இந்திய நகரங்களின் அமைதியான விடுதலை. -ஸ்ரீகாந்த் விஸ்வநாதன்

 நவீன உலகில் எந்த நாடும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல், உயர் பொருளாதார வளர்ச்சி, பெரிய அளவிலான வறுமை ஒழிப்பு மற்றும் உயிர்வாழும் தன்மையை அடைந்ததில்லை.


 ஒன்றிய நிதி குழுக்கள் இந்திய நகரங்களுக்கு மெதுவாக நிதியை விடுவித்து கொண்டிருக்கலாம்.  ஏனெனில், நிதி நிலை அறிக்கை அமர்வு அதன் வேலையை மறைக்கிறது. இந்த குழு ஒன்றிய அரசின் அனைத்து வருமானங்களை கணக்கில் கொண்டு பரிந்துரைகளை வழங்குகிறது. அவை ஐந்து ஆண்டுகள் செய்யல்பாட்டில் இருக்கின்றன மற்றும் அனைத்து அமைப்புகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இருப்பினும், எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசியல் வதந்திகள் வரும்போதுதான் அதன் பணிகள் பொது விவாதத்திற்கு வருகின்றன.


16-வது நிதிக் குழு இரண்டு வழிகளில் நகரங்களுக்கு மெதுவாக நிதியை விடுவித்துள்ளது. இந்தியாவின் நகரங்கள், மிக நீண்டகாலமாக ஒன்றிய மற்றும் மாநில 16-வது நிதிக் குழு நகரங்களை இரண்டு வழிகளில் விடுவித்துள்ளது. இந்தியாவின் நகரங்கள், நீண்டகாலமாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை நம்பியுள்ளன. அவை, அளவு மற்றும் நேரத்தில் கணிக்க முடியாதவை. நீர் அல்லது சுகாதாரம் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே அவை கிடைக்கின்றன. மாநில நிதிக் குழுவின் (State Finance Commission (SFC)) மானியங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (urban local governments (ULGs)) ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற செயல்பாட்டுச் செலவுகளைச் செலுத்த உதவுகின்றன. மேலும், ஒன்றிய நிதி குழுவின் (Union Finance Commission (UFC)) மானியங்கள் உள்கட்டமைப்பிற்கான நிதியின் ஒரே கணிக்கக்கூடிய ஆதாரமாகச் செயல்படுகின்றன.


2014-15 முதல் 2025-26 வரை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் நகர்ப்புற ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்கள் மூலம் (மாநிலங்கள் மற்றும்) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்த ஒதுக்கீடு ரூ. 3.12 லட்சம் கோடியாக இருந்தது. இந்த செலவினத்தில் 90 சதவீதம் 2016-17 முதல் 2023-24 வரை இருந்தது. அப்போது 8 ஆண்டுகளில் ஏழு ஆண்டுகள் CSS ஒதுக்கீடு FC ஒதுக்கீட்டைவிட 15 முதல் 400 சதவீதம் வரை அதிகமாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நகரங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்கள் கணிசமாகக் குறைந்துள்ளது; எனவே, நிதிக்குழு ஒதுக்கீடுகள் அதிகமாக உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்கள் மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் 16-வது நிதிக் குழு தங்கள் மானியங்களை உயர்த்தியுள்ளது. அவற்றின் ஒதுக்கீடு 15-வது நிதிக் குழு ஒதுக்கியதைவிட 2.3 மடங்கு அதிகமானதாகும்.


அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த அளவிலான நிதியை ஒன்றிய அரசு வழங்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. நகர்ப்புற உள்கட்டமைப்புக்கான அதன் உறுதிப்பாட்டை ஒன்றிய அரசு மீண்டும் வலியுறுத்துவதுபோல் தெரிகிறது. நிதி நிலை அறிக்கை உரைகள் நகர்ப்புற எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், நிதியை பற்றி பேசவில்லை. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நிதிநிலை அறிக்கை, 2017-19-ஆம் ஆண்டில் 1.9 சதவீதமாக இருந்தது 1 சதவீதத்திற்கு அருகில் குறைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மாநிலப்  பட்டியலில் இருப்பதால் இதை சரியான நடவடிக்கையாக கருதலாம். நிதிரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், ஒன்றிய அரசு அதன் எல்லைக்குள் உள்ள பட்டியல்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


16-வது ஒன்றிய நிதிக் குழு, 15-வது நிதிக் குழு வழங்கிய அடிப்படை நிதி உதவிகளுக்கான நிபந்தனைகளைத் தொடர்கிறது. அதில் ஒரு நிபந்தனை, மாநில நிதி குழுக்கள் சரியான நேரத்தில் அமைக்கப்பட்டு, அவற்றின் செயல் நடைமுறை அறிக்கைகள் (Action Taken Reports), அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் மாநில சட்டமன்றங்களில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULGs) தங்களது நிதி உதவிகளில் மிகவும் நம்பிக்கை வைக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில், மாநில நிதி குழுவின் நிதி உதவிகள் ஒவ்வொரு நபருக்கும் கணக்கில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு நிதிக்கு 3–4 மடங்கு அதிகமாக இருந்தது. இருப்பினும், மாநிலங்கள் அவற்றை சரியான நேரத்தில் அல்லது நம்பகமான மற்றும் தற்சார்பான தலைமையுடன் அமைப்பதில்லை அல்லது போதுமான பணியாளர்களை நியமிப்பதில்லை அல்லது நியாயமான பதவிக்காலத்தை வழங்குவதில்லை. முக்கியமான பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் அளவு குறைவாகவே உள்ளது. 15-வது நிதி குழு மாநில சட்டமன்றங்களில் மாநில நிதிக் குழுக்களின் பரிந்துரைகளை பரிசீலிப்பதில் சரியான அமைப்பு மற்றும் பொறுப்புணர்வை கட்டாயப்படுத்தியது. இது குழுவின்   வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மாநில நிதிக் குழுக்களை சீர்திருத்துவதில் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தாலும், 16-வது நிதிக் குழு இதை தொடரும் என்று தெளிவாகக் கூறியுள்ளது.


இந்தியாவின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை அரசாங்கத்தின் விருப்புரிமை மற்றும் சார்புநிலையின் பிடியிலிருந்து விடுவிப்பது, வளர்ந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதற்கு இது முக்கியமான நடவடிக்கையாகும். நவீன உலகில் எந்த நாடும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல், உயர் பொருளாதார வளர்ச்சி, பெரிய அளவிலான வறுமை ஒழிப்பு மற்றும் உயிர்வாழும் தன்மையை அடைந்ததில்லை.


எழுத்தாளர் தலைமை நிர்வாக அதிகாரி, ஜனகிரஹா.


Original article : The quiet liberation of Indian cities. -Srikanth Viswanathan

Share: