வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிரான சவால்களை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது : அதன் சட்டப் போராட்டம் குறித்து… -வினீத் பல்லா

 ராம ஜென்மபூமி இயக்க பிரச்சனை உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ​​1991-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் அடைந்தபோது இருந்த அனைத்து மத தளங்களின் அங்கீகாரத்தையும் முடக்குகிறது.


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் (Places of Worship (Special Provisions) Act) சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து 2020-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள மனுக்களை புதன்கிழமை விசாரித்தது.


தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிக்காலத்தில் வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்யக் கோரி மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளைத் முதலில் ஒத்திவைக்க மறுத்த உச்சநீதிமன்றம், அவருக்குப் பின் வந்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதியாகக் கொண்டு விசாரணை நடத்தியது. டிசம்பர் 12, 2024 அன்று, நீதிபதிகள் கன்னா, பி வி சஞ்சய் குமார் மற்றும் கே வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாவட்ட நீதிமன்றங்களில் வழிபாட்டுத் தலங்களின் கணக்கெடுப்பு கோரும் எந்தவொரு புதிய வழக்குகளையும் பதிவு செய்வதை நிறுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை ஏற்கனவே உள்ள வழக்குகளில் உள்ள அனைத்து இடைக்கால அல்லது இறுதி உத்தரவுகளையும் நிறுத்தி வைத்தது.


புதன்கிழமை நீதிமன்றம் அரசியலமைப்பு கேள்வியைக் கவனிக்கவில்லை. ஆனால், ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள ஒரு  குடிமை  நீதிமன்றத்தில் அஜ்மீர் ஷரீஃப் தர்கா ஒரு இந்து கோயில் என்று கூறும் வழக்கின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கக் கோரிய கோரிக்கையை நிராகரித்தது. அதற்கான காரணம், நீதிமன்றம் இந்த வழக்குகளின் முழு நடவடிக்கைகளையும் நிறுத்தாமல், நடைமுறைக்கு வரும் உத்தரவுகளை மட்டுமே நிறுத்தி வைத்தது.


வழக்கின் பின்னணி


1991-ஆம் ஆண்டு சட்டம், ராம ஜென்மபூமி இயக்கத்தின் உச்சக்கட்டத்தின் போது, ​​செப்டம்பர் 1991-ல் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இது ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்த அனைத்து மத இடங்களின் அங்கீகாரத்தையும்  முடக்குகிறது.


சட்டத்தின் பிரிவு 3, எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் ஒரு மதம் அல்லது பிரிவிலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றுவதைத் தடை செய்கிறது. பிரிவு 4, அதன் மதத் தன்மை சுதந்திர தினத்தன்று இருந்ததைப் போலவே இருக்க வேண்டும் என்று கூறுகிறது. வழிபாட்டுத் தலத்தை மாற்றுவது தொடர்பான அனைத்து நிலுவையில் உள்ள சட்ட நடவடிக்கைகளையும் பிரிவு 4(2) ரத்து செய்தது. மேலும், நீதிமன்றங்கள் புதிய வழக்குகளை விசாரணை நடத்துவதைத் தடை செய்தது. அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி-பாபர் மசூதி தகராறு மட்டுமே விதிவிலக்காக இருந்தது.


சவால்


வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த முன்னணி மனு, சட்டத்திற்கு எதிராக  பல்வேறு  சவால்களை  முன்வைக்கிறது.


சட்டமன்ற அதிகாரம் குறித்து உபாத்யாய் கூறுகையில், "யாத்திரை" மற்றும் "பொது ஒழுங்கு" ஆகியவை அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் கீழ் மாநிலப் பாடங்களாக இருப்பதால்,  ஒன்றிய அரசுக்கு இந்தச் சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று வாதிடுகிறார். இதன் பொருள், இந்த தலைப்புகளில் நாடாளுமன்றத்தை அல்ல, மாநில சட்டமன்றங்கள் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், ஒன்றிய அரசு அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை மீறியுள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


மதரீதியான அத்துமீறல்கள் தொடர்பான தகராறுகளைத் தீர்க்க நீதிமன்றங்களை அணுகுவதைத் தடுப்பதன் மூலம், அரசியலமைப்பின் அடிப்படைப் பகுதியான நீதித்துறை மறுஆய்வை நாடும் குடிமக்களின் உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு ஆகஸ்ட் 15, 1947 என்று நிர்ணயிக்கப்பட்ட “இறுதி தேதியை "தன்னிச்சையானது மற்றும் பகுத்தறிவற்றது" என்று கூறி சவால் செய்கிறது. இந்த தேதி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு "காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பாளர்களால்" அழிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை மீட்டெடுக்கும் உரிமையை இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு வழங்க மறுக்கிறது என்ற வாதம் முன்வைக்கபடுகிறது. இது, சமத்துவம் மற்றும் மதத்திற்கான அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தீர்வைத் தடுக்கிறது. அதே, நேரத்தில் முஸ்லிம்கள் வக்ஃப் சட்டத்தின்கீழ் சொத்துக்களை உரிமைகோர அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.




பாதுகாப்பு தரப்பினர்


ஜமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போன்ற பல குழுக்கள் இந்த சட்டத்தை பாதுகாக்கும் வழக்கில் இணைந்துள்ளன. அவர்களின் வாதம் உச்சநீதிமன்றத்தின் 2019-ஆம் ஆண்டு அயோத்தி தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டது.


அந்தத் தீர்ப்பில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, மதச்சார்பின்மைக்கான அதன் உறுதிப்பாட்டை செயல்படுத்துவதற்கு மாநிலத்தின் மீது "குறைக்க முடியாத கடமையை" (non-derogable obligation) விதிக்கிறது என்று கூறியது. "பின்னோக்கிச் செல்வதை" (retrogression) அல்லது வரலாற்று மோதல்களுக்குள் மீண்டும்  செல்வதைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு  கருவியாக சட்டத்தை அது வகைப்படுத்தியது. "வரலாறும் அதன் தவறுகளும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஒடுக்குவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படக்கூடாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்க இந்தச் சட்டம் அவசியம் என்றும், இது போன்ற வழக்குகளை மீண்டும் விசாரிப்பது முடிவற்ற நீதிமன்ற வழக்குகளையும் வகுப்புவாத பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்று  எதிர்  தரப்பினர் கூறுகின்றனர்.


ஒன்றிய அரசின் வெளிப்படையான  அமைதி 


இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு அமைதி காத்துவருகிறது. இந்த மனு மீது உச்சநீதிமன்றம் முதன்முதலில் மார்ச் 2021-ல் அறிவிப்பாணை அனுப்பியது. 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டு முழுவதும் நடந்த விசாரணைகளில், சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. இருப்பினும், ஒன்றிய அரசு இன்னும் தனது முறையான நிலைப்பாட்டை பதிவு செய்யவில்லை.



நிலுவையில் உள்ளதன் விளைவு


அரசியலமைப்பு சவால் வழக்கு  உச்சநீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள நிலையில், உத்தரபிரதேச மாவட்ட நீதிமன்றங்கள் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா தொடர்பான வழக்குகளை விசாரித்தன. அவை கோயில்கள் என்று தீர்ப்பு வழங்கின.


இந்த நீதிமன்றங்கள் 1991-ஆம் ஆண்டு சட்டம் ஒரு மத இடத்தை மாற்றுவதைத் தடுக்கிறது. ஆனால், அதன் மத அடையாளத்தை தீர்மானிப்பதை நிறுத்தவில்லை என்று தீர்ப்பளித்துள்ளன. இந்தக் கண்ணோட்டம், ஞானவாபியில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (Archaeological Survey of India (ASI)) மேற்கொண்டதைப் போன்ற நீதிமன்ற உத்தரவின் பேரில் கணக்கெடுப்புகளை நடத்த அனுமதித்தது.


டிசம்பர் 12, 2024 அன்று உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவுக்குப் பிறகு, இந்த வழக்குகள் முடங்கின.


ஜனவரி 22, 2026 அன்று, மத்தியப் பிரதேசத்தில் உள்ள போஜ்ஷாலா-கமல் மௌலா வளாகத்தில் உள்ள ஒரு பிரச்னையை உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்தது. இது சட்டத்திற்கு எதிரான ஒரு சவாலுடன் அதன் முன் வந்தது. இந்த இடம் இந்திய தொல்பொருள் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருக்கும் ஒரு பிரார்த்தனைத் தலமாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியது.


வசந்த பஞ்சமி அன்று இந்துக்கள் வழிபடவும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் வெவ்வேறு நேரங்களில் வழிபடவும் ஒரு தற்காலிக உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. இது ஒரு வகையான நிலையைப் பராமரித்தது. மேலும், முக்கிய சட்டப் பிரச்சினை குறித்து மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் முடிவுசெய்ய உத்தரவிட்டது. வியாழக்கிழமை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளது.


Original article : SC resumes hearing challenges to Places of Worship Act: The legal battle, explained -Vineet Bhalla

Share: