"மானியங்கள்" என்ற வார்த்தை நீக்கப்பட்டிருப்பது, பொது வருவாய்-நிதியளிப்பிலிருந்து கடன் சேவைக்கான துறைக்கு ஒரு ஆழமான கொள்கை மாற்றத்தைக் குறிக்கிறது.
இந்தியாவில் உள்ள தொழில்முறை அல்லாத உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு (UGC), எட்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு வழக்கமான தலைவர் இல்லாமல் "தற்காலிக" பொறுப்புடன் கூடிய தலைவர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. இது உயர்கல்வித் துறை மீதான அரசாங்கத்தின் அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.
இந்தத் தடையின் மீதான காரணம், நாடாளுமன்றத்தின் தற்போதைய குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒரு மசோதாவில் தெரிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய உயர்கல்வி ஆணைய (Higher Education Commission of India (HECI)) மசோதா, 2025 என்று அழைக்கப்படும் இந்த முன்மொழியப்பட்ட சட்டம் புதியதும் அல்ல, எதிர்பாராததும் அல்ல என்கின்றனர். இது, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (UGC) நிரந்தரத் தலைவர் ஏன் நியமிக்கப்படவில்லை என்பதையும் விளக்குகிறது: ஏனெனில் பல்கலைக்கழக மானியக் குழு முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த ஆணையம் அமைய வாய்ப்புள்ளது.
அரசாங்கம், உயர்கல்வி ஆணைய மசோதா (HECI Bill) தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் அதன் “இலகுவான ஆனால் இறுக்கமான” ("light but tight") ஒழுங்குமுறை என்ற எண்ணத்துடன் ஒத்துப்போகிறது என்று கூறுகிறது. இருப்பினும், தேசிய கல்விக் கொள்கை வரைவுக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்பே, 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு வரைவு உயர்கல்வி ஆணைய HECI மசோதா வெளியிடப்பட்டிருந்தது. இந்திய உயர் கல்வி ஆணைய HECI மசோதா 2018 என்று அறியப்பட்ட அந்த முந்தைய மசோதாவுக்கு, குடிமக்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் மாணவர் குழுக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்த பரவலான எதிர்ப்பின் காரணமாக, அரசாங்கம் அதை அப்போதைய நிலையில் கைவிட்டது, அது ஏழு ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி ஆணைய மசோதா (HECI) மசோதா என்றால் என்ன? மேலும், அரசுத் தரவுகளின்படி, உயர்கல்வித் துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதை ஏன் கடுமையாக எதிர்த்தனர்? பொதுவெளியில் உள்ள ஒரே பதிப்பான, இந்த மசோதாவின் 2018-ஆம் ஆண்டு பதிப்பு, 1956-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தை ரத்து செய்யவும், பொது, தொழில்நுட்ப மற்றும் ஆசிரியர் கல்விக்கான பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) UGC, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (All India Council for Technical Education) AICTE மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (National Council for Teacher Education) NCTE) மூன்று தனித்தனி ஒழுங்குமுறை அமைப்புகளுக்குப் பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையம் (HECI) எனப்படும் ஒற்றை அமைப்பை நிறுவவும் இந்த மசோதா முன்மொழிகிறது. இதன் நோக்கம், ஒழுங்குமுறையைக் குறைத்து, "குறைந்த அரசாங்கம், சிறந்த நிர்வாகம்" (less government, more governance) என்பதை ஊக்குவிப்பதாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், இப்போது மீண்டும் முன்மொழியப்படும் உயர்கல்வி ஆணைய (HECI) மசோதா 2025-ஆம் ஆண்டில் உண்மையில் இதுதான் சிக்கலில் உள்ளதா?
அதற்கான ஆதாரங்கள் வேறுவிதமாகவே சுட்டிக்காட்டுகின்றன. 2018-ஆம் ஆண்டின் வரைவு மசோதாவே, உயர்கல்வி ஆணையச் சட்டத்திற்கான (HECI) அரசின் நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரே அடிப்படை என்பதால், அந்த மசோதாவில் முன்மொழியப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களை ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.
முதலில், உயர்கல்வி ஆணையம் (HECI) என்பது 70 ஆண்டுகள் பழமையான பல்கலைக்கழக மானியக் குழுவை (UGC) வெறுமனே மாற்றுவது மட்டுமல்ல; இது உயர்கல்வி எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பதை அடிப்படையிலேயே மாற்றும் என்று கூறப்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழு கல்வித் தரங்களை அமைப்பது மற்றும் மாநில உயர்கல்வி நிலையங்கள் மூலம் நிறுவனங்களுக்கு நிதியை விநியோகிப்பது ஆகிய இரண்டிற்கும் பொறுப்பாக இருந்து வருகிறது. புதிய அமைப்பின்கீழ், நிதி ஒதுக்கீடு ஒழுங்குமுறையிலிருந்து பிரிக்கப்பட்டு, மத்திய அரசாங்கத்தால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும் சிறப்பு நோக்கத்திற்கான நிறுனத்தின் கீழ் (Special Purpose Vehicle (SPV)) கொண்டுவரப்படுவது போல் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக, உயர்கல்விக்கான பொதுநிதி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சித்தாந்த ரீதியாக உற்று நோக்குவதன் அடிப்படையில் வெகுமதிகள் மற்றும் அபராதங்களின் அமைப்பாக மாறும் அபாயம் உள்ளது.
இரண்டாவதாக: மாநில அரசு உதவி பெறும் கல்லூரிகள், குறிப்பாக பாஜக அல்லாத ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஏற்படும் தாக்கம், இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அனுபவத்தைப் பார்ப்பதன் மூலம் புரிந்து கொள்ளப்படலாம். வளங்களின் மீதான மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு, மாநிலங்கள் எவ்வளவு நிதியைப் பெறுகின்றன என்பதை நேரடியாகப் பாதிக்கும்.
மூன்றாவது: "மானியங்கள்" என்ற வார்த்தையை நீக்கியிருப்பது ஒரு பெரிய கொள்கை மாற்றத்தைக் குறிக்கிறது. அதாவது, பொது நிதியுதவியில் இருந்து கடன் அடிப்படையிலான நிதியுதவிக்கு மாறுவது. நிதிநிலை அறிக்கைகளில் பல்கலைக்கழக மானியக் குழு மானியங்களின் செலவில் உயர்கல்வி நிதி வழங்கல் ஆணையத்தின் (Higher Education Financing Agency (HEFA)) கடன் நிதியத்தை விரிவாக்குவது இந்த மாற்றத்தை குறிக்கிறது. உயர்கல்வி ஆணையத்தின்கீழ் (Higher Education Commission of India), கல்வி நிறுவனங்கள் மானிய அடிப்படையிலான ஆதரவில் இருந்து உயர்கல்வி நிதி வழங்கல் ஆணையத்தின் கடன்களை நோக்கித் தள்ளப்படும், இது அதிக கட்டணங்கள் மற்றும் பிறவருவாய் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.
நான்காவது: உயர்கல்வி ஆணையத்தின் அமைப்பு, தர நிர்ணயத்தின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாட்டை ஏறக்குறைய முழுமையாகக் காட்டுகிறது. இதன் 12 உறுப்பினர்களில் 9 பேர் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர். இதை "குறைந்த அரசாங்கம்" (less government) என்று அழைத்தால், அது மாநில அரசுகளையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் தெளிவாகப் பலவீனப்படுத்துகிறது.
ஐந்தாவது: இந்த ஆணையத்திற்கு "மோசமான செயல்பாட்டிற்காக" (non-performance) நிறுவனங்களை மூடும் அதிகாரமும் இருக்கும். ஆனால் உண்மையில் யார் இலக்கு வைக்கப்படுவார்கள்? 2014-15 முதல் அதிவேகமாக விரிவடைந்து, தற்போது 78.5 சதவீத கல்லூரிகளைக் கொண்டுள்ள தனியார் துறையா? அல்லது அகில இந்திய உயர்கல்வி ஆய்வின்படி 2021-22, இன்னும் மொத்த மாணவர்களில் ஏறக்குறைய மூன்றில் நான்கு பங்கினரை பதிவு செய்யும் பொதுப் பல்கலைக்கழகங்களா? அவற்றின் முக்கியப் பங்கு இருந்தபோதிலும், பொது நிறுவனங்கள் "திறமையற்றவை" என்று முத்திரை குத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், அவை நிதிப்பற்றாக்குறை, ஊழியர் பற்றாக்குறை மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன.
UGC முதல் NCTE வரையிலான நமது ஒழுங்குமுறை அமைப்புகள் இந்திய உயர்கல்விக்கான தரங்களையோ அல்லது நிதியையோ உறுதி செய்யத் தவறிவிட்டன என்பது உண்மைதான். ஆனால், இதை சரிசெய்வது என்பது அதிக தனியார்மயமாக்கலுடன் அதிக அதிகார மையப்படுத்தலாக இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. இவை இரண்டும் இந்தியா உயர்கல்வி ஆணைய மசோதாவின் (2025) நோக்கங்களாகத் தெரிகிறது.
எழுத்தாளர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளார்.
Original link:
HECI Bill signals a shift toward centralised, loan-driven higher education