நிலையற்றத் தன்மையின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் எரிசக்தி விலைகளில் கடுமையான உயர்வு ஆகும். பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) ஒரு வாரத்தில் அதன் விலைகளில் 10 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏதேனும் ஏற்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் பல ஆண்டுகள் உச்சத்தை எட்டியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இது உலகின் எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இந்த இராஜதந்திர பாதை நீண்டகாலத்திற்கு மூடப்பட்டிருந்தால், கச்சா எண்ணெய் விலைகள் மேலும் உயரக்கூடும். இதுபோன்ற சூழ்நிலை இந்திய ரூபாயை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.
இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவைகளில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதன் தாக்கங்கள் இந்தியாவைப் பொறுத்தவரை, விளைவுகள் கடுமையானவையாக இருக்கும். பலவீனமான ரூபாய் மதிப்பு, அதிகரித்துவரும் இறக்குமதி செலவுகள், அதிகரித்துவரும் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பணவியல் கொள்கையின் மறுசீரமைப்பு சாத்தியக்கூறுகள் இப்போது பெரிய அளவில் உள்ளன. தொலைதூர புவிசார் அரசியல் மோதலாகத் தொடங்கியது, நாட்டிற்கு நேரடி பொருளாதார சவாலாக வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்திய நாணய மதிப்பு குறையும் போது, முதல் மற்றும் உடனடி பாதிப்பு இறக்குமதிக்கான செலவு ஆகும். கச்சா எண்ணெய், மின்னணு பாகங்கள், உரங்கள் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் ஆகியவை அடங்கும். இந்த பொருட்கள் அனைத்தும் அமெரிக்க டாலர்களில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இதனால், டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு பலவீனமடையும் போது, அவற்றின் விலை மேலும் உயரும். பின்னர் சுமை படிப்படியாக வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு மாறுகிறது. இதனால், பணவீக்கம் உயர்கிறது மற்றும் மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்க அச்சுறுத்தல் இப்போது அதிகரித்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலையில் $1 அதிகரிப்பு இந்தியாவின் வருடாந்திர இறக்குமதி செலவை சுமார் $1.5–2 பில்லியன் உயர்த்துகிறது. இது மொத்த இறக்குமதி அளவைப் பொறுத்தது. இந்த அதிகரிப்பு நடப்புக் கணக்கு பற்றாக்குறையை (Current Account Deficit (CAD)) நேரடியாக விரிவுபடுத்துகிறது.
பணவீக்க தாக்கம் குறிப்பாக கவலை அளிக்கிறது. எண்ணெய் அதிக விலை கொண்டதாக மாறும்போது, போக்குவரத்து செலவுகள், உற்பத்தி செலவுகள், தளவாட செலவுகளும் அதிகரிக்கும். இந்த அதிக செலவுகள் இறுதியில் பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியாக இருப்பதால், இறுதியாக அவை நுகர்வோருக்கான சில்லறை விலைகளை உயர்த்துவதற்கு வழிவகுக்கும்.
மற்றொரு முக்கியமான பிரச்சினை வெளிநாட்டு மூலதனப் போக்கு (foreign capital flows) ஆகும். இந்திய சந்தைகளில் வர்த்தக நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் டாலர் அடிப்படையில் வருமானத்தை அளவிடுவதால், நிதிகள் திருப்பி அனுப்பப்படும்போது ரூபாய் மதிப்பு பலவீனமடைந்து அந்த வருமானத்தைக் குறைக்கிறது. இதன் விளைவாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) விற்பனை, பங்கு விலைகளில் அழுத்தம் மற்றும் சந்தை ஏற்ற இறக்கத்தையும் அதிகரிக்கிறது.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்தில், நாணய மதிப்பு தேய்மானம் (currency depreciation) என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. இது வர்த்தக சமநிலைகள், பெருநிறுவன வருவாய், பணவீக்க எதிர்பார்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் உணர்வை பாதிக்கிறது. இதனால், கொள்கை வகுப்பாளர்கள் குறுகிய மற்றும் அதிகரித்துவரும் நிச்சயமற்ற சூழலில் செயல்பட வேண்டும்.
ரூபாய் மதிப்பு பலவீனமடையும்போது இறக்குமதியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை நிலைகுலையச் செய்தாலும், அது ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்குகிறது. பல ஏற்றுமதி நிறுவனங்கள் டாலர்களில் தங்கள் வருவாயை ஈட்டும், அதே நேரத்தில், அவர்களின் செலவுகளில் கணிசமான பகுதியை ரூபாயில் செலுத்தும் நிறுவனங்களுக்கு, நாணய மதிப்பு தேய்மானம் ஒரு இயற்கையான பாதுகாப்பு (hedge) போல செயல்படுகிறது. ரூபாய் மதிப்பு பலவீனமாக மாறும்போது, அதன் மூலம் ஈட்டும் ஒவ்வொரு டாலரும் அதிக ரூபாயாக மாறுவதால் இது சாத்தியமாகிறது. ஆனால், நாணய இயக்கங்களில் சில நிலைத்தன்மை இருந்தால் இவை அனைத்தும் செயல்படும்.
இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்பச் சேவை (IT services) நிறுவனங்களானது, மருந்து ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறப்பு இரசாயன உற்பத்தியாளர்கள் முக்கிய பயனாளிகளில் அடங்குவர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிறுவனங்கள், பொதுவாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டாலர்கள் அல்லது யூரோக்களில் கட்டணம் (bill) மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரத்தில், ஊழியர் செலவுகள் மற்றும் பெரும்பாலான இயக்க செலவுகள் பெரும்பாலும் இந்தியாவிற்குள் செலுத்தப்படுகின்றன. எனவே, ஒரு சாதகமான ரூபாய், அளவுகளில் உடனடி மாற்றம் இல்லாமல் லாபத்தை அதிகரிக்கிறது. உலகளாவிய தேவை சீரற்றதாக இருக்கும் சூழலில், நாணய ஆதரவு சரியான நேரத்தில் வருவாய் இருப்பை வழங்க முடியும்.
குறிப்பாக தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை, மாற்று விகிதத்தின் பின்னடைவு ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறைவான வாடிக்கையாளர் செலவினங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) விரைவான முன்னேற்றங்களால் ஏற்படும் இடையூறுகளையும் கையாள்கின்றன. ரூபாய் மதிப்பிலான வருவாயை உயர்த்துவதன் மூலம் பலவீனமான ரூபாய் மதிப்பு, காலாண்டு நிதி முடிவுகளை உறுதிப்படுத்தவும், சமீபத்தில் சரிந்த பங்கு விலைகளுக்கு இது ஆதரவளிக்கவும் உதவும்.
மருந்து ஏற்றுமதியாளர்களும் (Pharmaceutical exporters) சிறந்த வருவாய் மூலம் பயனடையலாம். அமெரிக்கா போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில், லாபம் ஈட்டக்கூடும். உள்நாட்டுச் செலவுகள் நிலையானதாக இருந்தால், நீண்டகால உலகளாவிய ஒப்பந்தங்களைக் கொண்ட சிறப்பு இரசாயன நிறுவனங்கள் லாப வரம்புகள் அதிகரிக்கக்கூடும். பங்குச் சந்தைகளில், இத்தகைய நாணயத்தால் இயக்கப்படும் வருவாய்கள் பெரும்பாலும் துறைசார் சுழற்சியைத் தூண்டுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மற்ற துறைகளிலிருந்து ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு மாற்றலாம்.
அதிகரித்து வரும் பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது. விலை அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யிலிருந்து, மத்திய வங்கியின் கொள்கை நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கிறது. பணவீக்க எதிர்பார்ப்புகள் நிலையற்றதாக மாறுவதைத் தடுக்க, வட்டி விகிதங்களை நீண்டகாலத்திற்கு அதிகமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் அல்லது கூடுதல் விகிதங்களை உயர்த்துவதைக்கூட பரிசீலிக்கலாம். இத்தகைய நிலைப்பாடு, பெரிய பொருளாதார நிலைத்தன்மைக்கு அவசியமானதாக இருந்தாலும், தவிர்க்க முடியாமல் பொருளாதாரம் முழுவதும் கடன் செலவுகளை உயர்த்துகிறது.
மேலும், வட்டி விகிதங்கள் உயர்ந்தால், கடன் வாங்குவது மிகவும் விலை உயர்ந்ததாக மாறும். அதிக விலை கொண்ட கடனானது பொதுவாக நுகர்வோர் செலவினங்களைக் குறைத்து, இது புதிய முதலீட்டையும் குறைக்கிறது. இதன் விளைவாக, பொருளாதார வளர்ச்சியின் வேகம் மேலும் பலவீனமடையக்கூடும். பங்குச் சந்தைகள் வலுவான பணப்புழக்கம் மற்றும் வளர்ச்சிக்கான தெளிவான வாய்ப்புகளைச் சார்ந்துள்ளது. இந்த சந்தைகளும் அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடும். இறுக்கமான பண நிலைமைகள் நிறுவன வருவாய் மற்றும் மதிப்பீடுகளில் சுமையை ஏற்படுத்துவதால் அழுத்தத்தை உணரக்கூடும்.
கச்சா எண்ணெய் விலைகள் அதிகமாக இருந்தால் மத்திய வங்கி அதன் பணவீக்க கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். பிப்ரவரியில், ரிசர்வ் வங்கி சில்லறை பணவீக்கத்தை 2026 நிதியாண்டில் 2 சதவீதமாக இருந்த நிலையில் இருந்து 2.1 சதவீதமாக திருத்தியது. இப்போதைக்கு, அரசாங்கமோ அல்லது எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களோ சில்லறை எரிபொருள் விலையில் உயர்வு எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்தால், எரிபொருள் விலையில் தற்போதைய கட்டுப்பாடு நீண்டகாலம் நீடிக்காது. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கக்கூடும். பணவியல் கொள்கையில் முடிவுகளை எடுக்கும்போது மத்திய வங்கிக்கு இது மற்றொரு சிரமத்தை சேர்க்கும்.
உங்களுக்குத் தெரியுமா?
பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஈரான் மற்றும் ஓமன் இடையேயான குறுகிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz), உலகளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து நெருக்கடிப் பாதையாகக் (chokepoint) கருதப்படுகிறது. இது உலகளாவிய திரவ பெட்ரோலிய நுகர்வு மற்றும் உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (liquefied natural gas (LNG)) வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளுகிறது.
Original article : What is the current account deficit? -Khushboo Kumari, Roshni Yadav