கரடுமுரடான பகுதிகளில், இது மிகவும் அவசியம். உதாரணமாக, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மாலோகம் வாக்குச்சாவடி ஒரு வாக்காளர் வாக்களிக்க அமைக்கப்பட்டிருந்தது.  


ஒரு வாக்குச்சாவடியில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், கூடுதல் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும். இவை ஒரே கட்டிடத்தில் அமைக்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில், ஒரு கட்டிடத்தில் நான்கு வாக்குச்சாவடிகள் வரை இருக்கலாம். கிராமப்புறங்களில், ஒரு கட்டிடத்தில் இரண்டு வாக்குச்சாவடிகள் வரை இருக்கலாம்.


வாக்குச்சாவடிகள்  மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்யப்படுகின்றன. வழக்கமாக வாக்குச்சாவடிகள் அரசாங்க கட்டிடங்களில் அமைக்கப்படுகின்றன. வேறு வழியில்லை என்றால் மட்டுமே தனியார் கட்டிடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேவைப்பட்டால், உரிமையாளரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் தனியார் கட்டிடங்களைப் பயன்படுத்தலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 160-இன் (Section 160) கீழ் தேவைப்பட்டால் குறிப்பிட்ட இடத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தலாம்.


வாக்குச் சாவடிகளின் பட்டியல் அவ்வப்போது சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலின் வருடாந்திர திருத்தங்களின் போது இது நிகழ்கிறது. உள்ளூர் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்களின் பரிந்துரைகளுடன் வரைவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம்  இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, அது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுடன் பகிரப்படுகிறது. 


தளவமைப்பு மற்றும் சில வசதிகள்


வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைக்கப்பட்டு இருக்கும். ஒரே ஒரு கதவு இருந்தால், மூங்கில் மற்றும் கயிறுகள் போன்ற தற்காலிக தடுப்புகள் தனித்தனி பாதைகளை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. வாக்குப்பெட்டி ஒளிபுகா நெளி நெகிழித் தாள்கள் (opaque corrugated plastic sheet) அல்லது எஃகு சாம்பல் நெகிழ்வுப் பலகை  (steel grey flex board) போன்ற ஒளிபுகா பொருட்களால் ஆனது. இது குறைந்தது 24 அங்குல நீளம், 24 அங்குல அகலம் மற்றும் 30 அங்குல உயரம் கொண்டது. தனியுரிமையை பாதுகாப்பதற்காக இந்தப் பெட்டி ஜன்னல் மற்றும் கதவுகளிலிருந்து விலகி  வைக்கப்பட்டிருக்கும்.

 

தேர்தலுக்கு முன், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அனைத்து அடிப்படை வசதிகள்  செய்யப்பட்டுள்ளதா என்று  அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். இதில் போதுமான நாற்காலிகள் மற்றும் மேஜைகள், நல்ல விளக்குகள், எங்கு செல்லவேண்டும் என்பதைக் காட்டும் அடையாளங்கள் மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி கழிப்பறைகள் உள்ளனவா என்று ஆய்வு செய்வார்கள். இதன் மூலம் வாக்களிப்பு சுமுகமாக நடைபெறுவதுடன், ஊழியர்கள் தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்ய முடியும்.

 

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிக்காக சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தச் சுவரொட்டிகள் முக்கியமான தகவல்களை வழங்குகின்றன. வேட்பாளர்களின், தேவையான அடையாள ஆவணங்கள் மற்றும் பிற விவரங்களை  பட்டியலிடுகின்றன.


கோடையின் உச்சக்கட்டத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் வெயிலை சமாளிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில், வெப்ப அலைகள் அதிகம் உள்ள வாக்குச் சாவடிகளைக் கண்டறிய இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) தரவுகளைப் பயன்படுத்துகின்றனர். கூடாரங்கள், விதானங்கள் அல்லது குடைகள், இருக்கைகள், மின்விசிறிகள் போன்ற குளிரூட்டும் சாதனங்கள், சரியான காற்றோட்டம், குடிநீர் மற்றும் அருந்தக்கூடிய மறுநீரேற்றத் திரவம் (Oral Rehydration Solution (ORS)) போன்ற பொருட்கள் இந்த வாக்குச் சாவடிகளுக்கு வழங்கபடுகிறது. 


கூடுதலாக, வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. வெப்ப பக்கவாதத்தின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது (‘Dos and Don’ts’) என்பதற்கான வழிமுறைகளுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களையும் அவர்கள் பெறுகிறார்கள். வெப்பம் தொடர்பான நோய்களை அடையாளம் காணவும் பதிலளிக்கவும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.


மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள் (Provisions for Persons with Disabilities (PwD)


நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். அவர்கள்  எளிமையாக வாக்களிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1:12-க்கு மேல் செங்குத்தான சாய்வு இல்லாத சாய்வு தளம் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு நிலையத்திற்கு அருகில் சக்கர நாற்காலிகள் மற்றும் நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களையும் வழங்க வேண்டும். இந்த வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்காமல் வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட நடமாட்டம் குறைபாடுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் இலவச போக்குவரத்து வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகள் தேர்தல் ஆணையத்தின் சக்சம் செயலியைப் (Saksham App) பயன்படுத்தி சக்கர நாற்காலிகளை முன்பதிவு செய்யவும், வாக்குச் சாவடியில் உதவி பெறவும் முடியும்.


தேசிய மாணவர் படை, தேசிய சேவைத் திட்டம் மற்றும் சாரணர் மற்றும் வழிகாட்டிகள் ஆகியவற்றின் தன்னார்வலர்கள் வரிசைகளை நிர்வகிக்கவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் உதவுகிறார்கள். பார்வையற்ற வாக்காளர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கண் பார்வையற்றோர் வாக்களிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீலம் மற்றும் வெள்ளை அடையாள உதவி கவுண்டர்கள், கழிப்பறைகள் மற்றும் பிற வசதிகளில் சர்வதேச அணுகல் சின்னத்தைப் பயன்படுத்தி தெளிவான அறிவிப்புப் பலகைகள் எளிதாக அடையாளம் காண உதவுகின்றன.


வாக்குச்சாவடிக்குள் மக்கள், வாக்குப்பதிவு நாள் கட்டுப்பாடுகள்


ஒரு வாக்குச்சாவடியின் உள்ளே, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஒரு நேரத்தில் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்குச்சாவடி முகவர் ஆகியோர் அடங்குவர். அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள், நுண்  பார்வையாளர்கள், ஒளிப்படக்காரர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் முக்கியமான வாக்குச்சாவடிகளுக்கான இணைய ஒளிபரப்பு ஊழியர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். கூடுதலாக, பார்வையற்றவராகவோ அல்லது பலவீனமாகவோ இருந்தால் ஒரு வாக்காளர் ஒரு குழந்தை அல்லது யாரையாவது உதவிக்கு அழைத்து வரலாம். தலைமை அதிகாரி மற்றவர்களை வாக்காளர் அடையாளம் காண அல்லது தேவைப்படும்போது உதவி செய்ய அனுமதிக்கலாம்.


ஒரு வாக்குச்சாவடிக் குழுவில் ஒரு தலைமை அலுவலரும், மூன்று வாக்குச்சாவடி அலுவலர்களும் இருப்பார்கள். முதல் வாக்குச்சாவடி அலுவலர் வாக்காளரின் அடையாளத்தை சரிபார்க்கிறார். இரண்டாவது வாக்குச்சாவடி அலுவலர் வாக்காளரின் இடது ஆள்காட்டி விரலில் அழியாத மையால் குறியிட்டு, வாக்காளர் பதிவேட்டை பராமரித்து வாக்காளர் சீட்டுகளை வழங்குவார். மூன்றாவது வாக்குச்சாவடி அலுவலர் வாக்காளர் சீட்டை சேகரித்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பிரிவை இயக்கி, வாக்காளரை வாக்களிக்க அனுமதிப்பதற்கு முன்பு சரியாக மை பூசப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கிறார்.


பிரிவு அதிகாரிகள் (Sector Officers) அல்லது மண்டல நீதிபதிகள் (Zonal Magistrates) சுமார் 10-12 வாக்குச் சாவடிகளை மேற்பார்வையிடுகிறார்கள். அவர்கள் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கும் தேர்தல் அதிகாரிக்கும் இடையிலான தொடர்பை உறுதி செய்கிறார்கள். நுண் கண்காணிப்பாளர்கள் (Micro Observers) அசம்பாவிதங்கள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து வாக்காளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்வார்கள். வாக்காளர் உதவி மையங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers (BLOs)) வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடியைக் கண்டறியவும், அகர வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைக் கண்டறியவும் உதவுகிறார்கள்.


போலி வாக்கெடுப்புகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பது போன்ற முக்கிய நிகழ்வுகளை டிஜிட்டல் புகைப்படக் கலைஞர்கள் ஆவணப்படுத்துகிறார்கள். தேவைப்படும்போது வாக்காளர்களை அடையாளம் காண கிராம அலுவலர்கள் உதவுகிறார்கள். பாதுகாப்பு பணியாளர்கள் சட்ட  ஒழுங்கை பராமரித்து தேர்தல் சீராக நடைபெறுவதை உறுதி செய்கிறார்கள்.


வாக்குப்பதிவு நாளன்று ஆண், பெண் வாக்காளர்களுக்கு தனித்தனியாக வரிசை அமைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்கள் முதலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். வாக்குச்சாவடியின் 100 மீட்டர் சுற்றளவில் அரசியல் பிரச்சாரம், ஒளிப்படக் கருவிகள், அலைபேசி பிரச்சாரம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 130-ன் கீழ் பிணை இல்லாமல் கைது செய்யப்படலாம். வேட்பாளர்கள் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு மேல் தங்கள் சாவடிகளை அமைக்கலாம். ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.


சிக்கலான வாக்குச்சாவடிகள் (Critical polling stations)


சிக்கலான வாக்குச் சாவடிகள் (Critical polling stations) என்பது பாதுகாப்பான மற்றும் நியாயமான வாக்குப்பதிவை உறுதி செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் வாக்குச் சாவடிகள் ஆகும்.


இந்த வாக்குச்சாவடிகள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அல்லது மோசமான சட்டம் ஒழுங்கு உள்ள இடங்களில் அமைந்திருக்கலாம். வழக்கத்திற்கு மாறாக அதிக வாக்காளர் வாக்குப்பதிவு (90%-க்கும் அதிகமானவை மற்றும் அந்த வாக்குகளில் 75%-க்கும் அதிகமானவை ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக) அல்லது மிகக் குறைந்த வாக்குப்பதிவு (10%-க்கும் குறைவாக) உள்ள வாக்குசவடிகளும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. இதில் கடந்த ஐந்தாண்டுகளில் தேர்தல் வன்முறைகள் நடந்த இடங்கள் அல்லது பல வராதவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இறந்தவர்கள் (Absentee, Shifted, and Dead (ASD)) வாக்காளர்களும் உள்ளனர்.


இந்த வாக்குச்சாவடிகளில், தேர்தல் நாளுக்குமுன் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. பொதுமக்களிடையே இந்த நடவடிக்கைகள் நம்பிக்கையை வளர்க்கிறது. இது வேட்பாளர்கள் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களிடமிருந்து வழக்கமான தரவுகளை சேகரிக்கிறது. சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட தடுப்புக் காவலையும் பயன்படுத்தலாம். வாக்குப்பதிவு நாளில், மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces (CAPF)) மற்றும் நுண் பார்வையாளர்களும் (Micro Observers) பயன்படுத்தப்படுகின்றனர்.




Original article:

Share: