பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் நிர்வாகத்தை மிகவும் சிக்கலானதாக மாற்றியுள்ளது. இன்றைய சூழலில் ஒரு திறமையான கண்காணிப்பு அமைப்பு என்பது, வரப்போகும் அபாயங்களைக் கண்டறிவதிலும், அதற்கேற்ப தகவமைப்புத் திட்டங்களை உருவாக்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் சுற்றுச்சூழல் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக, சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரு துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பை உருவாக்கும் நோக்கில் 2010-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், பத்து ஆண்டுகளுக்கும் மேலான அதன் செயல்பாடுகள் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன. மணல் கொள்ளை மற்றும் நதிநீர் மாசுபாடு தொடர்பான வழக்குகளில், இந்தத் தீர்ப்பாயம் அறிவியல் பூர்வமான தரநிலைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, அவற்றை நடைமுறைப்படுத்த விரைவாகவும் செயல்பட்டது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்தத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளும் தொழில்நுட்பத் தரவுகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ஆனாலும், அவை முறையாக அமல்படுத்தப்படாததால் அவற்றின் தாக்கம் குறைந்து போனது. அதே வேளையில், உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் பல முடிவுகள் சுற்றுச்சூழல் நலன்களைக் கருத்தில் கொள்ளவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஐந்தில் நான்கு வழக்குகளில் இத்தீர்ப்பாயம் திட்ட மேம்பாட்டாளர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பளித்துள்ளதாகச் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இவை தகுதியின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்ட முடிவுகள் என்று அரசாங்கம் கூறினாலும், 2016-ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட 13 நிபுணத்துவ உறுப்பினர்களில் ஒன்பது பேர் ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இது அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளையே மறுஆய்வு செய்யும் ஒரு அமைப்பில், 'நலன் சார்ந்த முரண்பாடுகள்' மற்றும் நிறுவன மாண்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது.
வளர்ச்சித் திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளான மக்கள் இடப்பெயர்வு, மாசுபாடு, நிலத்தடி நீர் குறைதல், பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் மோசமான கழிவு மேலாண்மை போன்றவற்றை வெறும் சட்டரீதியான விளக்கங்களால் மட்டுமே தீர்த்துவிட முடியாது; இதற்குப் தனித்துவமான நிபுணத்துவ அறிவு அவசியமாகும். இதற்காகவே, தேசிய பசுமைத் தீர்ப்பாய (National Green Tribunal (NGT)) சட்டத்தின்படி, இத்தீர்ப்பாயத்தில் 10 முதல் 20 வரையிலான நீதித்துறை உறுப்பினர்களும், அதே எண்ணிக்கையிலான நிபுணத்துவ உறுப்பினர்களும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT) நிபுணர் பணியிடங்கள் அரிதாகவே நிரப்பப்படுவதால், சட்டம் எதிர்பார்த்த தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாமலேயே அதன் அமர்வுகள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இத்தீர்ப்பாயத்தின் பெரும்பாலான நிபுணர்கள் இந்திய வனப்பாதுகாப்பு பணியிலிருந்து (Indian Forest Service (IFS)) வந்தவர்களாவர் முன்னாள் நிர்வாகிகளின் அனுபவம் பயனுள்ளதாக இருந்தாலும், இன்றைய சிக்கலான சுற்றுச்சூழல் சிக்கல்களைத் தீர்க்க விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள், பொறியாளர்கள், நகரத் திட்டமிடுபவர்கள் மற்றும் சட்ட அறிஞர்களின் பங்களிப்பும் மிக அவசியமாகும். இத்தகைய பல்வகைப்பட்ட நிபுணத்துவக் குறைபாடு, தீர்ப்புகள் சீரற்று வழங்கப்படுவதற்கும், அறிவியல்ரீதியான வாதங்களைச் சுதந்திரமாக ஆய்வு செய்யும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) திறன் குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழ்நிலை நிர்வாகத்தை முன்பைவிட மிகவும் சிக்கலானதாக மாற்றியுள்ளது. இன்றைய சூழலில், ஒரு திறமையான கண்காணிப்பு அமைப்பு என்பது அபாயங்களைக் துல்லியமாகக் கணிப்பதிலும், அதற்கு ஏற்ற தகவமைப்புத் திட்டங்களைத் தீட்டுவதிலும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். எனவே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவது என்பது வெறும் காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன் முடிந்துவிடாது என்றும் அதற்குப் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பும் அவசியம் என்கின்றனர். இந்த நாளிதழின் புலனாய்வு அறிக்கை, இக்குறைகளை நிவர்த்திசெய்து தீர்ப்பாயத்தைச் சீரமைப்பதற்கான ஒரு விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Original article : Mind the expertise gap in NGT.