மும்பை உயர்நீதிமன்றத்தின் கட்டணம் செலுத்துதல் தொடர்பான தீர்ப்பு, கல்வி உரிமை உத்தரவாதம் மற்றும் அதன் நோக்கத்தை எவ்வாறு வலியுறுத்துகிறது? -அமால் ஷேக்

 இந்த உத்தரவு, பள்ளிக் கல்வியின் தொடர்ச்சியிலிருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பதில் உள்ள சிக்கலைப் பிரிக்கிறது. பள்ளிகள் சட்டத்தின்படி கட்டணங்களை வசூலிக்க முடியும். இருப்பினும், ஒரு குழந்தையை தொடக்கக் கல்வியிலிருந்து நீக்கி கட்டாயப்படுத்த முடியாது.


கடந்த வாரம், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு தீர்ப்பளித்ததாவது, கட்டணம் செலுத்தாததற்காக 13 வயது மாணவனை வெளியேற்ற முடியாது என்று நீதிமன்றம் கூறியது. அந்தக் குழந்தை கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் வரும் வயதுக்குட்பட்டவர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ராஜ் வகோட் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, 7-ம் வகுப்பு மாணவர் ரூ.23,900 கட்டணம் செலுத்தத் தவறியதால், தனியார் பள்ளி வழங்கிய மாற்றுச் சான்றிதழை (transfer certificate (TC)) ரத்து செய்தது. மாணவனை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்வி உரிமை மாநில பள்ளி கட்டண ஒழுங்குமுறைச் சட்டங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பது குறித்து இந்தத் தீர்ப்பு முக்கியமானதாக அமைகிறது. இது தொடர்பான சட்டங்கள் கீழே குறிப்பிட்டுள்ளன, 


கேள்விக்குரிய சட்டங்கள்


சட்டக் கட்டமைப்பு (legal framework) இரண்டு சட்டங்கள் மற்றும் ஒரு அரசியலமைப்பு விதியை அடிப்படையாகக் கொண்டது.


அரசியலமைப்பின் பிரிவு 21-A, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது. இந்த உத்தரவாதம், குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 (Right of Children to Free and Compulsory Education Act (RTE)) மூலம் நிறைவேற்றப்படுகிறது.


இந்தச் சட்டத்தின் பிரிவு 3(1) இந்த வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையும் "அவரது தொடக்கக் கல்வியை முடிக்கும்வரை அருகிலுள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையைப் பெற வேண்டும்" என்று வழங்குகிறது.


சட்டத்தின் பிரிவு 16, மேலும் "ஒரு பள்ளியில் சேர்க்கப்படும் எந்தவொரு குழந்தையும் தொடக்கக் கல்வி முடியும் வரை எந்த வகுப்பிலும் தடுத்து வைக்கப்படவோ (held back) அல்லது பள்ளியிலிருந்து வெளியேற்றப்படவோ (expelled from school) கூடாது" என்று கூறுகிறது.


தனித்தனியாக, மகாராஷ்டிரா கல்வி நிறுவனங்கள் (கட்டண ஒழுங்குமுறை) சட்டம்-2011, (Maharashtra Education Institutions (Regulation of Fee) Act) தனியார் உதவி பெறாத பள்ளிகள் எவ்வாறு கட்டணத்தை வசூலிக்கலாம் என்பதை நிர்வகிக்கிறது. வசூலிக்கப்படாத கட்டணங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்ட மத்திய விதி பிரிவு 3A ஆகும். இந்தப் பிரிவு பின்னர் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. பள்ளிகளில் தாமதமாக கட்டணம் செலுத்துவதற்கு அல்லது கட்டணம் செலுத்தாததற்கு அபராத வட்டி வசூலிக்கவும் அனுமதிக்கிறது.

நீதிமன்றத்தின் முன் இருந்த முக்கியக் கேள்வி என்னவென்றால், நிதி அபராதம் விதிக்கும் இந்த அதிகாரத்தை ஒரு பள்ளி ஒரு மாணவனை நீக்குவதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுமா என்பதுதான்.

நீதிமன்றத்தின் முன் உள்ள சர்ச்சை


மாணவி 2023-2024-ஆம் ஆண்டில் ஃபாதர் ஆக்னஸ் பள்ளியில் (Father Agnes School) 6-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு 2024-2025-ஆம் ஆண்டில் 7-ம் வகுப்பிற்கு மாற்றப்பட்டார்.

இந்த நேரத்தில், அவரது தந்தை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதில், பள்ளியானது "குழந்தைகளை லாபம் ஈட்டுவதிலும் சுரண்டுவதிலும் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிப்பதன் மூலமும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புத்தகங்களைப் பயன்படுத்துவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


இந்தக் குற்றச்சாட்டுகளை பள்ளி மறுத்தது. தந்தை "அரசியல் ஆதாயம்" தேட முயற்சிப்பதாகவும், அவர் பொய்யான புகார்களைப் பதிவு செய்ததாகவும் கூறியது. மேலும் "தனது மகளுடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்" என்றும் பள்ளி தரப்பில் வாதிட்டது. கூடுதலாக, 6 மற்றும் 7-ம் வகுப்புகளுக்கான கட்டணம் ரூ.23,900 செலுத்தப்படவில்லை என்றும் பள்ளி கூறியது.


மார்ச் 2025-ல், பள்ளி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. நிலுவையில் உள்ள கட்டணங்கள் மூன்று நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், மாற்றுச் சான்றிதழ் (transfer certificate (TC)) வழங்கப்படும் என்று அது கூறியது. பின்னர், மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கப்பட்டது.


கட்டணம் செலுத்த முயன்றதாக தந்தை கூறினார். இருப்பினும், பள்ளி வளாகத்திற்குள் நுழைய தனக்கு தவறுதலாக, வலுக்கட்டாயமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.


பள்ளி இரண்டு முக்கிய வாதங்களை முன்வைத்தது. அது சி.பி.எஸ்.இ உடன் இணைக்கப்பட்ட ஒரு உதவி பெறாத சிறுபான்மை நிறுவனம் என்பதால் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) அதற்குப் பொருந்தாது. மேலும், கட்டண ஒழுங்குமுறைச் சட்டம் பணம் செலுத்தாததற்கான மீட்பு நடவடிக்கைகளை அனுமதித்தது.

நீதிமன்றம் சட்டத்தை எவ்வாறு விளக்கியது?


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (RTE) சட்டத்தின் பொருந்தக்கூடிய தன்மை குறித்து, சி.பி.எஸ்.இ (CBSE) உடன் இணைக்கப்பட்ட ஒரு உதவி பெறாத சிறுபான்மை நிறுவனமாக, அது சட்டத்தின் கட்டமைப்பிற்கு வெளியே உள்ளது என்று பள்ளி வாதிட்டது. உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்புகளை நம்பி, சிறுபான்மை உதவி பெறாத நிறுவனங்கள் நிர்வாக சுயாட்சியைத் தக்கவைத்துக்கொள்கின்றன என்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (RTE) சட்ட ஆட்சியின்கீழ் செயல்பட கட்டாயப்படுத்த முடியாது என்றும் அது சமர்ப்பித்தது.


பள்ளியின் சொந்த ஒழுங்குமுறை பதிவுகளை சரிபார்த்து உயர்நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை ஆய்வு செய்தது.


2007-ம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசு தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate) வழங்கியது என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தச் சான்றிதழ் பள்ளியை சி.பி.எஸ்.இ பிரிவை நடத்த அனுமதித்ததுடன், அது ஒரு நிபந்தனையுடன் வந்தது. மகாராஷ்டிரா அரசு நிர்ணயித்த விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பள்ளி பின்பற்ற வேண்டும். அது "2009-ம் ஆண்டின் சட்டத்தின் விதிகள் பொருந்தும்" என்பதைக் குறிக்கும் ஏப்ரல் 2022 ஒப்புதல் கடிதத்தையும் ஆய்வு செய்தது.


2022-ம் ஆண்டு ஒப்புதல் "கட்டாயத்தின் கீழ்" பெறப்பட்டது என்று பள்ளி வாதிட்டது. எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் பள்ளி இந்த ஒப்புதலை சவால் செய்யவில்லை என்று நீதிமன்றம் பதிவு செய்தது. இரண்டு தகவல்தொடர்புகளையும் ஒன்றாகப் படித்த நீதிமன்ற அமர்வு, நிர்வாகம் இணைப்புச் சலுகையின் பலனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில், அதனுடன் வரும் பொறுப்புகளை நிராகரிக்கமுடியாது என்றும் அது கூறியது.

இந்த நிலைப்பாட்டை "நியாயமற்றத் தன்மை மற்றும் தன்னிச்சையான நடவடிக்கையின் ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு" என்று கூறி, நிர்வாகம், ஒரே நேரத்தில் "இரண்டு முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுக்க முடியாது" என்று அது கூறியது.


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (RTE) சட்டம் பொருந்தும் என்று கருதப்பட்டவுடன், பிரிவு 16 தீர்க்கமானதாக மாறியது. மாணவருக்கு 13 வயதால், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (RTE) சட்டப் பிரிவின்கீழ் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமல்ல, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தப் பாதுகாப்பு வயதை அடிப்படையாகக் கொண்டது.


கட்டண வசூல் தொடர்பாக, மகாராஷ்டிரா கல்வி நிறுவனங்கள் (கட்டண ஒழுங்குமுறை) சட்டம்-2011-ன் (Maharashtra Educational Institutions (Regulation of Fee) Act) பிரிவு 3A நிதி அபராதங்களை அனுமதிக்கிறது என்று நீதிமன்றம் கூறியது. இது வெளியேற்றத்தை அனுமதிக்காது.


இந்த உத்தரவு இரண்டு பிரச்சினைகளை தெளிவாகப் பிரிக்கிறது. ஒன்று செலுத்தப்படாத கட்டணங்களை (unpaid fees) வசூலிப்பது. மற்றொன்று பள்ளிப்படிப்பைத் தொடர குழந்தையின் உரிமை (child’s right to continue schooling) ஆகும். பள்ளிகள் சட்டத்தின்படி கட்டணங்களை வசூலிக்கலாம். இருப்பினும், கட்டணத்தை அமல்படுத்துவதற்காக ஒரு குழந்தையை தொடக்கக் கல்வியிலிருந்து அவர்கள் நீக்க முடியாது.


Original article : How Bombay HC ruling on fee payment highlights Right to Education guarantee, its scope?. -Amaal Sheikh

Share: